தொல்காப்பிய மரபியலும் மகரிஷியும்

எம்.ஜோதி லட்சுமி

மனிதனின் வாழ்வு ஆதிகாலந்தொட்டு நடந்து வருகிறது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இயற்கையின் அமைப்புகளும் மனிதனுடைய அறிவும் சேர்ந்தே இயக்கமாகவும், விளைகளாகவும் இருக்கக் காண்கிறோம். அவ்வாறுஇன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்காலத்தில்மக்களுடையவாழ்க்கையும்,ஆதிகாலத்தில்
1மக்களுக்கிருந்த வாழ்க்கை வசதி தேவைகளும் நிறைய வேறுபடுகின்றன. இயற்கையின் தன்மையைஉணர்ந்து கொள்வது இறையுணர்வு எனப்படுகிறது. கடவுள், தெய்வம், இயற்கை, பிரம்மம், சுத்தவெளி என்ற சொற்கள் எல்லாம் இயற்கையைப் பற்றியவையே. இப்பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்களின் அறிவுநிலை எவ்விதம் செயல்படுகின்றது? இதன் மூலத்தோற்றம் எங்கிருந்து உருவானது? என்பன போன்ற கேள்விகளுக்கு தொல்காப்பியரின் மரபியல் கோட்பாடுகளையும் மகரிஷியும் பரிணாம சிந்தனைகளையும் கருத்தில் கொண்டு ஆய்ந்து அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
 
தொல்காப்பியரின் மரபியல் கோட்பாடுகள்

 எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று அதிகாரங்களை
27 இயல்களை பகுத்து தொல்காப்பியரால் எழுதப்பெற்ற இலக்கண நூல் 'தொல்காப்பியம்' ஆகும். தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தின் இறுதி இயலாகச்' செய்யுளியலில் மரபியலை வைத்திருக்கின்றனர்.

உந்தியில் இருந்து தொடங்குகின்ற எழுத்தை முதலாக்கி சொற்களை அடுத்து உரைத்து, பொருளில் வாழ்க்கையை எடுத்துரைத்து, இறுதியாக மரபியலில் இந்த
உயிரினங்களின் மூலங்கள் எது என்பதை வரையறுக்கிறார்.

இதைத்தான் மரபியல்
583 வது சூத்திரத்தில்,

'ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனோடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே'


என்று மேல் இளமைப்பெயர் பற்றிய மரபு கூறும் வழி உலகத்துப் பல்லுயிர்களையும் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிர் ஈறாக அறுவகைப்படுத்தி, அறுவகை உயிர்ப்பாகுபாடு பற்றி விரித்துரைக்கிறார்.

ஓரறி உயிராவது உடம்பினால் உற்றுணரும் ஓரறிவினையுடையது, ஈரறிவுயிராவது உற்று உணர்ந்து, அவ்வறிவுடன் நாவினாற் சுவைத்தறியும் அறிவினையுடையது. மூவறிவு 'உயிராவது' உடம்பினால்' உற்றறிதலும் நாவினாற்சுவைத் தறிதலும், அவ்விரண்டடுடன் மூக்கினால் முகர்ந்தறிதலும் ஆகிய மூன்றறிவினை உடையது.. நாலறிவுயிராவது, உடம்பினாலும், நாவினாலும், மூக்கினாலும் அறியப்படும் அம்மூன்றுடன் கண்ணினாற் கண்டறிதலும் ஆகிய நான்கறிவினையுடையது. ஐயறிவுயிராவது உடம்பினால் உற்றறிதல் நாவினாற் சுவைத்து அறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல், சுவைத்தறிதல், மூக்கினால் முகர்ந்தறிதல், கண்ணினாற் கண்டறிதல் ஆகியவற்றுடன் செவியினாற் கேட்டறிதலும் ஆகிய ஐந்தறிவினையயுடைது, ஆறறிவுயிராவது மேற்குறித்த ஐம்பொறிகளால் அறியும் ஐம்புலணர்வுகளோடு மனத்தினால் சிந்தித்தறிதலும் ஆகிய ஆறறிவினையும் ஒரு சேரவுடையதென நுண்ணர்வினால் அவற்றின் உணர்வினைக் கண்டுணர்ந்தோர் உயிர்களை எல்லாம் ஆறு வகையாக முறைப்படுத்தி உணர்த்தினர் என்று தொல்காப்பியர் தம் மரபியலில் குறிப்பிட்டுள்ளார்.

மகரிஷியின் பரிணாம சிந்தனைகள் விஞ்ஞானிகள் 'கிராவிட்டி' என்ற வார்த்தையின் மூலம் பிரபஞ்சத்தின் மூல ஆற்றலைக் குறிப்பிடுகின்றார். இந்த மூல ஆற்றலைப் பிரம்மம், தெய்வம், கடவுள் என்று நம் முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். உலகில் வாழுகின்ற உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவான அடிப்படைத் தேவைகள் மூன்று ஆகும். அவை உணவு, உறைவிடம், பாலுணர்வுத் தேவை என்பனவாகும்.

