கனடா வாழ் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கு கூடுதல் பெருமை சேர்த்த பிரபல எழுத்தாளர் திரு அகில் அவர்களின்   'கூடுகள் சிதைந்தபோது'  சிறுகதை நூல் அறிமுக விழா 

புதுவை இராமன்

னடா வாழ் புலம் பெயர்ந்து வாழும் எண்ணற்ற முன்னணி இலக்கியப் படைப்பாளிகளின் பல்வேறு நூல்கள் சிறுகதை தொகுப்பாகவும், கவிதைகளாகவும், கட்டுரையாகவும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு நூல் வெளியீட்டு விழா  க்களாக அரங்கேறி, தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்து வருவது என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும். அவ்வகையில் அவர்களின் படைப்புகள் அனைத்தும் மிக பயனுள்ளதாக சிந்தனைக்கு விருந்தாக அமைந்து வாசகர்கள் வட்டத்தை அதிகரித்து வருவதோடு, சர்வதேச அளவிலும் உரிய அங்கீகாரத்தையும், பெரும் வரவேற்பையும், பல்வேறு கௌரவங்களையும் அளித்து அவர்களுக்கு ஊக்கம் தந்து புதிய படைப்புகளை வெளிவர துணை நிற்கிறது என்றால் மிகையில்லை அத்தகைய நவீன எழுத்தாளர்களின் அணியில் நமக்கெல்லாம் நன்கு அறிந்தவரான திரு அகில் அவர்கள் ஏற்கனவே இங்குள்ள தமிழர் எழுத்தாளர் இணையத்தால் சிறந்த எழுத்தாளர் என்ற கௌரவத்தைப் பெற்றவராய், கடந்த ஆண்டு அவர் எழுதி தமிழகத்திலும், இலங்கையிலும் வெளியிடப்பட்ட சிறுகதை தொகுப்பு நூலான ; கூடுகள் சிதைந்தபோது' என்ற நூலுக்கு, இதுவரை இங்குள்ள எழுத்தாளர்களுக்கு கிடைக்காத பெருமையாக 7 விருதுகள் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளால் விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளதோடு, அதன் அறிமுக விழா கடந்த 11.5.13 அன்று ஸ்காபரோ கனடா கந்தசாமி ஆலயத்தில் கலாநிதி என்.சுப்ரமணியன் அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழர் தகவல் மாத இதழ் பிரதம ஆசிரியர் திரு திருச்செல்வம், டாக்டர் லம்போதரன், பேராசிரியர் சந்திரகாந்தன், ஆசிரியர் திரு சிவபாலு, கலாநிதி திரு .பாலசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு நூல் ஆய்வுரை, நூல் அறிமுக வெளியீட்டுரை வழங்கியும், சரவணை திரு சண்முகராஜன் மற்றும் வேலனை மத்திய கல்லூரி பழைய மாணவர்  சங்கத்தின் சார்பில் திரு செழியன் ஆகியோரின் பாராட்டுரையும் இடம் பெற்றது.

இங்குள்ள பல கலை இலக்கியப் படைப்பாளிகள், ஊடகத்துறை சார்ந்தவர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் என ஏராளமானவர்கள் அரங்கம் நிரம்பிய விதத்தில் வருகை புரிந்திருந்தனர். அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கியும், முக்கிய விருந்தினர்களை அறிமுகப்படுத்தியும் விழாவிற்கு தலைமையேற்ற கலாநிதி திரு என்.சுப்பிரமணியம் அவர்களின் பங்களிப்பு மிகவும் கச்சிதமாய் இருந்ததோடு, இங்குள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் ஊடகங்களின் ஒற்றுமையுணர்வு பலப்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி தனது தொகுப்புரையை வழங்கியது உண்மையிலேயே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டது எனலாம்.

