எனக்கு இல்லையாகல்வி (ஆவணத் திரைப்படம்)

 

இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார்

தயாரிப்பு: மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை

திரைவிமர்சனம்:  கவிஞர் இரா ,இரவி

குத்துப்பாட்டு படம் எடுத்து பணம் சேர்க்கும் சராசரி இயக்குனராக இல்லாமல் ,சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதுவது ,பேசுவது என்று மட்டும் நின்று விடாமல் ,மிகச் சிறந்த ஆவணத் திரைப்படம் இயக்கி நமது மனதில் இடம் பிடித்து உள்ளார் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார்.


உடலால் மட்டும் அல்ல உள்ளத்தாலும் உயர்ந்து நிற்கிறார்  இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் .தமிழகத்தின் கல்வி நிலை பற்றி முன்னாள் துணை வேந்தர் ,பேராசிரியர்கள் ,கல்வியாளர்கள் ,ஆசிரியர்கள் முற்போக்குச் சிந்தையாளர்கள் ,ஊராட்சி மன்றத் தலைவர்கள் ,பெற்றோர்கள் மாணவர்கள் ,மாணவிகள் என பலரிடமும் ,பல்வேறு ஊர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பயணப்பட்டு சந்தித்து உரையாடி   கருத்துக் கேட்டு ஆவணப்படுத்தி உள்ளார் .கடின உழைப்பை உணரமுடிகின்றது .மிக நேர்த்தியாக படமாக்கி உள்ள .இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் பாராட்டுக்குரியவர் .சமூகத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் அறிவு தாகத்துடன் இதுவரை யாரும் சொல்லாத ,ஊடகங்கள் காட்டாத தகவல்களை மிகத் துணிவுடன் பதிவு செய்து உள்ளார்

 

இந்தப்படத்தைத் தயாரித்து வழங்கி   உள்ள . மனித உரிமைக் கல்வி நிறுவனம் மதுரை பாராட்டுக்குரியது .திரு ஹென்றி டிபேன்   திரு பாரதி கிருஷ்ணகுமார் நண்பர் என்பதால் முழு சுதந்திரம் தந்து இயக்க வைத்து உள்ளனர் .இது படம் அல்ல பாடம் என்று எல்லாப் படத்தையும் சொல்வார்கள் .ஆனால் இந்தப்படம் உண்மையில் மக்களுக்கு பாடம் புகட்டும் உன்னதப் படைப்பு .தமிழகப் பள்ளிகளின் குறிப்பாக அரசுப் பள்ளிகளின் மிக மோசமான நிலையை அந்தந்தப் பள்ளிகளுக்குச் சென்று படமாக்கி யுள்ளனர் .யாரும் மறுக்க முடியாத கசப்பான உண்மைகளை தோலுரித்துக் காட்டி உள்ளார் .கட்டிடம் இல்லாத பள்ளிகள் ,கழிவறை இல்லாத   பள்ளிகள்  ,குடி நீர் வசதி இல்லாத . பள்ளிகள் , ஆசிரியர் இல்லாத . பள்ளிகள்  ,தலைமைஆசிரியர்  இல்லாத  பள்ளிகள்,ஒரு ஆசிரியர் மட்டும் உள்ள பள்ளிகள் இப்படி உள்ள பள்ளிகளுக்கு சென்று படமாக்கி உள்ளனர்.

 