இறைநிலையில் செயல் ஒழுங்கமைப்பைத்தான் தத்துவஞானி வேத்தாத்திரி மகரி
ஷியவர்கள் பேரறிவு என்று கூறி விளக்குகிறார்கள்.

'முந்தையோர்கள் அகத்தவத்தால் முற்றணர்ந்த போதிலும்
மொழிவதற்கு உவமையின்றி முட்டிமோதி நின்றனர்...'

                                                                                         - ஞானக்களஞ்சியம்
11 பாடல் 1650

அந்த இறைநிலையின் தன்மைகள் ஒன்றன. அறிவு நிலைப்பற்றி உணர்ந்த தாயுமானஅடிகள்'அறிவன தெய்வமோ' என்று போற்றுகிறார். இறைநிலையின் பேரறிவு என்ற தன்மையைச் சார்ந்த விளக்கங்கள் மனித வாழ்வை மேம்படுத்தும்.

இறைநிலை

இறைநிலையைத் தூயவெளியாக உணர்ந்த ஞானியர் பலர் அப்பரவெளி எவ்வாறு விண்ணாகி பஞ்சபூதங்களாகி பிரபஞ்சத் தோற்றங்களாகவும் உலகில் உயிரினங்களாகவும் வந்தது என்பதை விளக்கமுடியாமல் விட்டுவிட்டனர்.

மூலப்பொருளாக உள்ள இறைவெளியிலிருந்து தான் அனைத்துத் தோற்றங்களும் வந்திருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் அனைவருக்கும் புரிந்துவிடும் என்பதைத் தத்துவஞானி நன்கு விளக்குகிறார்கள்.

'சூனியத்தை அணு நிலையைக் கொண்ட ராய்ந்தே
சூட்சுமமாய் யூகித்து விளக்கிக் கொண்டேன்'

                                                                                       - ஞானமும் வாழ்வும் பாடல்
27

பிரபஞ்சத்திலுள்ள தோற்றங்கள் அனைத்தும், அடிப்படையில் விண்ணும் நுண்ணும் பகுதியால் ஆனவை என்பதையும், ஒவ்வொரு விண்துகளும் விரைத்து சுழலும் தன்மையுடையது என்பதையும்' விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும்' உணர்ந்துள்ளனர் இக்காரணத்தால் தான் விண்ணாலான பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்தும் சுழற்சி இயக்கத்தில் உள்ளன என்பதை அறியமுடிகின்றது.

இறைநிலையின் தன்மைகள்

பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்தும் சுத்தவெளியிலேயே தோன்றி'அதிலே'மறைந்து கொண்டே உள்ளன. எல்லையில்லா அப்பெருவெளியில் குறைவு ஏற்படுமா? அதனால் தான் அது வற்றாயிருப்பு என்றாகிறது. பேராற்றல் பிரபஞ்சத் தோற்றங்கள் யாவும் இயக்க நிலையில் சுத்த வெளியில் தான் மிதந்து கொண்டிருக்கின்றன. அனைத்திலும் இயக்க ஆற்றலாகவும், அனைத்தையும் ஏந்திக் கொண்டும் இருக்கும் வெளியே பேராற்றல் உடையதாகும்.

பேரறிவு

எந்த ஒரு பொருளிலும் பிரபஞ்சத் தோற்றங்களிலும் விளைவுகளிலும் மாற்றம் பெறாமல் இயக்கச் சிறப்பாக உள்ள ஒழுங்மைப்பே பேரறிவு எனப்படுகிறது. இது சுத்த வெளியின் தன்மையின்றி வேறில்லை.

காலம்

இறைநிலையில் தன்னிறுக்கம் என்ற தன்மையும் அதிவிரைவில் விட்டு விட்டு அழுத்தும் நுண்ணதிர்வும் இயல்பான தன்மைகளாக உள்ளன. இறுக்க ஆற்றலால் துகள்காளக மாறுவதும் விலக்கு ஆற்றலால் அலையாகி சுத்த வெளியாக மாறும் இருநிலைகளிடை அமைந்த இடைவெளியே காலம் எனப்படுகிறது.

வான்காந்தம்

பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்தும் சுத்த வெளியில்தான் மிதந்து கொண்டிருக்கின்றன. இரண்டு நட்சத்திரங்களுக்கிடையே அல்லது இரண்டு கோள்களுக்கிடையே உள்ள சுத்தவெளி, காந்தத்தன்மையாகிய இறைத்துகளால் தான் நிரம்பப் பெற்றுள்ளது.