வருகை புரிந்துச் சிறப்பித்த அனைவரையும் திரு அகிலின் சகோதரி, திரு அகில் மற்றும் அவரது துணைவியார் இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தனர். விழா மேடையில் திரு அகிலின் நூல் பற்றிய பதாதையும், ஒரு பக்கத்தில் வீடியோ காட்சி மூலம் திரு அகிலுக்கு தமிழகத்திலும், புதுவையிலும் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் அவரது நூலினைப் பாராட்டி விருதுகளும், கௌரவங்களும் வழங்கிய தொகுப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது.

வழமைபோல் நமது கலாச்சார மரபிற்கேற்ப, மங்கள விளக்கேற்றல், தமிழ்த் தாய் வாழ்த்து, கனேடிய தேசிய கீதம், தாயகத்தில் உயிர் துறந்தோர்க்கான அமைதி வணக்கத்துடன் அன்றைய நூல் அறிமுக வெளியீட்டு விழா ஆரம்பித்தது.

தலைவர் அவர்கள்  விழாவில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்களை அறிமுகப்படுத்தி முன்னுரை வழங்கியதற்குப் பின் பிரபல பெண் எழுத்தாளர் திருமதி ராஜ்மீரா ராசய்யா  அவர்கள் அனைவரையும் வரவேற்று அன்றைய நிகழ்வின் சிறப்பையும், எழுத்தாளர் அகில் அவர்களைப் பற்றியும், அவர் பெற்ற ஏழு விருதுகளைப் பற்றி சிறப்புரை ஆற்றிச் சிறப்பித்தார்.

வரவேற்புரையைத் தொடர்ந்து கனடா சரவணை சேவா மன்றத்தின் சார்பில் திரு சண்முகராஜன் அவர்கள் திரு அகிலுடன் இளமை காலம் தொட்டு தான் கொண்டிருந்த  நட்புணர்வையும், அவரது இலக்கிய ஈடுபாடு, எழுதும் திறன்கள் பற்றிய தனது கருத்துக்களை மலரும் நினைவாகப் பகிர்ந்துகொண்டு பாராட்டிச் சிறப்பித்ததோடு, ஒரு வாழ்த்து மடல் நினைவுப் பரிசினையும் வழங்கி கௌரவித்தார். அடுத்து பிரபல ஆன்மீகப் பேச்சாளரும், மருத்துவருமாகிய டாக்டர் லம்போதரன்  மற்றும்  தமிழர் தகவல் பிரதம ஆசிரியர் திரு திருச்செல்வம ஆகியோரின் பாராட்டுரை இடம் பெற்றது.

டாக்டர் லம்போதரன் அவர்கள் தனக்கு அகிலுடன் முதன் முதல் ஏற்பட்ட நட்பு என்பது தான் நடத்தும் தொடர் ஆன்மீக வகுப்பில் அவர் தவறாது பங்கேற்றுள்ளதையும், குறிப்பாக அவரின் தன்னார்வலச் சேவையை மிக உயவாகக் கூறி, அவரது எழுத்துத் திறன் உண்மையிலேயே தாயக உணர்வுகளையும், மனிதநேயத்தையும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் இயல்பான வாழ்க்கையின் யதார்த்தங்களை வெளிப்படுத்துவதாக உள்ளன என்று கூறி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

திருச்செல்வம் அவர்கள் தனது பாராட்டுரையில் திரு அகில் அவர்களின் முற்போக்குச் சிந்தனையுடன் கூடிய தொலைநோக்குப் பார்வையை வெகுவாக புகழ்ந்ததோடு, இந்த மாத வெளியீடான தமிழர் தகவல் முன் அட்டையில் திரு அகில் அவர்களின் வண்ணப்படத்தை வெளியிட்டு பெருமை படுத்தியதன் காரணத்தை விவரித்து, அதனை திரு அகிலுக்கு நினைவுப் பரிசாக அளித்து கௌரவித்து தனது நல் வாழ்த்துக்களைக் கூறிச் சிறப்பித்தார்.

