பதினெண்கீழ்கணக்கு நூல்களில் பாடுபொருள் மாற்றங்கள்


கவிஞர் மு. சரளாதேவி


காதல் உயிரினத் தோற்றத்திலிருந்து நீடித்துத் தொடர்வது. கவிதையின் நிரந்தரப் பாடுபொருளாக இருப்பது. சங்கக் கவிதையின் காதல் திணைமரபு அடுத்தடுத்து வந்த கவிதைகளில் ஒன்றியும் விலகியும் வந்திருப்பதையும் பாடுபொருள்களில் ஏற்பட்ட மாற்றங்களையும் காணலாம்.

அரசியல், சமூக, சமயச் சூழல்களில் ஏற்பட்ட மாற்றங்களால் சங்கக் கவிதையின் திணைமரபில் பெரும் மாற்றம் நேர்ந்ததையும், அகம், புறம் என்றிரநு;து முரபு அறம், பொருள், இன்பம் என மாறியதையும், அறம் தலைமை பெற்றதையும் பதினெண் கீழ்க்கணக்குக் கவிதை நமக்கு உணர்த்துகிறது.

எனினும் சங்கமரபு அடியோடு அழிந்துவிடவில்லை. சுங்க அகக் கவிதை மரபில் அமைந்த ஆறு அகப்பொருள் நூல்களும் புறப்பொருள் மரபில் அமைந்த ஒரு நூலும்பதினெண் கீழ்க்கணக்குகில் உள்ளன. உள்ளடக்கத்தில் மாற்றமில்லை, வடிவில் மட்டும் மாற்றம் கொண்டவை அவை. கார்நார்ப்பது எனும் அகப்பொருள் நூலில், நூல் முழவதும் முல்லைத் திணை மட்டுமே இடம்பெறுகிறது. இது ஐந்திணைச் சங்க மரபிலிருந்து சற்று விலகியதாகும். பிற்காலத்தில் ஒரே ஒரு துறையை மட்டும் பாடுபொருளாகக் கொண்டு கோவை இலக்கியம் தோன்றுவதற்கு முன்னோடியாக அமைந்தது கார்நார்ப்பது.மேற்குறித்த ஆறு அகப்பொருள் நூல்கள் தவிர்த்துத் திருக்குறளிலும் நாலடியாரிலும் காமத்துப்பாலில் காதல் கவிதைகள் உள்ளன. அறம் பொருள் எனும் புறப்பொருளையும் இன்பம் எனும் அகப்பொருளையும் ஒரே நூலில் படைத்துத் தந்த முதற்புலவர் எனத் திருவள்ளுவரைக் கூறலாம். வள்ளுவர் களவு, கற்பு, எனும் பாகுபாடு, பிற அகப் பாட்டுத் துறைகள் ஆகியவற்றில் சங்க மரபைப் பின்பற்றியிருக்கிறார். ஆனால் ஒரு பெரும் மாற்றத்தைன் காhல் கவிih மரபில் கொண்டு வற்திருக்கிறார். அகக் கவிதையில் பரத்தை ஒழுக்கம் என்பதை அவர் நுழையவிடவில்லை. சங்க மருதத்திணைப் பாடல்களில் தலைவியின் ஊடலுக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட பரத்தையிற் பிரிவு, காமத்துப்பாலில் முற்றிலுமாக இல்லை. அதற்குப் பதிலாகக் கற்பனையான காரணங்களுக்குத் தலைவி ஊடல் கொள்வதாகக் காட்டுகிறார்.

'பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.' ( திருக்குறள், 
1311)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும யாரினும் என்று. ( திருக்குறள்,
1314
)

மரபுக்காக ஊடலைப் பாடினாலும் அது உவகைக்காகவே என்பது தெரிகிறது. தலைவன் மீது தவறு இல்லை எனினும், ஊடலைத் தொடர்ந்து வரும் கூடலின்பத்தின் மிகுதி கருதித் தலைவி ஊடுகிறாள் என வெளிப்படையாகவே வள்ளுவர் தெரிவிக்கிறார் (திருக்குறள்
,1321). பரத்தை ஒழுக்கம் பற்றிய தம் கண்டனத்தைக் காமத்துப் பாலில் அல்லாமல்' வரைவின் மகளிர்' எனும் அதிகாரத்தில் வன்மையாகத் தெரிவிக்கிறார். நாலடியாhர் 'கற்புடைமகளிர்' எனும் இயலில் பரத்தையிற் பிரிவு பற்றிப் பேசினாலும் ' பொதுமகளிர்' இயலில் பரத்தமையைக் கண்டிக்கிறது.

