தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர்களுக்கான விருதுகள் அறிவிப்பு

 

தினபூமி           

 


2011ஆம் ஆண்டு வெளிவந்த நூல்களில் 28 வகைப்பாடுகளில் சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு 28 நூல்களுக்கான ஆசிரியர்கள் மற்றும் அந்நூல்களை பதிப்பித்த 22 பதிப்பகத்தாரருக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

இம்முறை அயலகத் தமிழ் படைப்பிலக்கியத்திற்கான விருது கனடா வாழ் ஈழத்து புலம்பெயர் எழுத்தாளர் அகில் (அகிலேஸ்வரன் சாம்பசிவம்) எழுதிய கூடுகள் சிதைந்தபோது என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்படவுள்ளது. பரிசு பெறும் நூலாசிரியர்கள் விவரம் வருமாறு:-
 

மரபுக் கவிதை - முனைவர் மு.இளங்கண்ணன், புதுக்கவிதை - கவிஞர் நாவேந்தன் புதினம் - அரு.மருததுரை, சிறுகதை - செல்வி பர்வின்பானு நாடகம் (உரைநடை, கவிதை) - கவிமுகில் நா. கோபாலகிருஷ்ணன் திறனாய்வு- பெ.. இளஞ்செழியன் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் - முனைவர் .வேல்முருகன் பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் - புவியரசு நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) - முனைவர் கு.சேதுராமன் அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் - ஆரூர் தாஸ் பயண இலக்கியம் - .முத்துக்குமார சுவாமி வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு - டி. பவா செல்லதுரை நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு - முனைவர் கி.கிரா.சங்கரன் கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் - இரா. சிவராமன் பொறியியல், தொழில் நுட்பவியல் - கதிரவன் கிருஷ்ணமூர்த்தி மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் - முனைவர் கி.அய்யப்பன் சட்டவியல், அரசியல் - முனைவர் .ஜெகதீசன் மருந்தியல், உடலியல், நலவியல் - டாக்டர் ஜெயம் கண்ணன் தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) - 1. டாக்டர் இல.மகாதேவன், 2. டாக்டர் ஒய். மகாதேவ ஐயர்ஸ். சமயம், ஆன்மிகம், அளவையியல் - இராமநாதன் பழனியப்பன் கல்வியியல், உளவியல் - கவிஞர் சுடர் முருகையா சுற்றுப்புறவியல் - வேணு சீனிவாசன் நாட்டுப்புறவியல் - டாக்டர் சிவ. விவேகானந்தன் வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் - அகிலேஸ்வரன் சாம்பசிவம் - இதழியல், தகவல் தொடர்பு - மா.ரா.அரசு பிற சிறப்பு வெளியீடுகள் - வெ.நல்லதம்பி தமிழர் வாழ்வியல் - முனைவர் பி.சேதுராமன்
 

 

நன்றி - தினபூமி