இவ்வாறு பாராட்டுரை மற்றும் வாழ்த்துரைகளைத் தொடர்ந்து, அன்றைய முக்கிய நிகழ்வுகள் இடம் பெறத் தொடங்கின. முதலில் கலாநிதி .பாலசுந்தரம் அவர்கள் திரு அகிலின் 'கூடுகள் சிதைந்தபோது' சிறுகதைகள் பற்றிய தனது விமர்சனத்தை பல்வேறு கதைகளை மேற்கோள்காட்டி கீழ்கண்டவாறு வழங்கினார்.

சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் போன்றவற்றுடன் சமயம் சார்ந்த நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ள திரு அகில் அவர்களின் 14 சிறுகதைகளைக் கொண்ட 'கூடுகள் கலைந்தபோது என்ற அவரது நூலின் மூலம் தமிழ் இலக்கிய உலகில் அனைவரும் அறியும் வண்ணம் தனிமுத்திரைப் படைத்துள்ளது தமிழ்நாடு அரசின் சிறந்த நூலூசிரியர்களுக்கான விருது பெற்றுள்ளதும், இம்முறை வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியத்திற்கான விருது இந்நூலுக்கு கிடைத்தது மிகவும் பொருத்தமானதாகும். அந்நூலில் அவரின் என்னுரையும், தமிழ் சிறுகதை வரலாறு 100 ஆண்டு கால ஆவணம் என்ற ரீதியில் புதுமைப்பித்தன் முதல் தமிழகத்திலும் ஈழத்திலும் சிறுகதை எழுத்தாளர்களின்  ஆயிரக்கணக்கான படைப்புகள் வெளிவந்துள்ளன அவற்றில் சிறுகதையின் உள்ளடக்கம், கதை புனைவுத் திறன் என்பனவற்றில்  பலரும் பலவகைப் பரிட்சார்த்தங்களை மேற்கொண்டு, சிறுகதைகளின் பரிமாணங்களை பல்வேறு கோணங்களில் வெளிப்படுத்தியுள்ளனர் என்பதை பேராசிரியர் திரு கா.சிவதம்பி அவர்கள் முதன் முதல் தனது சிறுகதைகள் மூலம் வரைவிலக்கணம் படைத்துள்ள திரு புதுமைப்பித்தனின் படைப்புகள் சான்றாகும். அவ்வகையில் திரு அகில் அவர்களின் இந்நூலில் உள்ள 'தேடல், அம்மா எங்கே போகிறாய், கண்ணீர் அஞ்சலி, கூடுகள் சிதைந்தபோது, பதவி உயர்வு' போன்ற சிறுகதைகளில் வரும் வரிகள் என்னை மிகவும் கவர்ந்ததாகும். சிறுகதை இலக்கியப் பயணத்தில் ஈழத்துப் படைப்பாளிகளான நந்தி, செங்கை ஆழியான், மண்டூர் அசோகா, லெ.முருகபூபதி முதலானோருக்கு அடுத்தபடியாக சமகால சிறந்த சிறுகதை எழுத்தாளராக பலர் விளங்கிய நிலையில் ஒரு சாதனை எழுத்தாளராக அகில் அவருக்கு கிடைத்த ஏழு விருதுகள் என்பது புலம்பெயர் தமிழிலக்கியத்திற்கு கிடைத்த ஆரோக்கியமான பதிவாகும். இவரது கதைகள், கவிதைகள் ஈழத்திலும், தமிழகத்திலும் கனடாவிலும் பல சஞ்சிகைகளில் இடம் பெற்றுள்ளன. இவரது சிறுகதைகள் தமிழர்களின் வாழ்க்கையில் காணப்படும் பலவித யதார்த்தமான பிரச்னைகளையும், குடும்ப அமசங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளன. இவரது எழுத்துக்கள், சமூக போலித்தனங்கள், சமூக முரண்பாடுகள் எனத் தொடங்கி வாழ்வியல் சார்ந்த மண உணர்வுகளையும், எண்ணங்களையும் மிக நயமாக எழுதி மனிதநேயத்தின் முக்யத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரது பார்வையானது

