இலக்கியத்தில் கல்வியின் சிறப்பு
 

முனைவர் பூ.மு.அன்புசிவா


ன்றைய உலகின் இன்றியமையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்ரைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப் படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியவசிய தேவையாக இருக்கிறது.


கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்க்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்க்கு காரணம் அவன் கற்ற கல்வியேகற்றவனுக்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும்.இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரைகல்வி கற்க்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.


யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்று குறிப்பிடுகிறார். ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் கல்வி என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாக கூறுகின்றார்.


'கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக' என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.


கல்வி என்பது தொடர்பு
(communication) என்பர். மனிதன் மட்டுமின்றி உயிரினங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. தேனீ, எறும்பு போன்றவற்றில் தொடர்பு மிக முக்கியமானது. செய்திகளைப்பரிமாறிக் கொள்வதோ, உணர்ச்சிகளை வெளிப்படுத்திக்கொள்வதோ மட்டும் தொடர்பு ஆகாது. அது பண்பாட்டைப் பரிமாறிக்கொள்வது. அவ்வாறே கல்வி. அது இயல்புணர்ச்சி சம்பந்தப்பட்டதல்ல. கல்வியில் கற்பிப்பவரின் பங்களிப்பும் இருக்கிறது. தாம் கற்ற ஒன்றை அப்படியே மாணவனுக்கு அளிப்பதல்ல கல்வி. தாம் கற்றவற்றுடன் தன் அனுபவங்களையும் சேர்த்து, இணைத்து ஒரு புதுப்பொலியுடன் மாணவனுக்கு அளிப்பதே கல்வி. அதாவது, கற்றலும் கற்பித்தலும் இணைந்ததே கல்வி. எனவே கல்வி என்பது, பண்பாட்டின் தொடர்ச்சி, புதுமைகள் சேர்க்கப்பட்டு, படைப்பாற்றலுடன் மிளிர்கின்ற தொடர்ச்சி.


கல்வி, மனிதகுலத்துக்கே வழிகாட்டியாக அமைவது. அதனைப்புரிந்து கொள்வதும் வாழ்க்கையில் அதன்பங்கை அறிந்து கொள்வதும் இன்றியமையாதது. கல்வி என்பது அறிவு சார்ந்தது. அறிவு என்றால் என்ன? அறிவு, புலன்கள் கொண்டு வரும் அனுபவங்கள். அத்துடன் மனத்தின் செயல்பாடுகளும் இணைந்தது. அறிவு, வெறும் அனுபவத்தைவிடச் சற்று அதிகமானது. மாம்பழத்தை உண்கிறோம். அது சுவையாக உள்ளது; ஓர் இனிய அனுபவம் அது. இது அறிவாகாது. மாம்பழம் சுவையானது என்பது அணில்களுக்குக்கூடத் தெரியும்! மாம்பழத்துக்கும் மரத்தின் பலபகுதிகளுக்கும் உள்ள தொடர்பு, மாம்பழத்துக்கும் சூழலுக்கும் உள்ள தொடர்பு, மாம்பழத்துக்கும் நலவாழ்வுக்கும் உள்ள தொடர்பு. மாம்பழத்துக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு என்றெல்லாம் அறிவதே அறிவு. தீ, சுடும். இது ஓர் உண்மை. இதை அனுபவத்தின் மூலம் ஒரு சிறுவன் உணரும்போது அவனுக்கு அது ஓர் அறிவு ஆகிறது. இந்த அறிவைப் பயன்படுத்தி, மேலும் தீயினால் துன்பம் வராது பாதுகாத்துக் கொள்ளும்போது அறிவு, அவன் வாழ்க்கையின் இயல்பான ஓர் ஆற்றல் ஆகிறது. இவ்வாறு இயல்பான ஆற்றலை வளரச்செய்வதே கல்வி என விளக்குகிறார் விவேகானந்தர். 'உண்மையான கல்வியை இன்னும் நம்மால் வகுத்துக்கூற இயலவில்லை. ஆனால் உண்மையான கல்வி, தகவல்களைச்சேகரிப்பதல்ல, அது மனத்தின் இயல்பான ஆற்றலை வளரச்செய்வது அல்லது மனிதனைச் சரியாக, திறமையாகச் சிந்திக்கப்பயிற்றுவிப்பது என ஒருவாறு கூறலாம்.'


கல்வி என்பது விழிப்புணர்ச்சி பெறுவதற்கான ஒருமுறை எனலாம். மனிதனில் சில திறமைகள், ஆற்றல்கள் உள்ளன. ஆனால் அவை விழிப்புறா நிலையில் உள்ளன. கல்வியின் மூலம் அவை விழித்தெழுகின்றன. உண்மையில் ஆசிரியர் விழித்தெழச் செய்கிறார்.


