புலம்பெயர்ந்து வாழ்வோரையும் நமது சொந்தங்களென  ஏற்க வேண்டும்   

 

கவிஞர் மு.முருகேஷ்
 

ந்தவாசி.ஜூன்.19. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக அகதிகள் நாள் சிறப்பு நிகழ்வில்,  உலகமெங்கும் பிறந்த தாய்நாட்டை விட்டு, புலம்பெயர்ந்து வாழும் மக்களை நமது சொந்தங்களாக ஏற்றுக்கொள்ளும் மனிதநேயச் சிந்தனை வளர வேண்டும் என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் பேசினார்.

 

கிளை நல்நூலகர் கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார்இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழாசிரியர் இர.பொன்னம்பலம் கலந்து கொண்டனர். நல்லூர் பட்டதாரி ஆசிரியர் .விஜயன் உலக அகதிகள் நாள் குறித்த சிறப்புக் கவிதையை வாசித்தார். ஓய்வு பெற்ற அஞ்சலக அலுவலர் .இராதாகிருஷ்ணன், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்க செயலாளர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

 

இந்நிகழ்விற்கு தலைமையேற்ற நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேஷ் உலக மக்களும் புலம் பெயர்ந்தோர் வாழ்வும்...” எனும் தலைப்பில் பேசும்போது, உலகம் முழுவதும் வாழும் 800 கோடி மக்களில், 4 கோடியே 20 இலட்சம் மக்கள் இன்றைக்கு தனது சொந்த நாட்டினை விட்டு, அகதிகளாய் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறனர். உள்நாட்டுப் போர், இயற்கைச் சீற்றம், தீவிரவாதிகளின் தாக்குதல், வன்முறைகள் என பல்வேறு காரணங்கள் அவர்களை சொந்த நாட்டில் வாழ விடாமல் விரட்டுகின்றன. இப்படி அகதி வாழ்க்கை வாழ நேர்கிற மக்கள் படுகிற இன்னல்களை சொல்லி மாளாது. அகதிகள் முகாம்களில் இவர்கள் எதிர்கொள்கிற பலதரப்பட்ட துன்பங்கள் மனித உரிமைக்கே முற்றிலும் எதிரானவை

 

2011-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற புலம்பெயர்ந்து  வாழும் தமிழர்களின் 'தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்குறித்த சர்வதேசக் கருத்தரங்கில் நானும் பங்கேற்றபோதுதான்அவர்களின் வாழ்வியல் துயரங்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. எவ்வித திட்டமிடலுமின்றி, வாழ்ந்திட வழி தேடி வருகிற புலம்பெயர்ந்த மக்களை நாமும் தாயன்போடு ஏற்றுக் கொள்கிற மனநிலையை பெற வேண்டும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் 2000-ஆம் ஆண்டின் தீர்மானத்தின்படி, ஆப்பிரிக்க அகதிகள் நாளான ஜூன்-20  உலக அகதிகள் நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பிபிசி உலக சேவை மையம் 2009-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையின்படி உலகமெங்கிலும் நான்கு கோடியே இருபது இலட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

 

2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, இலங்கையின் வட புலத்திலிருந்து சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். தமிழகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் அகதிகள் முகாமில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் அகதிகளாக இருக்கின்றனர்வலி நிறைந்த வாழ்க்கை வாழும் அம்மக்களை அகதிகள் என்று சொல்லுவதைத் தவிர்த்து, இனி புலம்பெயர்ந்தோர் எனும் சொல்லால் விளிப்பதே சரியாகும் என்று குறிப்பிட்டார்.   

       

நிறைவாக, அலுவலக உதவியாளர் மு.இராஜேந்திரன நன்றி கூறினார்.  

 

படக்குறிப்பு:       

வந்தவாசியில் அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக அகதிகள் நாள் சிறப்பு நிகழ்வில்  சிறப்பு விருந்தினர் இர.பொன்னம்பலம பேசியபோது எடுத்த படம்.அருகில நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷகிளை நல்நூலகர் இரா.பழனி, பட்டதாரி ஆசிரியர் .விஜயன   ஆகியோர் உள்ளனர்.