சங்க இலக்கியத்தில் காமம் ,காதல் உயர்ந்த மதிப்பீடுகளைத் தாங்கி நின்றது என்பதில் ஐயமில்லை 'காதலின் அறம்' என்பது சங்கப் பாடலில் உள்ளமைந்திருந்த ஒன்று. ஆனால் பதினெண' கீழ்க்கணக்கின் தலைசிறந்த நூலாகிய திருக்குறளில் அறம் காதலிலும் இல்லறத்திலும் வெளிப்படையாக வற்புறுத்தப்படும் கூறாக மாறியதைக் காணலாம்.

மேலும் தனிமனிதனு;க்கு உரிமையானது இன்ப வாழ்வு, அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு, அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு என்றும் அறவழியில் நின்று பொருள் ஈட்டி வாழவதுதான் இன்பமான வாழ்விற்கு வகைசெய்யும் என்னும் அறக்கோட்பாட்டை வழியுறுத்தி பொதுவாழ்விற்கும், தனிவாழ்விற்கும் அடிப்படையானது அறம் என்பதை வலியுறுத்துகிறது.

மேலும் ஒழுக்கத்தை வள்ளுவம் வலியுறுத்துகிறது. மனிதனுக்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கித்துவம் வாய்ந்தது என்பதை ஒரு அதிகாரம் முழுவதும் பதிவு செய்திருக்கிறார்.

'ஒருக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் (திருக்குறள் ,
1)

'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல. ( திருக்குறள்,
39 );


இன்னா நாற்பது

கபில தேவர் இயற்றிய இன்னா நாற்பது மனித வாழ்வில் செய்யகூடாத காரியங்களை அதாவது துன்பம் தரக்கூடிய செயல்கள் எவை என்று விளக்கமாக கூறுகிறது.

'பிறன் மனையாள் பின் நோக்கும் இன்னா
மறம் இலா மன்னர் செருப் புகதல் இன்னா
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா
திறன் இலான் செய்யும் வினை. ( இன்னா நாற்பது
38)


பிறன்மனைவியை விரும்பித் தொடர்வது துன்பமாகும், வீரமில்லாதவன் போர்க்களத்தில் செல்லுதல் துன்பமாம், விரைந்து செல்லுதல் கடிவாளம் இல்லாத குதிரையின் முதுகில் ஏறுதல் துன்பமமாம், செய்யத் தெரியாதவன் செய்யும் காரியம் துன்பமாம். என்று கூறுவதில் இருந்து மனிதன் நிலதடுமாறாமல் வாழ்க்கையை வாழும் வழிமுறைகளை கூறுகிறார். ஏதை செய்தாலும் அதை தெரிந்துகொண்டு

களவழி நாற்பது

களவழி நாற்பது போர்க்களம் பற்றிய பாடல்களின் தொகுதியாகும். சுங்க இலக்கியத்தி;ல் புறம் கூறிய கருத்துக்கள் எதிரியை வெல்லுவது குறித்தும் எப்படி போர் செய்தார்கள் பகைவரின் படைகளை தகர்க்கும் வழிமுறைகளை படிப்படியாக கூறினார்கள் . ஆனால் முற்றிலும் மாறுபட்ட போர்க்கலத்தின் கோரத்தை விவரிக்கும் பாடுபொருளை கொண்டதாக களவழி நாற்பது அமைந்திருக்கிறது. .இந்நூலின் ஆசிரியர் பொய்கையார் போர்க்களம் குறித்து கூறியிருக்கும் செய்திகள் படிப்பவர் நெஞ்சை பதறவைத்து மெய் சிலிர்க்கும் விதமாக இருக்கிறது.