தாயக பூமியிலிருந்து புலம் பெயர் நாடுகள் வரை வாழும் நமது தமிழர்களின்  அனைத்து இயல்பான வாழ்வியல் உணர்வு நிலைகளைக் கொண்டதாக முற்போக்குச் சிந்தனையுடன் சிறுகதை இலக்கியத்தின் இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு, எளிய நடையில் பல பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளது இந்நூலில் யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய பேராசிரியர் அமரர் கா.சிவத்தம்பி அவர்கள், தான் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு அணிந்துரையை எழுதி அனுப்பிய பெருந்தன்மைக்கு நன்றியாக இந்நூலினை அவருக்கு சமர்பித்துள்ள நூலாசிரியரின் பண்பையும் பாராட்டினார்.அனைவரும் படித்து இன்புற வைக்கும் என தனது விமர்சனங்களைக் கூறி, நூலாசிரியரைப் பாராட்டிச் சிறப்பித்தார்.

அவரது விமர்சன உரையைத் தொடர்ந்து நூல் வெளியீடு நடைபெற்றது - முதல் பிரதியை திரு.. முத்துலிங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டதற்குப் பின் முக்கியப் பிரமுகர்கள் நூலாசிரியரிடமிருந்து நூல் பிரதிகளைப் பெற்று தங்களது நல்வாழ்த்துக்களைக் கூறி பெருமையுற்றனர்.

தொடர்ந்து பேராசிரியர் திரு சந்திரகாந்தன் அவர்களும், ஆசிரியர் திரு சிவபாலு ஆகியோரின் நூல் மதிப்பீட்டுரை இடம் பெற்றது. அவர்கள் உரையில் கீழ் கண்டவாறு தங்களது அபிப்ராயங்களை பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டினர்.

பேராசிரியர் டாக்டர் சந்திரகாந்தன் அவர்கள் தனது உரையில் இலக்கிய வரலாற்றிளை வளர்த்தெடுத்த பெருமை யாழ் பல்கலைக்கழகத்திற்கு உள்ளதையும், கலாநிதி சுப்ரமணியம் அவர்களின் பங்களிப்பை புகழ்ந்தும், நூலின் தலைப்பிற்கேற்ப அனைத்து சிறுகதைகளும் அமைந்துள்ளது என்பதை பாராட்டி கல்லூரி மாணவர்களின் கட்டுரைகளின் தலைப்பு, அதன் உள்ளடகத்தின் சிறப்பை வைத்தே அவர்களின் ஆற்றலை அவதாணிக்க முடிந்ததாகக் கூறினார். அதுபோன்றே இந்நூலின் உள்ளடக்கம் என்பது வாழ்விடத்தின் கூடுகள் சிதைந்தது வேறிடத்திலே வாழ்கின்றோம். வாழ்வின் தன்மைகள் குறைந்தது என்ற அடிப்படையில் அத்தனை கதைகளும் நினைவூட்டுகின்ற அனுபவ ரீதியாக எழுதப்பட்டிருக்கிறது என ஒரு சில கதைகளைப் பற்றிய தனது விமர்சனங்களை முன் வைத்து இந்நூல் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அடுத்து உரையாற்றிய திரு சிவபாலு அவர்கள் எப்படி அகில் ஒரு எழுத்தாளராக அறிமுகப்படுத்தப்பட்டார் என்பதையும், தமிழ் எழுத்தாளர் இணையம் அவரை பாராட்டி கௌரவித்ததையும், அவரின் எழுத்துப் பார்வையின் தன்மை ஒரு நூல் எவ்வாறு திறன் ஆய்வு அல்லது விமர்சனம் செய்யப்படுகிறது என்பதை எழுத்தாளன் - அவரது படைப்பு என்ற நோக்கில் கணிக்கப்படுவதன் முக்கியத்துவத்தை விவரித்தார். அவ்வகையில் அவரது சமுதாய நோக்கு, அவற்றில் உள்ள முரண்பாடுகள், இலகுவான நடையில் எழுதும் ஆற்றல் அனைத்துமே உலக எழுத்தாளர் தரத்திற்கு உரியதாகப் பாராட்டிச் சிறப்பித்தார்.

