தமிழுக்கு தன்னை அடையாளப்படுத்தி நின்ற மாமனிதன் -அமுது ஐயா

முல்லை அமுதன்


மிழுக்கு தன்னை அடையாளப்படுத்தி நின்ற மாமனிதன் அடைக்கலமுத்து எனும் புலவர் அமுது ஐயா.காலத்தை வென்றபடி தன் இனிய பண்பால் அனைவரையும் தன் வயப் படுத்தி வாழ்ந்தவர்.தமிழ் மீதான அளவு கடந்த காதலால் கற்றுத் தேர்ந்தவர் .இப்போதுதான் மணிமேகலை ராமநாதன் சிறிதர்பிச்சையப்பா போன்ற கலைஞர்களின் இழப்பு பற்றி கேட்டு துயருற்று நிற்கையில் ஐயாவிடம் காலன் வந்து நிற்கின்ற சேதி கிடைத்தது.

எனது கண்காட்சியை முதலில் பார்த்து பிரமித்தவர். உற்சகம் தந்தவர். நூலகம் பற்றிய கனவை என்னுள் முதலில் ஊன்றவைத்தவர். நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் இளவாலையை தன் சொந்த வீடாக பாவித்து இலக்கியப் பாலமாக நின்று உழைத்தவர்.இன்று நம்மிடையே இல்லை என்கிற போது வெறுமை நிலவுகிறது.அவரின் நகைச்சுவையான பேச்சு நினைவில் ரீங்காரமிட்டபடி அவரின் கவி வரிகளை உச்சாடனம் செய்ய வைக்கிறது.

'கண்களில் தாழை-நெஞ்சில் கனதி'
அவரின் கவித் தலைப்பே அவரின் ஆளுமைக்கு சான்று.
--வற்றாத செல்வத்தின்
வடிவே
உன் கவித்துவத்தில்
குற்றால அருவி
மிகக் குறைவே.
உன் பொருள் கொண்ட
பாவினை உய்த்தறிய-என்
உயிர் துவண்ட நிலைமைகள்
நிறையவுண்டு..
காற்றாய் மழையாய்
கடலாய்
வான் பரப்பிலும்
ஊற்றாய்நிறைந்த கனியே..
கவிமமணியே.
உதிரத்தின் வலுவை
உணர்ந்த்தாயா..
உறவுகளை தேற்ற
நீ தந்த பாக்களுள்
நானும்...
கவி மன்னா!
உனை பிரிந்தாள்
அன்னை நெடுந்தீவாழ்
அவல் வழித்தோன்றல்கள்
உன் வழி நடக்க
உன் புகழ் படைக்க
அருள் தா ஐயா.
-2008-புலவர் அமுது-
(நன்றி:காற்றுவெளி)

மனிதன் வாழும் போதே சிறப்புற வாழவேண்டும். இதற்கு கவிஞர் அடைக்கலமுத்து அமுதசாகரன் சிறந்த உதாரணம்.இளவாலை ஆலய வரலாறு.
அமுதுவின் கவிதைகள் (திருத்தியபதிப்பு இரண்டுபாகம்)
இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்.
அமுது ஐயாவின் அற்புதப்படைப்புகள்.

வற்றாத கவி வளம் நிறைந்த புலவர் தமிழின் மீதும் தமிழ்த் தேசியத்தின் மீதும் அளவு கடந்த பற்றுறுதியுடன் வாழ்ந்தார்.அவரின் நூலகள் சிறந்த உதாரணம்.கடவுள் பக்தி நிரம்பப் பெற்றவர்.அறிஞர்களுடனான நட்பைப் பேணியவர்.பேசும் போதே தமிழ் ஊறும் பிறரை நேசிப்பதில் முன்னிற்பவர். சிறப்பானவர்களை கௌரவப்படுத்துவதில் வல்லவர். ஐ.பி.சி வானொலியில் இவர் தொடர்ந்து ஆற்றுகின்ற தமிழ் அறிஞர்களைப் பற்றிய உரை பலராலும் பாராட்டப்படுகின்றது நெடுந்தீவைப்பிறப்பிடமாகக் கொண்ட கருணாகரன் தம்பிமுத்துவுக்கும், அப்பாபிள்ளை சேதுப்பிள்ளை இருவருக்கும்,
15.09.1918 ல் பிறந்த கவிஞர் நாலாம் வகுப்புவரை நெடுந்தீவு கிழக்கு சென்சேவியர் வித்தியாசாலையிலும், ஐந்தாம் வகுப்பை யாழ்சென்சால்ஸ் மகாவித்தியாலயத்திலும், ஆறு தொடக்கம் எஸ்.எஸ்.சீ வரை கொழும்புத்துறை சூசையப்பர் சாதனா பாடசாலையிலும், தன் பாடசாலைக் கல்வியை முடித்தார்.

