அறிவியல் கலைச்சொல்லாக்கம்  - ஒரு பார்வை

 

முனைவர் பூ.மு.அன்புசிவா

 

ஒரு நாட்டின் வளாச்சிக்கு அடிப்படையாக விளங்கும் கல்வி அவரவர் தாய்மொழி வழியாகவே கற்றுத்தரப்படவேண்டும் என்பதில்  அறிஞர் பெருமக்களிடையே, கருத்து வேறுபாடு இல்லைகருத்துக்களைப் புரிந்து கொள்வதற்கும்புரிந்து கொண்ட கருத்துக்களை எடுத்துரைப்பதற்கும் ஏனைய மொழிகளைவிட தாய்மொழி எளிமையாக  இருப்பதே அதற்குக் காரணமாகும்சுpந்தனை ஆற்றலை வளர்ப்பதற்குக் கருவியாக விளங்கும் தாய்மொழிக் கல்வி ஒருவருடைய வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல்அவர்மூலமாக நாடு மொழி ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும்; துணைபுரிகின்றது.  'தாய்மொழிவழிக் கல்வி குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது போன்றதுஆனால் பிறமொழிக் கல்வி புட்டிப்பால் கொடுப்பது போன்றது.' என்னும் தாகூரின் கருத்து பயிற்று மொழியைப் பொறுத்தவரையில் என்றும் பொருந்தும்
 

அரசின் நோக்கமும் மக்களின் விருப்பமும்:
 

தாய்மொழி வழிக் கல்வியின் முதன்மையை உளங்கொண்டே முன்னேறிய நாடுகள் பலவும் தத்தம் மொழியையே பயிற்று மொழியாகக் கொண்டு உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைந்து வருகின்றனபல்வேறு நாடுகள் இவ்வாறு உயர்நிலை அடைந்து வருவதற்கேற்ப நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களும் அவ்வம் மாநில மொழிகளையே பயிற்று மொழியாக்கியுள்ளன.   தமிழகத்திலும் தமிழ் பயிற்று மொழியாக இருத்தல் வேண்டுமென்பது அரசின் கொள்கையாக இருந்துவருகிறதுஎனினும் அனைத்துத் துறைகளிலும் தமிழ் பயிற்றுமொழியாக இருந்துவருகிறாதாவென்றால் அதற்கு 'இல்லை' என்ற பதில் கூறவேண்டிய நிலை இன்றுள்ளதுஅரசின் நோக்கமும் மக்களின் விருப்பமும் தமிழே பயிற்று மொழியாக வேண்டும் என்பதேயாகும்
 

வளர்ந்து வரும் மாற்றம்:
 

ஒரு காலத்தில் உயர் நிலைப்பள்ளி அளவில் கூட பயிற்றுமொழி ஆங்கிலமாகவே இருந்ததுஆனால்; அரசு பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும் என்னும் வகையில் மாற்றம் செய்துள்ளோம்கல்லூரிக் கல்வி அளவிலும் அம்மாற்றம் ஓரளவுக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கதுஇம்மாறுங்காலத்தில் (Transition period)  பல துறை அறிவியல் கருத்துக்களையும் புலப்படுத்தும் வண்ணம் தமிழில் அறிவியல் கலைச்சொற்களை நாம் இன்னும் கொண்டு வரவில்லை என்பது வருந்தத்தக்க உண்மையேயாகும். முயன்றால் அச்சொற்களுக்கு  ஏற்றவாறு தமிழ்ச் சொற்களைக் கண்டறிய முடியும்.  
 

பெரும்பாலான சொற்களைத் தூய தமிழில் உருவாக்கிட முடியும் என்னும் நம்மவரின் எண்ணத்துக்குச் சான்றாக விளங்குவனவே மேற்சொன்ன எடுத்துக்காட்டுகள்.
 

பலநிலைகளில் ஒரு சொல்
 

புதிதாக ஒரு சொல்லை உருவாக்கும்போது எம்மொழியிலும் இடர்ப்பாடு நேருவது இயற்கையே Plan,  Scheme,  Project,  Programme என்னும் நான்கு சொற்களுக்குத் 'திட்டம்' என்னும் ஒரு சொல்லே உள்ளது  என்று  கூறுவாரும் உளர்ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் அச்சொற்களுக்கு முறையே, ஏற்பாடு, திட்டம், உருவாக்கம், செயலாக்கம் என்னும் சொற்கள் பொருந்துகின்றமை அறியலாம்குழுமம்  குழு என்னும் கருத்தை விளக்கும் வகையில் பலவேறாய ஆங்கிலச் சொற்கள் விளங்குவதை இன்று நாம் காண்கிறோம்

