'தோழர் ஐ.மாயாண்டி பாரதியின் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் இளைஞர்களை ஈர்த்தவை!'

 

தோழர் பெ.மணியரசன்   
           

 

ந்திய விடுதலைப் போராட்டத்தில் 13 ஆண்டுகள் சிறையில் கழித்த, மாபெரும் ஈகியும் சமத்துவ சமூகம் படைக்க தன்னை ஒப்படைத்துக் கொண்டு, மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியத் தலைவரும் என்னுடைய அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நெருங்கியத் தோழருமான பெரியவர் ஐ.மாயாண்டி பாரதி அவர்கள், காலமான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

சில மாதங்களுக்கு முன், மதுரையில் அவரை நானும், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.ஆனந்தன், ரெ.இராசு ஆகியோர் நேரில் சென்று சந்தித்தோம். அப்போது
98 அகவையிலும் அவர் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாக இருந்ததை பார்த்து மகிழ்ந்தேன். 100ஆவது ஆண்டு விழாவை மிகச்சிறப்பாக நடத்துவோம் என்று அவரிடம் கூறிவந்தேன். ஆனால், அதற்குள் அவர் மறைவெய்தியது பேரிழப்பாகும்.

அரசியல் விடுதலை, சமத்துவ சமூகம், முற்போக்குக் கருத்துகள் ஆகியவற்றின் வடிவமாக விளங்கியவர் ஐ.மா.பா. அவர்கள். தீக்கதிர் இதழில் வந்த அவரது கட்டுரைகள், அவரது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவை. அவரது எழுத்தாற்றலும், சொற்பொழிவாற்றலும் எப்போதும் இளைஞர்களை ஈர்க்கும்.
98 அகவையிலும் மக்களுக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டு செயல்பட்ட தோழர் ஐ.மா.பா. அவர்களின் உணர்வை, இன்றைய இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில், தோழர் ஐ.மா.பா. அவர்களுக்கு, இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்னணம்,

பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்