டூ (திரைப்பட விமர்சனம்)

 

இயக்கம்: ஸ்ரீ ராம் பதமநாபன்  

இசை:  அபிஷேக்

திரைவிமர்சனம்:  கவிஞர் இரா ,இரவி

கா
தலர்கள் உதட்டளவில்  டூ விட்டாலும் மனதளவில் இணைந்தே இருப்பார்கள் என்று உணர்த்தும் படம் .சே போடும் போது விரல்கள் பிரிந்து இருக்கின்றன டூ போடும் போது விரல்கள் சேர்ந்து இருக்கின்றன ஏன்?என்ற என்     நெடுநாள் கேள்விக்கு விடை சொல்வதாக படம் இருந்தது . இயக்குனர் ஸ்ரீ ராம் பதமநாபன்  இன்றைய   காதலை மிக எதார்த்தமாக படமாக்கி உள்ளார் பாராட்டுக்கள் .இசை அபிஷேக் பாடல்களை விட பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி உள்ளார் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக உள்ளது.


பள்ளிப் பருவத்தில் மாணவி காதலை மறுக்கிறாள் .வேலை கிடைத்து சுய சம்பாத்தியம் வந்ததும் காதலை  ஏற்கிறாள் .காதலிக்கிறார்கள் காதலர்களின்  ஊடல்   ,கூடல் படமாக்கி உள்ளனர் .அம்பிகாபதி அமராவதி போல காவியம் போல அல்லாமல் ,நாட்டு நடப்பை எதார்த்தத்தைக் காட்டுகின்றனர் .ரசிக்கும் படி படமாக்கி உள்ளனர் .நண்பர்களின்  அரட்டை நல்ல நகைச்சுவை ,பங்களா என்ற பெயரில் வரும் குண்டு நண்பர் எப்பொதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பது நல்ல   நகைச்சுவை.


காதலிக்கும் கதாநாயகி பாத்திரப்படைப்பு மிக அருமை .காதலன் முதன்முதலாக நாயக் குட்டி பரிசளிக்கிறான் .காதலி வாங்க மறுக்கிறாள் .எனக்கு நாயக் குட்டி பிடிக்காது என்று வெளிப்படையாக சொல்லி விடுகிறாள் .காதலன் கோபப்படுகிறான் .அடுத்து காதலன் நீல நிற சுடிதார்  பரிசளிக்கிறான்.காதலி தனக்கு நீல நிறமே பிடிக்காது என்று சொல்லி வாங்க மறுக்கிறாள் .காதலன் கோபப்படுகிறான் .இப்படி அடிக்கடி சண்டை காதலி பாத்திரம் மிகச் சிறப்பாக உள்ளது .உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியவில்லை .காதலன் அம்மாவிற்காக  பக்திப் பழ மாகவோ,சமையல ராணியாகவோ என்னால் மாற முடியாது என மறுத்து   விடுகிறாள்  .நான் நானாக இருக்க வேண்டும் .யாருக்காவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது என்று தெளிவாகக் கூ றி விடுகிறாள் .


காதலன் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பனிப் புரிகின்றான் .  காதலன்  தன் நண்பன் திருமணத்திற்கு காதலியை   பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அழைகின்றான்.வருகிறேன என்று சொல்லிவிட்டு வராமல் இருந்து விடுகிறாள் காதலி .காத்திருந்து பார்த்துவிட்டு திருமணம் முடித்துவிடுகின்றனர் . காதலன் கோபப்படுகிறான்.ஏன ?வரவில்லை என்கிறான் பிடிக்கவில்லை என்கிறாள் .எது ?பிடிக்கவில்லை காதலா ?திருமணமா ?என்கிறான் உன் நண்பன்.பெற்றோருக்க தெரியாமல்நடத்தும் முறை பிடிக்க வில்லை என்கிறாள் .பதிவு அலுவலகத்தில் பணி புரியும் உனக்கு பெற்றோர் வலி தெரியவில்லை .உன் வாசல் வரும்போது புரியும் என்கிறாள் காதலன் கோபப்படுகிறான்.காதலன தங்கை ஒருவனைக் காதலித்து திருமணதிற்கு தன் அலுவலகம் வந்தபோது காதலி சொன்ன வலியை உணர்கின்றான்
 
காதலுக்காக நண்பர்கள் பார்ட்டி கேட்கின்றனர் .காதலி பார்ட்டி தர வேண்டும் நீ வா என்று காதலனை கூப்புடுகின்றாள்.காதலன வருகிறான் அவன் அம்மாவிடம் இருந்து செல் அழைப்பு வருகின்றது .நண்பனுடன் இருப்பதாகப் போய் சொல்கிறான் .உடன் செல்லை வாங்கி காதலி உங்கள் மகன் போய் சொல்கிறார் .என்னுடன்தான் இருக்கிறார் என்கிறாள்.காதலன கோபப்படுகிறான்.நான உன் அம்மாவிடம் பேசக்கூடாதா ? என்கிறாள் .இன்று என் அப்பாவின் முதல் வருடத் திதி அதை விட்டுவிட்டு நீ கூப்பிடதும் வந்தேன் பாரு எனக்கு தேவைதான் என்று காதலன் கோபப்படுகிறான்.என்னிடம நீ முதலில் சொல்லி இருந்தால் பார்ட்டியைத் தள்ளி வைத்து இருக்கலாமே என்கிறாள்.இப்படி சின்னச் சின்ன ஊடல் படம் முழுவதும் நடக்கின்றது.படம   பார்க்கும் போது  பார்ப்பவர்களுக்கு அவரவர் காதலின் மலரும் நினைவுகளை உருவாக்கி இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.வெற்றி பெறுகின்றார் .

காதலன் காதலி இருவரும் நமக்குள் அடிக்கடி சண்டை வருகின்றது .திருமணம் ஆனாலும் மணவிலக்கு நேரும் எனவே இருவரும் பிரிந்து விடுவோம் என்று முடிவெடுத்துப் பிரிகின்றனர். பிரிவோம் என்று உதடுகள் சொன்னாலும் உள்ளம் சொல்ல மறுக்கின்றது.கடைசியில இருவரும் இணைகின்றனர். விட்டுக் கொடுத்து வாழ்வதுதான் காதல் .முரண் பாடு வேறுபாடு உள்ள வாழ்க்கைதான் ருசிக்கும் .ஒத்த கருத்துள்ள ஜோடிகளின் வாழ்க்கை ருசிக்காது என்ற வாழ்வியல் கருத்துக்களை உணர்த்தும் நல்ல படம் .ஆபாசம் இல்லாத காதல் படம் .புதுக் கவிதையாக எழுதி உள்ளார் இயக்குனர் .ஸ்ரீ ராம் பதமநாபன்.  
eraeravik@gmail.com