தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013

 

னடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் இலக்கிய சாதனை இயல் விருது இவ்வருடம் (2013) திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு 28 ஜூன் 2014 அன்று ரொறொன்ரோ ராடிஸன் ஹொட்டலில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. கனடிய எழுத்தாளர் ஷ்யாம் செல்வதுரை விருதை வழங்கினார். இந்த விருது கேடயமும் 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலரான தியடோர் பாஸ்கரன் இந்த விருதைப் பெறும் 14வது ஆளுமையாவர். இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனது ஏற்புரையில் தியடோர் பாஸ்கரன் தமிழ் சினிமா, சூழலியல் போன்ற துறைகள் வளர தமிழில் அதற்கான புதிய கலைச் சொற்கள் உருவாக்குவது அவசியம் என்றார்.

தாரபுரத்தில் பிறந்த சு.தியடோர்பாஸ்கரன்
(73) சென்னை கிறித்துவக்கல்லூரியில் முதுகலைப்பட்டம்பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுற்சூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார்.

உயிர்மைபதிப்பகம் இவரது மூன்று நூல்களான‘ இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
(2006)’, ‘தாமரைபூத்ததடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) இவ்ற்றை பதிப்பித்தது. உல்லாஸ்கரந்தின் The Way of the Tiger என்றநூலை‘ கானுறைவேங்கை’ (காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். உயிர்மை, பசுமைவிகடன் பத்திரிக்கைகளில் இவரது பத்திவெளியானது.. காட்டுயிர்பற்றி இவர்எழுதிய The Dance of the Sarus(OUP) 1996 இல வெளிவந்தது. சென்ற ஆண்டு பென்குயின்பதிப்பகம் இவரைதொகுப்பாசிரியராக்க் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009இல் வெளியிட்ட்து. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர்காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலகநிதியகத்தில்(WWF-India) அறங்காவலராக உள்ளார்

1980இல் வெளிவந்த இவரதுநூல்
Message Bearers (Cre-A) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி புலமை முயற்சியாக கருதப்படுகின்றது. தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதானஸ்வர்ணகமல் விருதை 1997இல் பெற்றார். இந்நூலின்மொழிபெயர்ப்பு பாம்பின்கண் 2012இல் வெளிவந்த்து, இவரது History Through the lens: Perspectives on South Indian Cinema (Orient Blackswan) 2009இல் வெளியானது. தமிழில் சினிமாபற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார்- எம்தமிழர்செய்தபடம் (உயிர்மை 2004), மீதிவெள்ளித்திரையில் (காலச்சுவடு 2009). சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே (காலச்சுவடு ஜனவரி 2014இல் வெளியாகும்). 2003இல் தேசியதிரைப் படவிருதுகள் தேர்வுக்குழுவில் ஒருநடுவராக இருந்தார்.

2000இல் கம்பன் கழகத்தின் கி.வா.ஜா விருது பெற்றார்.
2010இல் கட்டுரைபிரிவில் கனடாதமிழ்கலை இலக்கியதோட்டம் பரிசுபெற்றார். 2001 இல் ஆன்ஆர்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ்சினிமாபற்றி போதித்தார். கீழ்கண்ட இடங்களில் உரைகள் நிகழ்த்தியுள்ளார். ஹைதராபாத் மத்திய,சிகாகோ, பிரின்ஸ்டன், ஆஸ்திரேலியன் நேஷ்னல், லண்டன் பல்கலைக்கழகங்கள், பாரிஸ் ப்ரான்லி ம்யூசியம்.

பறவைகளைஅவதானிப்பதிலும், நாய்வளர்ப்பிலும்புகைப்படமெடுத்தலிலும்தீவிர ஆர்வம் கொண்டவர். இவர்எடுத்தநான்குஇந்தியஇனநாய்கள்படங்கள்அஞ்சல்தலையாகவெளிவந்துள்ளன.

இந்திய அஞ்சல் பணியில் வேலை செய்த இவர்,
NationalDefence College, Delhi இல் ஒராண்டு பயிற்சி பெற்றார். அப்போது ரஷியா, மாரிஷியஸ், ஜெர்மனி முதலிய நாடுகளுக்கு பயணித்தார். ஜப்பானில் மூத்த அரசு அதிகாரிகளுக்கான பயிற்சிபெற்றார். ஐ.நா. சபையில்சார்பில் கென்யாநாட்டில் இரண்டுமாதம் ஆலோசகராக பணியாற்றினார் போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வுபெற்றபின், மூனறாண்டுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998–2001) பணியாற்றினார். மனைவிதிலகாவுடன் பெங்களூரில் வசிக்கின்றார்,. இவர்களுக்கு ஒருமகள் ஒருமகன் உண்டு.

விழாவுக்கு மண்டபம் நிறைய ஆர்வலர்கள் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.

 

 

 

 

 

 



 

 



 

 

 

 www.tamilauthors.com