"விவேகானந்தரின் சிந்தனைகளே இளைய தலைமுறைக்கு வழிகாட்டி" -  நூலக வாசகர் வட்டத்தில் பேச்சு    

கவிஞர் மு.முருகேஷ்          

வந்தவாசி.ஜூலை.
22.வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற   "சிந்தனைச் சாரல்" சிறப்பு நிகழ்வில், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளிக்கின்ற சக்தியாக விவேகானந்தரின் சிந்தனைகள் உள்ளன என்று தெள்ளார் புலவர் .பானு பேசும்போது குறிப்பிட்டார்.

இந்நிகழ்விற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் தலைமையேற்றார். கிளை நூலகர் கு.இரா.பழனி முன்னிலை வகித்தார்மூன்றாம்நிலை நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

"தமிழ்ச் சான்றோரைக் கெளரவித்தல்" எனும் நிகழ்வில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் வி.குமாரவேலு பாராட்டப் பெற்றார்.

"விவேகானந்தரின் நூற்றாண்டுச் சிந்தனைகள் " எனும் தலைப்பில் விவேகானந்தரின் 150-ஆவது ஜெயந்தி விழாக்குழு

உறுப்பினர் புலவர் தெள்ளார் .பானு சிறப்புரையாற்றும்போது,

மனித சமூகம் இன்று சுயநலத்தால் விழுந்து கிடக்கிறது. யாரும் யாரின் வார்த்தைகளையும் கேட்பதுமில்லை,நம்புவதில்லை. மனிதர்கள்

நான் உயர்ந்தவன் , நீ தாழ்ந்தவன் என்று சண்டையிட்டுக் கொள்கிற இந்நாளில் விவேகானந்தரின் தேவையும் அவசியமும் முக்கியத்துவம் பெறுகிறது.

எல்லோரும் இந்தியத் தாயின் புதல்வர்கள் என்று அனைவரையும் நேசித்தவர் சுவாமி விவேகானந்தர். உலகுக்கே சகோதரத்துவத்தையும், அன்பையும் போதித்த விவேகானந்தரின் சிந்தனைகளை இன்றைய இளைஞர்கள் கடைப்பிடிப்பது அவர்களின் வாழ்க்கை உயர வழிகாட்டும் என்றார்.

ரூ.1000/- செலுத்தி நூலகப் புரவலர்களாக எஸ்.நடராஜன், ஜெ.முனுசாமி,.செல்வம் ஆகியோர் இணைந்தனர்.

நிறைவாக, ஜா.தமீம் நன்றி கூறினார்

படக்குறிப்பு:

வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தில் விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற   "சிந்தனைச் சாரல்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தெள்ளார் புலவர் .பானுவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் நினைவுப் பரிசு வழங்கும்போது எடுத்த படம்.அருகில், நூலகர் கு.இரா.பழனி, வி.குமாரவேலு, பூ.சண்முகம், ஜா.தமீம் ஆகியோர் உள்ளனர்.

 

haiku.mumu@gmail.com