கல்வியாளர்களின் உள்ளக் குமுறலை நன்கு பதிவு செய்து உள்ளனர் .அரசுப் பள்ளிகள் சரியாக கவனிக்கப் படாததால்தான் தனியார் பள்ளிகள் கொளுத்து வருகின்றனர் .பகல் கொள்ளை அடிக்கின்றனர் .அரசு ஏற்க வேண்டிய  கல்வித்துறை தனியார் வசமும் தனியாரிடம் இருக்க வேண்டிய மதுக் கடைகள் அரசு வசமும் இருக்கும்  அவல நிலைக்கு பலரும் வருத்தத்தைப் பதிவு செய்து உள்ளனர் .ஆசிரியர்கள் ஊதியத்தில் மிகப் பெரிய வேறுபாடு ஒருவருக்கு 6000 மற்றவருக்கு 60000 இந்த முரண்பாடு களைய வேண்டும் என்றக் கருத்தையும் பதிவு செய்து உள்ளனர் .அன்று காமராசர் காலத்தில் பணக்காரகள் சேவை செய்ய கல்வித்துறைக்கு வந்தனர்.இன்று பணக்காரகள் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகவே கல்வித்துறைக்கு வந்து உள்ளனர் .இந்த அவலம் நீங்க வேண்டும் .நீதிபதிகள் சொன்ன தொகை வாங்காமல் இஸ்டம் போல கூடுதலாக வாங்கி உள்ளனர் .இதைத் தடுக்க வேண்டிய கல்வி அதிகாரிகள் வாய் மூடி உள்ளனர் .

 

 பள்ளிகளில் தொடரும் தீண்டாமை கொடுமையைப் படமாக்கி உள்ளனர் .உயந்த புனிதமான ஆசிரிய பணியில் சில வில்லன்களும் உள்ளனர் .சாதி ஆதிக்க வெறி பிடித்தவர்களும் உள்ளனர் .சேரியில் இருந்து வரும் குழந்தைகளையும் மலை வாழ் சாதிக்குழந்தைகளையும் நீங்கள் எல்லாம் ஏன்படிக்க வருகிறிர்கள் .வந்தால் தேர்வில் தோல்வி அடையச் செய்வோம் என்று மிரட்டுவது .வேண்டும் என்றே தோல்வி அடையச்  எய்து பள்ளிக்கு வரவிடாமல் செய்வது இப்படி பல கொடுமைகள் தமிழகப் பள்ளிகளில் நடந்து வருவதை ஆதாரத்துடன் பதிவு செய்து உள்ளனர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி குழந்தைகளை கழிவறை சுத்தம் செய்ய வைத்தல் ,சிறுமியின் கண்ணில் குச்சியால் அடித்து பார்வை பறித்தல் என மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக நடந்து வரும் அவலம் காண பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீர் வந்து விடுகின்றதுபள்ளியை விட்டு நின்று விட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பி கூலி வாங்கி ருசி கண்ட பெற்றோர்கள் தொடர்ந்து குழந்தைத் தொழிலாளி ஆக்கிடும் கொடுமை .நமது அரசியல் சட்டம் குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி இலவசமாக வழங்கிப் பட வேண்டும் என்று உரிமை தந்து உள்ளது .ஆனால் நாட்டில் நடைமுறையில் இன்னும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்ற கசப்பான உண்மையை படமாக்கி உள்ளனர் .இது ஆவணப் படம் என்பதால் யாரும் நடிக்க வில்லை உண்மை .உண்மை தவிர வேறு இல்லை.

 

படம் தொடங்கும் போது, எழுத்து வரும் போது குயவன் களிமண்ணை பானையாக செய்வதைக் காட்டி பானை செய்து முடித்தவுடன் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் என்று வருவது நல்ல தொடக்கம் .களி மண்ணாக உள்ள அனைத்து குழந்தைகளையும் அழகிய பானைகளாக வார்த்து எடுக்க வேண்டியது அரசு மற்றும் சமுதாயத்தின் கடமை என்பதை உணர்த்தும் விதமாக உளது பாராட்டுக்கள் .படம் பார்த்து முடித்தவுடன் மனம் கனத்து விட்டது .அனைவருக்கும் சமமான கல்வி என்பது அடிப்படை உரிமை .அந்த உரிமை காக்கப் பட வேண்டும் .கல்வித் துறை முழுவதும் அரசுடமையாக வேண்டும் .தரமான, சமமான கல்வி அனைவருக்கும் வழங்கப் பட வேண்டும் என்று அறிவுறுத்தும் அற்புதமான ஆவணப்படம் .இந்தப் படத்தை பிரபல தொலைக்காட்சிகள் ஒலிபரப்ப வேண்டும் இயக்குனர் திரு பாரதி கிருஷ்ணகுமார் .அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

 
eraeravik@gmail.com