இந்நூலில் உள்ள கதைகள் அனைத்துமே தாயகத்தில் ஏற்பட்ட போர் சூழ்நிலையில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள பட்ட கஷ்டங்களையும், வேதனைகளையும், குறிப்பாக இராணுவத்தின் ஷெல் தாக்குதலின்போது பிறந்த மண்ணை விட்டு இரவு பகல் என்று பாராமல் உண்ண உணவின்றியும், உறக்கம் இன்றியும், பங்கர்களில் தங்கி ஊர் ஊராக நடந்து புலம் பெயர்ந்ததையும், பல முரண்பாடான வாழ்க்கையைப் பற்றியும், விவிலிய நூலினை மேற்கோள் காட்டி சமய நம்பிக்கைகள் நம்மை எவ்வாறு ஆட்கொண்டுள்ளன என்ற விதத்தில் அமைந்த கதைகள் அனைத்துமே நாம் எவ்வாறு வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்டுகின்றன என்று தங்களது உரையில் குறிப்பி;ட்டார்கள்.

அன்றைய நிகழ்வின் சிறப்பானதொரு அங்கமாக நம்மைச் சுற்றி நடைபெறும் எந்த வித சமூக கலை இலக்கிய கலாச்சார நிகழ்வுகள் என்றாலும் தவறாமல் பங்குகொண்டு ஊடகச் சேவை ஆற்றிவரும் திரு சிவானந்தநாதன் மற்றும் எனனையும்; மேடைக்கு அழைத்து பொன்னாடை அணிவித்து கௌரவித்தது ஒரு இன்ப அதிர்ச்சி என்றே கூற வேண்டும். தொடர்ந்து விழாவிற்கு வருகை புரிந்திருந்த அனைவருமே நூலாசிரியர் தம்பதியரிடமிருந்து பிரதிகளைப் பெற்று மகிழ்ந்ததோடு, தங்கள் நல் வாழ்த்துக்களைக் கூறிச் சிறப்பித்தார்கள்.