Association
Corporation
Organization
League
Union
Society
Forum

 

இவ்வாறானசொற்களைத் தமிழில் கொண்டு வரும்பொழுது முன்னும் பின்னுமாக  விளங்கும் சொற்களின் துணை கொண்டு அது எந்த அமைப்பை அல்லது குழுவைச் சேர்ந்தது என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.   அது பழக்கத்தால் வருவதேயன்றிகுறிப்பிட்ட அச்சொல் எனன கருத்தில் சொல்லப்பட்டது என்பது புரிந்து கொள்ள முடியாததன்று'Delivery என்னும் ஒரே சொல்; மருத்துவத்துறையிலும் அஞ்சல் துறையிலும் பயன்படுத்தப் படும்போது எப்பொருளில் அது பயன்படுத்தப்படுகிறது என்பதில் யாருக்கும் எந்த ஐயமும் ஏற்படுவதில்லை current என்னும் சொல் மின்னியலில் மின்னோட்டத்தையும்; நீரியலில் நீரோட்டத்தையும் Pressure என்னும் சொல் மின்னியலில் மின்னழுத்ததi;தயும்நீரியலில் நீராழத்தையும் குறிக்கும்அதுபோல  தமிழிலும் ஒரு சொல்லே பல நிலைகளில்; அவ்வவற்றிற்குரிய பொருள்களப் புலப்படுத்தக் கூடுமன்றோ
 

கலைச் சொற்களை உருவாக்கும்போது அரசு அவ்வத்துறைசார்ந்த அறிஞர் பெருமக்களை ஒருங்குகூட்டிஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகுஅவர்கள் தருகின்ற அச்சொற்களை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் செய்தல் வேண்டும். ஆனால் இன்று அந்நிலை இல்லைசான்றாக Computer என்னும் சொல்லுக்கு கணிப்பொறி, கணிப்பான், கணிப்பிகணனி, கணினி என்பன போன்ற பல்வேறு சொற்களைக் கையாண்டு வருகின்றோம்உலக மொழியாக விளங்கும் ஆங்கிலத்தில்  இருப்பது  Computer என்ற ஒரே சொல்லேஆனால் நாம் அதைக் குறிக்க மேறகூறியவாறு பல சொற்களைக் கையாண்டு வருகிறோம்இது கலைச்சொல்லாக்கத்தில் பொதுக்கருத்தொன்றைப் பெறுவதில் நாம் இன்னும் போதுமான வெற்றி அடையவில்லை என்பதைக் காட்டுவதாகவே உள்ளது
 

ஒலிப்பெயர்ப்பு:
 

பொருந்தும் வகையில் சொற்களை மொழியாக்கம் செய்ய முடியவில்லை என்றால் அப்படியே தமிழில்  எழுதுவதால் தவறொன்றுமில்லை. எடுத்துக்காட்டாக Rubber,  Tire,  Balloon, போன்ற சொற்களையம், Sodium, potassium, Aluminum   போன்றவற்றையும் ஒலிபெயர்ப்புச் (Transliteration) செய்து வழங்கலாம்.   பிறமொழிச் சொற்கள் பலவற்றைத் தனதாக்கிக் கொண்டே ஆங்கிலம் வளர்ச்சி பெற்றது என்பது இவ்விடத்து மறந்து விடக்கூடாது.   தொல்காப்பியர் காலத்தில் தமிழில் கலந்திருந்த வடசொற்களைத ;தமிழ்ப்படுத்த அவர் காட்டிய
 

'வடசொற் கிளவி வடவெழுத்தொரீ'

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே'
 

என்னும்  நெறிக்கேற்ப தமிழில் பயின்று வழங்கும்  அறிவியல் தொடர்பான பிறமொழிச் சொற்களைத் தமிழில் எழுத்து மாற்றம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.   அறிவியல் கலைச் சொல்லாக்கத்தில்; தவிர்க்க முடியாத நிலை உருவாகும்பொழுது  மட்டுமே  இம்முறையைப் பின்பற்ற வேண்டும் Atom என்பதற்கு 'அணுஎன்றும் Nucleus   என்பதற்கு 'உட்கரு' என்றும் Proton என்பதற்கு 'நேர்மின்னி' என்றும் Proton என்பதற்கு 'எதிர்மின்னி' என்றும் Electron என்பதற்கு 'பொதுமின்னி' என்றும் Photograph என்பதற்கு 'மின்னணுவியல்' என்றும் மொழிபெயர்ப்பு செய்வது  பொருந்துவதே.   ஆனால் Phழவழபசயிh என்பதற்கு 'புகைப்படம்' என்பதை விட 'ஒளிப்படம்' என்பதே  சிறப்பாகும்
 

