தெய்வத்திருமகள்

 

நடிப்பு:  சீயான் டாக்டர் விக்ரம்

இயக்கம்: திரு விஜய்

திரைவிமர்சனம்:  கவிஞர் இரா ,இரவி

இந்தப்படத்திற்கு தெய்வத்திருமகன் என்று முதலில் பெயர் சூட்டப்பட்டு ,வழக்குத் தொடுக்கப்பட்டு பின் தெய்வத்திருமகள் என்று பெயர் மாற்றப்பட்டது .ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றினாலும் அதுவும் படத்திற்குப் பொருத்தமாகவே உள்ளது .
 

இந்தப்படத்திற்காக இயக்குனர் விஜய் ,நடிகர் விக்ரம் ,நிலவாக நடித்துள்ள குழந்தை மூவருக்கும் தேசியவிருது உறுதியாக உண்டு .
 

விக்ரம் மன நலம்  குன்றிய கிருஷ்ணாவாக நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளார் . மன நலம்  குன்றியவர்களிடம் காட்ட வேண்டிய மனித நேயத்தை உணர்த்திடும் படம் .அன்பே வாழ்க்கை அறிவுறுத்தும் அற்புதமான   படம்.குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் .குறிப்பாக இன்றைய   இளைய தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய படம் .தரமான படம் வந்து நாட்கள் ஆகிவிட்டது வெட்டுக்குத்து ,குத்துப்பாட்டு என்ற இன்றைய  வழக்கமான திரைப்படங்களில் இருந்து மாறுபட்ட சிறந்த படம் .மன நலம்குன்றியவர்கள் மிகச் சரியாக சில விசயங்களில் உள்ளனர் என்பதை பல காட்சிகளில் படம் முழுவதும் உணர்த்தியுள்ள இயக்குனர் விஜயுக்குப் பாராட்டுக்கள்.
 

மிக நுட்பமாகப்   பதிவு செய்துள்ளார் ..குஞ்சுப்   பறவையைப் பூனை தின்னப் பார்க்கும் .பூனையை விரட்டிவிட்டு குஞ்சுப்   பறவையை எடுத்து அது இருந்த மரத்தின் மீது ஏறிச் சென்று கூ ட்டில் வைத்து விட்டு வரும் கிருஷ்ணாவின் மூலம் ,மன நலம்குன்றியவர்களின்  பறவை நேசத்தை உணர்த்துகின்றார் .பொய் பேச  மாட்டார்கள்  .பேசச் சொன்னாலும் மறுப்பார்கள் .அவசரச் சூழ்நிலை காரணமாக வழக்கு உரைஞர் சிவப்பு விளக்கு  எரியும் போது சாலையைக் கடந்து வர வற்புறுத்தும் போது வராமல் நின்று பச்சை விளக்கு வந்த பின் வரும் கிருஷ்ணாவின் மூலம் ,தவறுப் புரியும் சராசரி மனிதர்களின் கன்னத்தில் அரைகிறார் இயக்குனர் விஜய் . கிருஷ்ணாவை அடித்து வைத்து இருக்கும் வழக்கு உரைஞர் குழந்தைக்குக் காய்ச்சல்  இருப்பதுக் கண்டு  மருந்து வாங்கி வரும் மனிதநேயம் .மன நலம்குன்றிய கிருஷ்ணாவிடம் இருந்து பணத்தை திருடி   விட்டு ஓடிய திருடன்

வலைத் தட்டிக் கிழே விழுந்ததும் வலையை எடுத்துவிட்டு துக்கி விடுவது கண்டு திருந்தி திருடனே பணத்தைத் திருப்பித் தரும் காட்சி  நெகிழ்ச்சி .சாலையில் வரும் போது தெருவில் குழாயில் வீணாகக் போகும் தண்ணீரை மூடி சரி செய்வது ,இப்படி பல காட்சிகள் சொல்லிக் கொண்டேப் போகலாம் .
 

மன நலம்குன்றியவர்கள் கூட  சரியாக   வாழும் போது .மன நலம் குன்றாதவர்கள் சரியாக வாழுங்கள் என்று உணர்த்திடும் உன்னதத் திரைப்படம் .பணக்காரகளில் பலர் மனதநேயம் இன்றி உள்ளனர் என்பதைப் பறை சாற்றிடும் படம் .செல்வந்தரின் முதல் மகள் திருமணம் வேண்டாம் என்று சமூக சேவகியாக வாழ்ந்தவர் மன நலம்குன்றிய  கிருஷ்ணாவை மணக்க செல்வந்தர் எதிர்க்க வெளியே வந்து விடுகிறாள் .நிலா என்றப் பெண் குழந்தையைப் பெற்றுவிட்டு இறந்து போகின்றாள் .கிருஷ்ணா அன்பைப் பொழிந்து நிலாவை வளர்க்கின்றார்.பலவருடங்கள் கழித்து  நிலாவை பார்த்த செல்வந்தர் கிருஷ்ணாவிடம் இருந்து நிலாவைப் பிரிக்கிறார் .பாசப் போராட்டம்   ஓவியமாக மனதில் பதிகின்றது .
 

நடிகை அனுஷ்காவை ஆபசமாகவேக் காட்டி வந்த இயக்குனர்களின் கன்னத்தில் அரையும் வண்ணம்அனுஷ்கா. வழக்கு உரைஞராக மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .அனுஷ்காவிற்கு மனித நேயம் மிக்க நல்ல பாத்திரம் .பெண்மையின் மேன்மையை, திறமையை உணர்த்தும்   பாத்திரம். கிருஷ்ணா நிலாவிற்கு சூ,சாக்ஸ் வாங்கக் கடைக்கு சென்றபோது பணம் குறைவாக இருப்பதால் கடைக்காரர் தர மறுக்க ,அருகில் இருந்த மன நலம் குன்றிய கிருஷ்ணா நண்பர்கள் பணம் கொடுத்து உதவிடும் காட்சி நெகிழ்ச்சி . நடிகர் நாசர் சிறந்த நடிகர் என்பதை நிருபித்து உள்ளார் .தெய்வத்திருமகள் திரைப்படம் அல்ல இயந்திர மயமான மனிதர்களுக்கு பாடம் .இது போன்ற நல்ல படத்தை  வெற்றிப் பெறச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு .விக்ரம் மிக சிறந்த நடிகர் என்பதை மீண்டும்   மீண்டும்  நிருபித்து வருகிறார். .பாராட்டுக்கள் .






eraeravik@gmail.com