'தெரிகணை எக்கம் திறந்த வாய் எல்லாம்
குருதி படிந்து உண்ட காகம், உரு இழந்து,
குக்கில் புறத்த சிரல் வாய செங் கண் மால்
தப்பியார்அட்டகளத்து,
5

சிறந்த அம்புகளாலும், பிற கருவிகளாலும் புண்ணாக்கப்பெற்ற உடலிலிருந்து வழியும் இரத்தத்தைக் குடித்த கரிய காகங்கள் நிறம் மாறின, செம்போத்துப் பறவைகள் போல் உடல் மாறின, மீன்கொத்திப் பறவையின் சிவந்த அலகைப் போல் மூக்குகளையும் பெற்றவைகளாயின.

நாண்மணிக்கடிகை

விளம்பி நாகனார் இயற்றிய நாண்மணிக்கடிகை அறக்கருத்துக்களை வலியுறுத்துகிறது. பொய்யாமை புகழை ஏற்படுத்தும், அறியாமை முறையற்ற தீய செயலைச் செய்யத் தூண்டும், கல்லாமை அறியாமையை ஏற்படுத்தும், கல்வி அறிவை உண்டாக்கி ஒளிபெறச் செய்யும் போன்ற கருத்துக்களை முன் வைக்கும் இந்தப் பாடல் அதற்குச் சான்றாக இருக்கும்.

'புகழ் செய்யும், பொய்யா விளக்கம், இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை காணாக்
குருடராச் செய்வது மம்மர் இருள் தீர்ந்த
கண்ணராச் செய்வது, கற்பு.
22

பழமொழி நானூறு

முன்றுறை அரையனார் இயற்றிய பழமொழி நானூறு ஒவ்வொன்றிலும் ஒவ்வொறு நீதியை போதிக்கிறது. அதில் ஒரு பாடலில் வரும் கருத்து என்னவென்றால்
அறிவினாலே வந்த பெருமைகளே பெருமைகளாகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாதல் எங்கனமாகும், பொலிவு பெறச் செய்தலையுடைய இரத்தினாபரணமும், பொன்னாபரணமும், சந்தனமும், மாலையும் ஆகிய இவை போன்ற அணி வகைகள் எல்லாம், உடுத்தும் ஆடைக்குப் பின்னரே கருதி மதிக்கப்படுவன என்பனவாகும்.

ஆறிவினால் மாட்சியொன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்? போறியின்
மணிபொன்னும் சாந்தமம் மாலையும் இன்ன
அணியெல்லாம் ஆடையின் பின்.


'அணியெல்லாம் ஆடையின் பின் என்பதே இந்த நூற்பாவின் கருத்து சங்க இலக்கியம் கூறும் அகம் புறம் தாண்டி மனிதனின் பகுத்துணரும் அறிவை பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதே இதன் சிறப்பு.

சிறுபஞ்சமூலம்

காரியாசன் அவர்கள் இயற்றிய சிறுபஞ்சமூலம் என்பது சிறிய வேர்கள் என்று பொருள்படும். இந்த வேர்கள் உடல் நலத்தை பேணும் உயிர் நலத்தை பேணும் அது போல இந்த நூற்பாவில் அமைந்துள்ள கருத்துக்கள் மனிதனின் உள்ளத்தை பேணும் என்ற கருத்தோடு அமைந்துள்ளது.

கள்ளான், சூது என்றும் கழுமான், கரியாரை
நள்ளான், உயிர் அழுங்க நா ஆடான், எள்ளானாய்,
ஊன் மறுத்துக் கொள்ளானேல் ஊன உடம்பு எஞ் ஞான்றும்
தான் மறுத்துக் கொள்ளான் தளர்ந்து.
19

பிறர் பொருளைக் களவு செய்யாமலும், சூதாடாமலும், கீழ்மக்களுடன் நட்பு கொள்ளாது, பிறர் மனம் வருந்தும்படி வன்சொற் கூறாமலும், புலால் விரும்பானாய் இருப்பவன் மீண்டும் பிறக்கமாட்டான்; என்று வீடுபேற்றை ,அறத்தை, நீதியை போதிக்கும் வகையில் சிறப்பான கருத்துக்களை முன் வைக்கிறது.


 

கவிஞர் மு. சரளாதேவி
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
ஈச்சனாரி , கோவை.