ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கத்திற்கு அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் நூல்கள் பரிசளிப்பு!

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் முனைவர் மாலினி ஆனந்தகிருஷ்ணனுக்குப் பாராட்டு மற்;றும் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களின் நூல்கள் ஆஸ்திரேலிய தமிழ்ச் சங்கத்திற்கு வழங்கும் நிகழ்ச்சி
24-10-2014 அன்று சென்னை, சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், டாக்டர் வாசுகி கண்ணப்பன் இறைவணக்கம் பாட, சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் நல்லாமூர் கோ.பெரியண்ணன் வரவேற்புரையாற்றினார்.

ஆஸ்திரேலிய எழுத்தாளர் முனைவர் மாலினி ஆனந்தகிருஷ்ணனைப் பாராட்டி விருதினை, வேளாண்மைத்துறை இயக்குநர், டாக்டர் எம்.ராஜேந்திரன், இ.ஆ.பெ., வழங்கி சிறப்பித்தார். திரைப்பட இயக்குநர் கலைமாமணி எஸ்.பி.முத்துராமன், புதுவைத் தென்றல் ஆசிரியர் புதுவை ம.தர்மராஜன், நம் உரத்தசிந்தனை ஆசிரியர் உதயம்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் இதயகீதம் இராமானுஜம் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

முன்னதாக அக்டோபர் மாத மாமணிகள் நினைவுக் கவியரங்கில் எண்ணற்ற கவிஞர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு மாம்பலம் ஆ.சந்திசேகர் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
கோவி. பழனி நன்றியுரையாற்ற டாக்டர் பெ.கி.பிரபாகரன் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.

  

 

 www.tamilauthors.com