தலைவர் கலாநிதி திரு சுப்பிரமணியம் அவர்கள் தொகுப்புரையாக தனது கருத்துக்களைக் கூறும்போது, நூலாசிரியரின் திறன்களையும், அவரது படைப்புகளான திசை மாற்றிய தென்றல் (2006) கண்ணின் மணி நீயெனக்கு (2010) மற்றும் தமிழகப் பத்திரிகைளில் பிரசுரிக்கபட்ட அவரது சிறுகதைகள் இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளதை வெகுவாகப் பாராட்டினார். இந்நூலிற்கு தானும், பேராசிரியர் கா.சிவத்தம்பி, செங்கை ஆழியான், .குணராசா ஆகியோர் அணிந்துரை எழுதியுள்ளதையும், இச்சிறுகதைகளில் வரும் சம்பவங்கள் சமகாலத்துக்குரியவனவாக, பல்வேறு பிரச்னைகளை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது சிறுகதைகளின் நேர்த்தியை காண முடிகிறது என்பதோடு, பாத்திரப் படைப்பில் அகில் வெற்றி கண்டுள்ளார் என்ற கலாநிதி .குணராசா அவர்களின் கருத்தினை ஒப்பிட்டுக் கூறினார். குறிப்பாக ஈழத்து இலனக்கியத்தின் நீட்சியாக உருவான 'புலம்பெயர் இலக்கியம்' என்ற வகையில் வரலாற்றை முன்னெடுக்கும் ஒரு புது வரவு என்றார். மேலும் இந்நூலுக்கு கிடைத்த  1 கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது, 2 மணிவாசகர் பதிப்பக விருது 3 சு.சுமுத்திரம் இலக்கிய விருது, 4 புதுவை நண்பர்கள் தோட்ட இலக்கிய விருது, 5 கவிஞாயிறு தாராபாரதி அற்கட்டளை விருது 6 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தனுஷ்கோடி ராமசாமி விரது ஆகியவற்றை விவரித்து, கனடிய மண்ணில் இந்நூல் அறிமுகப்படுத்துவது நம் அனைவருக்கும் கிடைத்த விருதாகும் என்றார். மேலும் சிறுகதை இலக்கியத்தின் வடிவக் கட்டமைப்பில் ஐரோப்பிய அமரிக்கச் சூழ்நிலையில் உள்ள பல வளர்ச்சிக்  கட்டங்களையும் மேற்கோள் காட்டினார். தமிழ் சிறுகதைக்கு ஏறத்தாழ நூறாண்டு கால வரலாறு இருப்பதோடு, பாரதியார், .வே., புதுமைப்பித்தன், கு..ராஜகோபாலள, மௌனி, ஜெயகாந்தன் ஆகியோர் வடிவமைத்துள்ளதை, .ஹென்றி, அன்ரன் செகாவ் ஆகியோருடன் ஒப்பிட்டு விமர்ச்சித்தார். தமிழ் சிறுகதை வரலாற்றை புதுமைப்பித்தன் ஆளுமை மரபு, ஜி.நாகராஜன ஆளுமை மரபு, பூமணி ஆளுமை மரபு, கோணங்கி சார்ந்த மரபு போன்றவற்றை கடந்த ஆண்டு வெளிவந்த மாற்றுவெளி - ஜூலை இதிழில்  பேராசிரியர் வீ.அரச அவர்களின் கட்டுரையில் உவமைப்படுத்தியுள்ளதையும் மேற்கோள் காட்டினார். அவ்வகையில் திரு அகில் அவர்களின் சிறுகதை முறைமை முதல்வகை மரபு சார்ந்தது என்றார்.

சிறுகதை உட்பட பொதுவாக கலை இலக்கியவகைகள் பற்றிய தர மதிப்பீட்டிலே இருமுக்கிய அம்சங்கள்  கவனத்தைப்பெறுகின்றன. ஒன்று, அவற்றின்  உள்ளடக்க அம்சங்களின்  'சமூகமுக்கியத்துவம்' ஆகும். அதாவது 'குறித்த ஆக்கம் முன்னிறுத்தும் உணர்வியல் அம்சம் சமூகத்தின் கவனத்துக்கு வரவேண்டிய அளவுக்கு முக்கியத்துவமுடையதா?' என்ற வினாவை மையப்படுத்திய பார்வை இது. இன்னொன்று, குறித்த படைப்பானது  கலையாக்கமாகக்  கட்டமைக்கப்படும் முறைமைமையிலுள்ள சிறப்பாகும் எனக் கூறி நன்றி பாராட்டி தனது உரையை நிறைவு செய்தார்

இறுதியாக நூலாசிரியர் திரு அகில் அவர்கள நன்றியுரையில் தனது நூலிற்கு தமிழகத்திலும், புதுவையிலும் கிடைத்த விருதுகளைப் பற்றிய விபரங்களைக் கூறியதுடன், அன்றைய விழாவின் வெற்றிக்கு காரணமாய் திகழ்ந்து அனைத்து வகைகளிலும் உதவி புரிந்து நல் ஆதரவு வழங்கியப் பிரமுகர்களை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி, எழுத்தாளர்களின் சார்பில் தனது கருத்துக்களைக் கூறி அன்றைய வைபவத்தை இனிய இராப்போசனத்துடன் நிறைவு செய்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

pudhuvairaman@gmail.com