1935 -1938 வரை ஆசிரிய பயிற்சியை முடித்துக்கொண்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து உயர்கல்வியைப் பெற்றுக்கொண்டார். இவர் இளவாலையைச் சேர்ந்த ஆசிரியை சுவாம்பிள்ளை திரேசம்மாவை வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார்.
பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை, வித்துவசிரோன்மணி ந.சுப்பையாபிள்ளை, வித்துவான் வேந்தனார், புலவர் மணி இளமுருகனார், வித்துவான் கே.கே. நடராஐh, பேராசிரியர்கள் செல்வநாயகம், வித்தியானந்தன், சதாசிவம் , கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் முழுமையாகக் கல்வி; கற்றவர்.

இளஞர் போதினி, இளங்கதிர் போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். பதினேழு வயதில் எழுதத்தொடங்கிய இவர் வீரகேசரி, தினகரன், பாதுகாவலன் ஆகியவற்றின் செய்தியாளராகவும் இருந்துள்ளார். அப்போது பலரையும் கவரும் வண்ணம் சிறந்த கட்டுரைகளை எழுதியதனால் வாசகர்களிடம் இருந்து பெரும் வரவேற்பையும் பெற்றார். தமிழின் மீது ஏற்பட்ட பற்றால் பல கவிதைகளை நமக்குத் தந்தும் உள்ளார். இவருக்கு 'சொல்லின் செல்வன், புலவர்மணி, செந்தமிழ் தென்றல், முப்பணி வேந்தர், கவியரசர், பாவேந்தர், மதுரகவி, கலாபூசணம், கௌரவ கலாநிதி, சீவியகாலச்சாதனையாளர், கவிதைச்சுடர்' ஆகிய பட்டங்களுக்குச் சொந்தக்காரர். எனினும் அதியுயர் விருதாக
2002 நவம்பரில் இவரின் கல்வி, சமூக, சமயப் பணிகளை மதித்து பாப்பரசர் 2ம் அருளப்பர் சின்னப்பர் அவர்கள் 'செவாலியர்' விருது வழங்கிச் சிறப்பித்தார். 1959 ல் வித்துவான் பட்டம் பெற்ற இவர் பாடசாலை மாணவர்களுக்காக 'நவமணிவாசகம்' என்ற பாடசாலை நூல்களை ( 5, 6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கான) வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்ட நூல்கள்

1. மாதா அஞ்சலி (கவிதைகள்)
2. இவ்வழிச்சென்ற இனிய மனிதன் (மொழிபெயர்ப்பு)
3. காக்கும் கரங்கள் (சில்லாலை இன்னாசித்தம்பியின் வைத்திய ஆராய்ச்சி)
4. அமுதுவின் கவிதைகள்.
5. அன்பின் கங்கை அன்னை திரேசா.
6. மடுமாதா காவியம்.
7. இளவாலை ஆலய வரலாறு.
8. அமுதுவின் கவிதைகள் (திருத்தியபதிப்பு இரண்டுபாகம்)
9. இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்.
10. அமுது ஐயாவின் அற்புதப்படைப்புகள்.
'தமிழ்க் கங்கை இளவாலை அமுது-ஆய்வு'நூலும் வரவுள்ளதாக கூறியிருந்தார்

எனது நூலுக்கென'கவிமணி'க.த.ஞானப்பிரகாசம் பற்றி எழுதி தருவதாகக் கூறியிருந்தார்.
நகைச்சுவை ததும்ப பேசக்கூடிய இவருக்கென்றே நிறைய ரசிகர்கள் உண்டு.
23.02.2010 காலை 11.00 மணியளவில் அவரின் வாழ்வு முடிந்திருக்கிறது. நண்பர் சொன்ன சேதி என்னைப் போலவே அதிர்ச்சி தந்திருக்கும்.அண்மையில் தான் அவரின் நூல் அறிமுக விழா சிறப்பான முறையில் நடந்தேறியிருந்தது.சென்ற காலத்தில் அவருக்கான பிறந்த நாள் விழா கூட சிறப்பான பதிவாக்கப்பட்டிருக்கிறது. நல்லதொரு படைப்பாளியை இழந்து நிற்கும் குடும்பத்தாருடன் நாமும் கலங்கி நிற்கிறோ

அவரின் வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது.



mullaiamuthan_03@hotmail.co.uk