வழக்குச் சொல் போற்றல்:
 

புதிய அறிவியல் கலைச் சொற்களை உருவாக்கும்போது முன்பே வழக்கிலிருந்த சொற்களை  ஒட்டியே சொல்லாக்கம் செய்தல் வேண்டும்மேலும், அவ்வாறு உருவாக்; வேண்டிய  சொற்களுக்கான பொருளை நன்கு அறிந்து கொண்டு வழக்கிலிருக்கும் சொல்லின்   வினை வடிவத்தையும் அடிச்சொல் அல்லது வேர்ச்சொல்லையும் ஆதாரமாகக் கொண்டு புதியன காணுதல் வேண்டும்.   ஆங்கிலத்தில்; காணப்படும்; சொற்றொடர்கள்; சிலவற்றிற்கு வழக்கில் பயின்று காணப்படும் தொடர்களையும்  கையாளுவது பொருத்தமுடையதாகும்
 

Ways and means     வழி வகை

Nook and corner     மூலை முடுக்கு

First of all           முதன் முதலாக
 

என்றின்னவாறு கையாளலாம்என்ன கருத்தைச் சொல்ல  எண்ணுகிறோமோஅக்கருத்தைப் படைக்கும்  அச்சொற்கள் வெளிக்காட்டுவதாகவும் இருத்தல் அவசியம்அதற்காகசொற்றொடர்களில் காணப்படும் சொல்லின் நேரடியான  மொழிபெயர்ப்பின் கூட்டமாகவேஅது இருக்க வேண்டுமென்பதில்லை Trunk-call என்பதற்கான  தமிழச் சொல்லாக்கம் Trunk என்பதற்கு ' முண்டம்' என்றும் call என்பதற்கு  'கூவுதல்' என்றும் பொருள் கொண்டு இணை;டயும் இணைத்து 'முண்டக்கூவல்என்று சொல்லாக்கம் செய்வது வேண்டாத ஒன்றேதொலைதூர அழைப்பு  நெடுந்தொலைவு அழைப்பு என்றிருப்பதே ஏற்புடயதாகும்இணைந்த இரு சொற்கள் உணர்த்த வந்த கருத்து தனித்தனிச் சொற்களில் மட்டும் இருப்பதில்லைசொல்லுக்குச் சொல் மொழியாக்கம் செய்வதால் கருத்தோட்டம் சிதைவதோடு வேறுபட்ட மொழியாக்கத்திற்கும் வழிவகுக்கும்
 

அறிவியல் கலைச்சொல்லாக்க முயற்சிகள்:
 

இவ்விருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் 'தமிழ் வளர்ச்சிக் கழகம்' தோன்றிக் கலைச்சொல்லாக்க முயற்சிகளில்  ஈடுபட்டதுஅதன் பயனாக ஆங்கிலத்தில் Encyclopedia என்றிருப்பதைப் போலத் தமிழில் 'கலைக்களஞ்சியம்என்று பத்து தொகுதிகள் வெளிவந்தது
 

 'பிறநாட்டு நல்லறிஞர்  சாத்திரங்கள்

 தமிழ் மொழியில் பெயர்த்தல்வேண்டும்'
 

என்னும் பாரதியின் வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதுபோல் அறிவியல் கலைச் சொல்லாக்கங்கள் செய்து தமிழ் பயிற்று மொழியாயிருப்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் 'தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்'   அரசின் சார்பில் செயல்படத்துவங்கியதுசில பதிப்பகங்களும் அறிவியல் கலைச்சொல்லாக்கப் பணயில் ஈடுபட்டுள்ளன.   கலைக்கதிர், வளரும் வேளாண்மைவிஞ்ஞானச் சுடர் போன்ற அறிவியல் மாத இதழ்களைக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் வெளியி;ட்டு அறிவியல் தமிழ் வளர்வதற்குப்பெரிதும் துணைசெய்து வருகின்றன.    ஐக்கிய நாடுகளின் கல்விஅறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) 'கூரியர்' என்ற அறிவியல் இதழை நடத்தி வருகிறது
 

தஞ்சைத் தமிழப் பல்கலைக் கழகம் அறிவியல் கலைச்சொல்லாக்கப் பணியில் பெரிதும் ஈடுபட்டுக் கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்கியும் பிறரால் உருவாக்கப்பட்ட சொற்களைத் தொகுத்தும் ஆய்வரங்குகள் நிகழத்தியும் தமிழில் 'அறிவியல் களஞ்சியம்என்ற தொகுப்பு நூலை வெளியிட்டு வருவது போற்றுதற்குரியது.   பிற பல்கலைக்கழகங்களும் இம்முயற்சியில் பெரிதும் ஈடுபட்டுப் கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், பணிமனைகள் போன்றவற்றை நடத்தி அறிவியல் தமிழாக்கத்திற்கு வழிவகை செய்து வருகின்றன
 