விண் சுழல்வதால் விண்ணின் சேர்க்கையினால் உருவான நட்சத்திரங்கள் முதலான ஒவ்வொரு தோற்றமும் சுழன்ற வண்ணம் உள்ளது. ஒவ்வொரு விண்ணிலிருந்தும் காந்த அலை உருவாகித் தள்ளும் ஆற்றலாக வெளிப்பட்டுக் கொண்டே உள்ளது. இந்த காந்த ஆற்றலையே வான்காந்தம் என மகரி
ஷியவர்கள் விளக்குகிறார்கள்.

ஜவீகாந்தமும் கருமையாகும்

தனிமமாக சுழன்றோடும் அணுக்கள் (விண்) வெளிப்படுத்துகிற காந்த அலையும், பருவுடலாக அமைந்துள்ள பஞ்சபூத கூட்டமைப்புலிருந்து வெளிப்படும் வான்காந்த அலையும் இணைந்து அந்தபருவுடலினூடே சுழன்றோடும் போது பருவுடலில் உள்ள அணுஅடுக்குகளின் ஒருங்கிணைப்பு சீர்மை பெறுகிறது. இத்தகைய காந்த ஒட்டச்சீரமைப்பை ஒருமுனை ஓட்ட ஒழுங்கமைப்பு என்றும் துருவ ஒட்ட ஒழுங்கமைப்பு என்றும் கூறலாம்.

உயிரினங்களும் பஞ்சபுல மலர்ச்சியும்

உணரும் சிறப்பைப் பெற காரணமாய் உள்ள காந்தம் தற்பொழுது சவீகாந்தம் எனப்படுகிறது. ஓரறிவு ஜீவனாகத் தோன்றிய அந்த உயிரினம் தனது ஆற்றலை இருவழிகளில் செலவிட வேண்டியுள்ளது.

1. தனது உடலுக்குப் புறத்தே உள்ள சுற்றுப்புற சுழலை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப
     செயல்பட பயன்படுகின்றது.
2. தனது பரு உடலில் அமைந்துள்ள அணு அடுக்குகளின் சீர்மையைப் பராமரிக்கவும்
     பயன்படுகிறது.

பஞ்சபூதத் தோற்றமும் பஞ்ச தன்மாத்திரைகளும்

ஒவ்வொரு விண்ணும் சுழலும் போது அதனுள் அடக்கமாக உள்ள பரமாணுக்கள் வெளியேறுகின்றன. அவைகள் விலக்கும் ஆற்றல் உள்ளவையாதலால் வெளியேறியவுடன் காந்த அலையாகத்தள்ளும் ஆற்றலாகி இறைவெளியில் கரைகின்றன.

விண் எனும் ஒன்றே வேகவேறுபாட்டின் அடிப்படையில் சேர்ந்து ஒவ்வொரு கொத்து இயக்கமாக செயல்பாட்டிற்கு வரும்போதுதான் பஞ்சபூதங்கள் உருவாயின.

'பரமாய சக்தியுள் பஞ்சபூதம்
தரமாறி தோன்றும் பிறப்பு'
 - ஒளவை

என ஒளவையாரும் இறைநிலை தன்மாற்றத்தை தமது கவியில் விளக்கியுள்ளார்.

இரண்டில் வழி அறியலாகும் பிரபஞ்சதோற்றமும் மூலமூம்

தொல்காப்பியம் 'நேரிதின் உணர்ந்த சான்றோர்'வழி அறுவகை உயிர்ப்பாகுபாடு தோன்றியதாக வரையறுக்கிறார்.  'மூலம்'  இது என இவர் உறுதியாக வரையறுக்கவில்லை.

மேலும், மரபியலில் உயிர்களின் இயல்பு நிலையைக் குறிப்பிடுவதே இவர் நோக்கம், மூலத்தை ஆராய்ச்சி செய்வதல்ல.

ஆனால் மகரி
ஷியும் தொல்காப்பியர் வழி அறுவகை உயிர் தோற்றத்தையும் குறிப்பிட்டாலும் அதன் மூலம் சுத்தவெளியாகிய, இறைத்துகளே என்பதை மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.

இக்கட்டுரை வழி தொல்காப்பியரின் மரபியலில் பிரபஞ்ச கோட்பாடு பற்றியும், மகரிஷpயின் பரிணாம சிந்தனைகள் பற்றியும் ஆராய்ந்து அறிந்தோம். அதன் வழி அறியலாகும். உண்மைகளைக் கண்டுணர்ந்தோம். முதல்' இலக்கண நூலாகிய அகத்தியத்திற்கு அடுத்துவந்து தொல்காப்பியத்தில் உயிர்களின் அறுவகைப் பாகுபாடுகளும் சான்றோரால் உணரப்பெற்று அறியப்படுவதாகவே குறிப்பிட்டுள்ளது முழுநிலை குறிப்பிடவில்லை. ஆனால் மகிரி
ஷி மூல அது என தெளிவாக வரையறை செய்கிறார். நாம் முழு நிலைபெற்றது எங்ஙனம் என்பதை இதன் வழி மூலம் அறிவோம்.!.


lec.jothilakshmi@gmail.com