கல்வியில் பயிற்சி முக்கிய இடத்தைப்பெறுகிறது. விழித்தெழுந்த ஆற்றல்கள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும். அதற்குப் பயிற்சி வேண்டும். அறிவு என்பது செயல்முறை வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது ஏதாவது ஒரு திறமையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். திறமை பெறப்பயிற்சி இன்றியமையாதது. இன்றைய கல்வியில் பயிற்சி என்பது முதலிடம் பெற வேண்டும். பொதுவாக, பயிற்சி எனும்போது அது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான ஒரு முயற்சி, புறத்தே செய்யப்படுகின்ற ஒன்று என்றே கருதப்படுகிறது. ஆனால் விவேகானந்தர் பயிற்சி என்பதை ஓர் அகச்செயல்பாடாகக் கருதுகிறார். மன உறுதி
(Will)  யின் போக்கையும் வெளிப்பாட்டையும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, பயனளிக்குமாறு செய்கின்ற பயிற்சியே கல்வி என அவர் கூறுகிறார். அடுத்து, வழிகாட்டுதல். சிக்கல் நிறைந்தது வாழ்க்கை. எனவே வழிகாட்டுதல் முக்கியமானதாகிறது. படிப்பதும், படித்தபின்பு வேலைக்குச் சேர்வதும் பொதுவாக எங்கும் நடப்பது. ஆனால் ஆவனுக்குச் சரியான வழிகாட்டுதல் இருக்குமானால் அவனே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்த முடியும். வேலைதேடுவதில் மட்டுமின்றி மாணவனின் வாழ்க்கைக்கும் வழி காட்டுதல் தேவை; குடும்பத்துடனும் வெளியுலகத்துடனும் உறவு-களை மேம்படுத்த அவனுக்கு வழிகாட்டுதல் தேவை. தனிநபரோ, பள்ளியோ, தனியார் நிறுவனமோ, அரசாங்கமோ எதுவானாலும் கல்வி என்றால் அதில் இந்த மூன்று அம்சங்களும் இருக்க வேண்டும்.


'கல்வியால் மட்டுமே மனிதன் மனிதனாக முடியும். கல்வி அவனை எவ்வாறு உருவாக்குகிறதோ அவ்வாறே அவன் உருவாகிறான். அதற்குமேல் அவன் வளர்வதில்லை.' கல்வியும் வாழ்க்கையும் பிரிக்க இயலாதன. கோடிக்கணக்கோர் கல்வி பெறக்கூடும். ஆனால் பெரும்பாலோருக்குக் கல்வி ஏதோ ஒரு நிகழ்வு உணர்வற்ற ஒரு நிலையில் நடைபெறுவது. பணம் தேடுதல் அல்லது சம்பாதிப்பது என்பதுதான் அதன் பயன் என்று அவர்கள் கருதுகின்றனர். கல்வியின் மதிப்பு பற்றியோ அதன் பொருள் பற்றியோ அல்லது அதன் பயன்பற்றியோ அவர்கள் அக்கறைப்படுவதில்லை. கல்விக்கும் வாழ்க்கைக்கும் உள்ள பிணைப்பு நுட்பமாக ஆராயத்தக்க தொன்று. கற்றல் கற்பித்தல் பற்றி, அவற்றின் அடிப்படைகள் பற்றி ஆராய்வது கல்வியின் கோட்பாடு எனும் தனித்துறையாக இன்று வளர்ந்து வருகிறது. வாழ்க்கைக்கும் கல்விக்கும் உள்ள பொதுவான அடிப்படையை இத்துறை ஆராய்கிறது. இந்தத்துறையில் விவேகானந்தரின் பங்களிப்பு சிறப்பானது.


தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நாடுகளிடையே வளர்ந்துவரும் பண்பாட்டுறவுகளும் இன்றைய சமுதாயத்தில் தொடர்ந்து மாற்றங்களைக் கொண்டு சேர்க்கின்றன. இப்புதிய சமுதாயத்தில் பாங்குற வாழ்வதற்குத் தகுதிபடைத்திருப்பவர்களாகக் குழந்தைகள், மாணவர்களை, இளைஞர்களை உருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாக அமைதல் வேண்டும். பரம்பரைப் பெருமைகளைக் கற்பிக்க வேண்டும் எனச்சிலரும் மனிதநேயக்கருத்துக்களை, மனிதனின் முழுவளர்ச்சிபற்றிய கருத்துக்களை கற்பிக்க வேண்டும் எனச்சிலரும் பேசுகின்றனர். இருதரப்பினரும் அறிவுலகத்தைச் சேர்ந்தவர்களே!


மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு கல்வி மூலம் சூழலை அறிவை சமூகத்தை பண்பாடு மறபை ஆராய்ந்து கொள்ளலாம்.


கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை மேற்கூறிய வாசகத்தை ஆராய்ந்த போது கற்றவனின் சிறப்பை கணலாம். அதாவது இக்கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை. என்பது கல்வி கற்றவர் மரணித்து விடுவார். ஆனால் அவர் கற்ற, கற்ப்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும். இதனையே கல்விக்காக உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை எனக் கூறப்படுகிறது.


தான் இன்புறுவது உலகின் பிறர் கண்டு காமுருவர் கற்றரிந்தார். ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப் படுகிறது.


மாந்தர் தம் கற்றனைத்தூரும் அறிவு என்பது வள்ளுவர் கண்ட வாழ்க்கை நெறியாகும். கல்வி மனித அடிப்படை உரிமைகளில் ஒன்று. அறிவி யற் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கு அவசியமானவை. ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை.


கல்வி தொழிலுக்கு வழி காட்டுகிற்து. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்;காக உதவும் கருவி யாகும். அறிவி யலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம்படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும்.


கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும்.


எனவே கல்வியானது ஒரு மனிதனின் முக்கிய தேவையாக இருக்கிறது. எந்தவொரு சமூகமும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொருத்த வரை மிகவும் தாழ்வாகவும் இழிவாகவும் கருதப்படும்.

எனவே இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்துவத்தை அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும் இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோர் பிரஜையாக வாழ கல்வி உதவுகின்றது.

இன்றைய உலகில் இன்றிய மையாத ஒன்றாக திகழ்வது யாதெனில் கல்வியே ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள் ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அத்தியா வசிய தேவையாக இருக்கிறது.

கல்வியின் சிறப்புப் பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும்.

கற்றவனுக்கு தனது நாடு ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும். இப்படி கல்வி கற்றவனின் சிறப்பு இருக்க ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது மிகவும் சிரமமானதாகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்குக் கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் 'கல்வி' என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாகக் கூறுகின்றார்.

'கற்க கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத்தக' என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

'எண்' என்று சொல்லப்படுவதும் 'எழுத்து' என்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்கு கண் என்று சொல்லப் படுவர். இந்த அளவிற்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.


'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர்' கற்றவரின் நிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.

கல்வி உடையவர் எல்லா மக்களிடமும் நன்றாக பழகிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அவர்களுடன் சந்தோசமாக சேர்ந்து வாழ்வதையே விரும்புவர். இவர்களை பிரிக்கின்ற போது இனி நாம் எப்போது நாம் மீண்டும் சேர்வோம் என்ற நினைவிலேயேபிரிகின்ற தன்மை கற்றவரிடம் இருக்கும் தன்மையாகும்.

மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். கல்வி என்பது ஆய்வு, கல்வி மூலம் சூழலை, அறிவை, சமூகத்தை, பண்பாடு, மரபை ஆராய்ந்து கொள்ளலாம்.

கல்விக்காக உயிர் கொடுத்தோர் என்றும் மரணிப்பதில்லை. மேற்கூறிய வாசகத்தை ஆராய்ந்த போது கற்றவனின் சிறப்பைக் காணலாம். அதாவது இக் கல்விக்கா உயிர்கொடுத்தோர் மரணிப்பதில்லை. கல்வி கற்றவர் மரணித்து விடுவார். ஆனால் அவர் கற்ற கற்பித்த கல்வி இந்த உலகம் அழியும் வரை இருந்தே ஆகும்.

தான் இன்புறுவது உலகின் பிறர்கண்டு காமுறுவர் கற்றறிந்தார். ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப்படு கிறது.

அறிவியற்க் கல்வி, சமூக அறிவியற் கல்வி, அழகியல் கல்வி ஆகிய மூன்றும் வாழ்க்கைக்கும் அவசியமானவையாகும். ஒருவனுக்கு பெருமையையும் புகழையும் தரக்கூடிய செல்வம் கல்விச் செல்வமே அன்றி வேறில்லை.

கல்வி தொழிலுக்கம் வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் ககல்வியை பயன்படுத்த வேண்டும்.

கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வி யானது ஒரு மனிதனின் முக்கிய தேவை யாக இருக்கி றது. எந்த வொரு சமூக மும் கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொறுத்த வரை மிகவும் தாழ் வாகவும் இழிவாகவும் கருதப் படும்.

எனவே இவ்வாறு பார்க்கும் போது கல்வியின் முக்கியத்து வத்தை அறிய முடிகின்றது. ஒருவன் கல்வி கற்றால் எவ்வாறு சமூகத்தில் மதிக்கப் படுகின்றான் என்பதை விளங்க முடியும். இவ்வாறு கல்வியை கற்று சமூகத்தில் சிறந்ததோர் பிரஜையாக வாழ கல்வி உதவுகின்றது.



முனைவர் பூ.மு.அன்புசிவா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
- 641 028
பேச
: 9842495241,98438 74545.