ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் - சிறப்பிதழ்

அகில்
 

ஞானம் சஞ்சிகையின் 'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் - சிறப்பிதழைப் பார்த்தேன். வியர்ந்தேன். மகவும் நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் கனடா, அமெரிக்க, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிஸ், ஜெர்மனி, அவுஸ்ரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வாழும் படைப்பாளிகளின் ஒரு தொகுப்பாக இதை நான் பார்க்கிறேன்.

கட்டுரை, சிறுகதை, கவிதை, நேர்காணல்கள் என ஆக்கங்கள் பிரிக்கப்பட்டு வாசிப்பு இலகுவாக்கபட்டுள்ளது.

இத்தொகுப்பின் வாயிலாக புலம்பெயர் தமிழர்களின் வலி, வேதனை, மன அவசங்கள், கருத்தாக்கங்களை உணரக்கூடியதாக இருக்கிறது.

ஈழத்து இலக்கிய வரலாற்றின் ஒரு வகைமைக் கூறான புலம்பெயர் இலக்கியத்தைச் சாறு பிழிந்து கொடுத்திருப்பதைப் போன்று அமைந்திருக்கிறது இந்நூல்.