குழந்தைகள் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது...

தகவல்: கவிஞர்.இரா.இரவி


 

இந்த ஆண்டு சாகித்ய அகாதமி அகில இந்திய அளவில், இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட (சாகித்ய அகாதமியினாலும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் உள்ள குழந்தை இலக்கியப் படைப்புக்களுக்கு முதன்முறையாக விருது வழங்கியிருக்கிறார்கள்பால் ஸாஹித்ய புரஸ்கார் (சம்ஸ்கிருதம் அல்லது இந்தியை வெறுத்து ஆங்கிலத்தை வழிபடும்  தமிழர்களின் வசதிக்கு - BAL SAHITHYA PURASKAAR) என அழைக்கப்படும் குழந்தை இலக்கியத்துக்கான விருது இந்த ஆண்டு முதன்முறையாக அறிவிக்கப்பட்டு குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதியன்று டெல்லியில் வழங்கப்பட்டது.



தமிழ் மொழிக்காக குழந்தைகள் எழுத்தாளர் கமலவேலன் விருதைப் பெற்றார்அந்தோணியின் ஆட்டுக்குட்டி என்னும் இவருடைய குழந்தைகளுக்கான நாவலுக்கு இந்த ஆண்டின் விருது வழங்கப்பட்டுள்ளதுஇந்த விருதினை வாங்கும் முதல் தமிழ் படைப்பாளி என்னும் சிறப்பைப் பெறுகிறார் கமலவேலன்.



தூத்துக்குடிக்காரரான கமலவேலன் வசிப்பது திண்டுக்கல்சொல்லப்போனால் 1961ல் எழுதத் துவங்கிய இவருடைய எழுத்துப்பணி  இவர் படைப்புலகில் தன்னுடைய 50ம் ஆண்டினைத் துவங்கும் போது இந்த அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.   கண்ணன் மற்றும் பல இதழ்களில் குழந்தைகளுக்காக நிறைய எழுதியவர் கமலவேலன்முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக மட்டுமே தன்னுடைய படைப்புக்களை அர்ப்பணித்து இருக்கிற நல்ல மனம் கமலவேலனுக்கு இருக்கிறதுதன்னம்பிக்கை தந்த பரிசு, நம்பமுடியாத நல்ல கதைகள், மரியாதை ராமன் கதைகள், கம்ப்யூட்டரை வென்ற காரிகை, பாரத ரத்னாக்கள் மற்றும் பல குழந்தைகள் நாடகங்களையும் படைத்து இருக்கிறார்டாக்டர் நாராயணன், டாக்டர் அப்துல் கலாம் மற்றும் பல தலைவர்களின்  வாழ்க்கை வரலாற்றையும் குழந்தைகளுக்காக எழுதியிருக்கிறார்.