பிரபல தமிழ் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்

 

பிரபல தமிழ் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திங்கட்கிழமையன்ற (20-10-2014) இரவு சென்னையில் காலமானார்.

அவருக்கு வயது
90. உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் காலமானார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில்
1925ஆம் வருடம் பிறந்த அவர், மின்வாரியத்தில் பணியாற்றிய கிருஷ்ணன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

நீலகிரியில் வசிக்கும் படுகர்களின் வாழ்வுச் சூழலின் பின்னணியில் எழுதப்பட்ட குறிஞ்சித் தேன், தூத்துக்குடி மீனவர்களின் வாழ்வைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட கரிப்பு மணிகள், பிஹார் கொள்ளைக்கூட்டத் தலைவர் டாகுமான்சியைச் சந்தித்து, அதனைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட முள்ளும் மலரும் ஆகிய இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

ராஜம் கிருஷ்ணன் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் கோவாவின் விடுதலை, சோவியத் நாடுகள, பெண் சிசுக் கொலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பல புனைவல்லாத நூல்களையும் எழுதியுள்ளார்.

நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன் விருது, கலைமகள் விருது, சோவியத் லாண்ட் விருது உள்ளிட்ட விருதுகளை ராஜம் கிருஷ்ணன் பெற்றுள்ளார். இவருடைய வேருக்கு நீர் நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.

இடதுசாரிப் பார்வை கொண்ட அவர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளில் தீவிரமாகச் செயல்பட்டார்.

கணவரின் மறைவுக்குப் பிறகு, முதியோர் இல்லத்தில் வசித்துவந்த ராஜம் கிருஷ்ணன, கீழே விழுந்து அடிபட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.


 

 

http://www.tamilauthors.com/writers/india/Rajam%20Krishnan.html

 

 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D

 

 

 www.tamilauthors.com