தமிழச் சொல் வளம்:
 

ஒரு நாளின் ஆறு பகுதிகளை மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு  எனடறு ஆறு பொழுதுகளாகவும், ஆண்டின் ஆறு பகுதிகளை கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று ஆறு பருவங்களாகவும், வகைப்படுத்தி அதைப் பெரும்பொழுது, சிறுபொழுது என்று பெயரிட்டு அழைத்தனர் தமிழர். மலரின் பல்வேறு நிலைகளைக் குறிக்க அரும்பு, மொக்குமுகைமலர், அலர், வீசெம்மல் என்னும் பல்வகைச் சொற்களும் பெண்களின் ஏழு  வகைப் பருவங்களைக் குறிப்பதற்குப் பேதை, பெதும்பை, மங்கைமடந்தைஅரிவை, தெரிவைபேரிளம்பெண்  என்னும் சொற்களும்  பழங்காலத்திலேயே  பெற்றுள்ள ஒரு மொழியில்  புதிய கலைச்சொற்களைப் படைத்திட முடியாது என்று கருதுவது பொருந்தாத ஒன்று Design, Efficiency, Nurse, Underground water, Sky scraper,  winding,  coil, Turn ஆகிய சொற்களுக்கு  முறையேவிதி, திறப்பாடு, உழைச்செல்வான், கீழ்நீர், முகில்தோய் மாடம், கருணை, சுருள், சுற்று, ஆகிய  அருமையான தமிழ்ச்சொற்கள் காணப்படுவதை நோக்கி நம்மால் மகிழாமல் இருக்க முடியாதுதமிழிலுள்ள 'தற்கிழமை'என்னும் சொல் ; self induction என்னும் சொல்லை 'தன்தூண்டல்' எனவாக்கவும் 'பிறிதின் கிழமை' என்னும் சொல் Mutual induction என்னும் சொல்லைப் 'பிறிதி;ன் தூண்டல்எனவாக்கவும் வழிகோலின
 

'கலைச்சொல்லாக்கம்' என்பது தமிழைப் பொறுத்தவரை இயலாததோ, அன்றி மிகுந்த இடர்பாடுடைய ஒன்றோ அன்றுகாரணம், ஏராளமான வேர்ச்சொற்களையுடைய மொழியாக மட்டுமன்றி இயல்பாகவே ஒரு வகை நெகிழ்வுத் தன்மையுடைய மொழியாகவும்  தமிழ் அமந்துள்ளதாகும்.   அறிவியல் கல்வி தாய்மொழியிலேயே இருத்தல் வேண்டும்அத்தாய்மொழிக் கலவி சிறக்க வேண்டுமானால் அம்மொழியில் பல துறைக் கருத்துக்களை விளக்கும் சொற்கள் பலவும் இருந்தாக வேண்டும்தாய்மொழிக் கல்வியில்லாமல் வேறு மொழி மூலமாகக் கல்வி கற்கும்போது அவ்வேற்று மொழியை அறிந்து போதிய வல்லமை பெறுவதிலேயே ஒருவனுடைய முயற்சி வீணாகிறது. தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்டு வருவதன் மூலம் அந்நிலையை அறவே நீக்க முடியும்
 

தொன்மைச் சிறப்புடைய உலகமொழிகள் பலவற்றில் சிறந்ததோர் இடத்தைப் பெற்று விளங்குவது தமிழ். இச்சிறப்பு பழம்பெறும் இலக்கண இலக்கியங்களைத்  தமிழ் கொண்டுள்ளதால்  வந்ததேயாகும்.   வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்திற்குத்  துணை செய்யும் வகையில் பல துறை அறிவியல் சொற்களைத் தமிழுக்ககுக் கொண்டுவருவதன் மூலம் அவ்வறிவியல் துறை பற்றிய விளக்கங்களைப் பெறுவதுடன் நம் மொழிக்கும் பெருமை சேர்த்தவர்களாக முடியும்எனவே இயன்ற வரையில் அறிவியல் கலைச்சொற்களைத் (Scientific  technical  terms) தமிழில் உருவாக்கித் தருவது மொழியின் முன்னேற்றத்திலும் நாட்டு முன்னேற்றத்திலும்  அககறை கொண்ட அனைவரது கடமையுமாகும்.

 

முனைவர் பூ.மு.அன்புசிவா

உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர் - 641 028

பேச : 98424 95241,98438 74545.

 

 

 

 

 

 

 

 

 www.tamilauthors.com