கவிஞர் அன்புசிவாவின் 'தேவதையின் வானம்' - ஓர் பார்வை

முனைவர் பொ.திராவிட பிரேமா


முன்னுரை:

'பாட்டெல்லாம் காதலிலேயே முகிழ்க்கிறது.' என்பார் ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி. அந்த கூற்றிற்கு ஏற்றார்போல், காதல் ஒன்றை மட்டுமே பாடுபொருளாகக் கொண்டு கவிதையிற்றி புகழ் பெற்றவர் கவிஞர் அன்புசிவா அவர்கள். மலரின் மெல்லிய காதல் பற்றிய உணர்வுகளை, உணர்ச்சிகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றன.

கவிஞரின் தேடலும் காதலும்

இந்நிலவு.லகில் தோன்றிய உயிரினங்கள் யாவற்றிற்கும் காதல் தோன்றுவது இயற்கையே.

'எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.'
என்று தொல்காப்பியரும்
'காதல் அடைதல் உயிரின் இயற்கை'


என்று பாரதிதாசனும் குறிப்பிடுகின்;றனர். 'காதல்' என்ற மூன்றெழுத்தில்தான் நிறைய பேருக்குக் கவிதையும் பிறக்கிறது. வாழ்க்கையும் தொடங்குகிறது எனலாம். இதைக் கவிஞர் அன்புசிவா

'உன்னைத் தேடுவதிலிருந்து
தொடங்குகிறது என் வாழ்வின் அர்த்தம்'


என்று குறிப்பிடுகின்றார்.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேடல் இருக்கும். அந்தத் தேடலில் தான் உண்மையான வெற்றி இலக்கு இருக்கும். இங்கு கவிஞர் குறப்பிடும் 'காதல்' தேடலில் தனது வாழ்க்கை தொடங்குவதற்கான அர்த்தம் இருப்பதையும், காதலியை சந்தித்த பிறகுதான் காதலனுக்கு மீசை முளைத்ததாக குறிப்படுவது புதுமையான சிந்தனையாக உள்ளது. ஒருவரின் உடலளவிலும், மனதனவிலும் வாழ்க்கையிலும் புதுப்பொலிவுடன் இருக்க காதலே அருமருந்தாக அமைவதைக் காண முடிகின்றது. இதனை,

கர்ப்பமும் காதலும்

வாழ்க்கையின் ஒவ்வொரு மணித்துளிகளிலும் காதலை உணர்த்துகின்றது. பெண்கள் கர்ப்பம் அடைந்து குழந்தைப் பேற்றைப் பெறும் தாய்மை நிலைக்கு இவ்வுலகில் ஈடு இணை எதுவும் இல்லை. பெண்கள், மேற்கண்ட பேறு காலத்தில் அடையும் உடல், மனதளவிலான வலியையும், ஆண்கள், காதல் நிறைவேறாத நேரங்களில்; அடையும் வலியையும் ஒரு சேர இணைத்து கவிதையாக்கி உள்ளமை, கவிஞரின் கவிதை நயத்தை உணர்த்துவதபய் உள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில்,

'பெண்ணே உன் கர்ப்பமும் என் காதலும்
ஒரே வலிதான் என்பதை நீ
உணரும் வரை காதலிக்க வேண்டும்'
என்று குறிப்பிடுகின்றார். இக்கூற்று,
காதலை வேண்டிக் கரைகின்றேன், இல்லையெனில்
சாதலை வேண்டித் தவிக்கின்றேன்.'


என்ற பாரதியின் கூற்றுக்கு அரண் சேர்ப்பதாக அமைகின்றது.

மலர்களும் காதலும்

மலர்களும் காதலும் ஒத்த தன்மை உடையன. ஏனெனில் இரண்டுமே மென்மையானது. ஆதனால் தான் காதலர்கள் தங்கள் காதலை பரிமாற்றம் செய்துகொள்ள மலர்களை பரிசாக அளிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர் எனலாம். கவிஞரும் தனது கவிதைகளில் ஆங்காங்கே மலரச் செய்துள்ளார். இதனை

'மலரோடு சேர்ந்தால் நாறும் மணக்குமென்றால்
அப்போது உன்னோடு சேர்ந்த நானும்


என்று குறிப்பிடுகிறார்.

'பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்.'

என்ற ஆன்றோர்கள் சொல்லுக்கு வலு சேர்ர்கும் வகையில் கவிஞர் குறிப்பிடுவதைக் காணமுடிகின்றது. தனி மனிதனுடைய வாழ்க்கை செம்மையடைய வேண்டுமானால் அவன் காதலில் வெற்றியடைய வேண்டும். காதல் என்பது ஒத்த மனமுடைய இரு மனங்களின் சேர்க்கையே, தமிழர்கள் கண்டறிந்;த வாழ்வின் அனைத்து இன்பங்களையும் துய்த்திட வேண்டுமெனின் காதலர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதனைத் தனது கவிதைகளில் கவிஞர் அன்புசிவா பதியச் செய்துள்ளார்.

செடிகளில் பூத்துக் குலுங்கும் மலர்கள் வாடிய மலர்களாக பூமியில் உதிர்வது இயற்கையே. அம்மலர்களையும் உயிர்த்தெழச் செய்யும் ஆற்றல் காதலுக்கு உண்டு என்பதை

'வாடிய பூக்களை மலரச் செய்வேன்
உன் கூந்தலில் சூடி'
என்று குறிப்பிடுகிறார்.
'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்'


என்பார் வள்ளலார்.

அக்கூற்றினை உறுதியாக்கும் வகையில், ஒரறிவு உயிர்களுக்கும் இரக்கம் கொள்ளும் தன்மையை கலிஞர் தனது பாடலில் பதியச் செய்துள்ளாhர்.

வாடிய மலர்களை, காதலியின் கூந்தலில் சூடி மலரச் செய்வேன். என்ற உண்மையான காதலின் நம்பிக்கையானது அக்காதலின் ஆழத்தையும், புனிதத்தையும், தெய்வீகத்தையும் உணர்த்துவதாக உள்ளது.

காதலி, தனது கூந்தலில் சூடியிருக்கும் மலர்கள், அவளைவிட அதிகமான முறை காதலனைப் பார்த்து கண் சிமிட்டுவதை

'தினமும் என் தெருவழியே வரும்போது
பூக்கள்தான் என்னைப் பார்த்து அதிகமாகக்
கண் சிமிட்டுகிறது'

என்று குறிப்பிடுவது கவிஞரின் கற்பனைத் திறனை உணர்த்தும் கவிதையாகும். அஃறிணை உயிரினமான மலர்களையும் கண் சிமிட்டச் செய்து, கவிஞர் தனது மன உணர்வுகளை மலரின் மீதேற்றி தனக்கென ஒரு தனி இடத்தை நிலைநிறுத்தியுள்ளார் எனலாம். இயல்பாக இயற்றும் எதார்த்தமான கவிதைகளிலும், கவிஞர் தற்குறப்பேற்ற அணி அமையப் பாடியுள்ளமை கவிதைக்கு மேலும் அணிசேர்பபவையாக உள்ளன.

இழப்புகளும் காதலும்

இரு நாடுகள் போரிடும் போது, அந்நாடுகளின் போர்க் கருவிகள், போர் வீரர்கள், பொன், பொருள,; இன்னும் பிற உடைமைகள், அரசாட்சி போன்றவற்றை இழக்க நேரிடும். இவ்வாறு இரு நாடுகளுக்கும் இழப்பு ஏற்பட்டாலும், ஏதேனும் ஒரு நாடு வெற்றியை ஈட்டும். தோல்வியடைந்த நாடு மறுபடியும் அந்நாட்டின் மீத போரிட்டு வெல்லக் கூடிய வாய்ப்பு இயல்பாகவே உள்ளது. ஆனால், காதலை இழந்தது இழந்ததுதான், அதை மீட்டுருவாக்கம் செய்ய இயலாது என்பதை,

'கநற்த பால் மடிப்புகா இழந்த நாட்டை இன்னொரு
யுத்தத்தில் திரும்ப பெற்று விடலாம் ஆனால்
குhதலல் இழந்தது இழந்தது தான்'


என்ற சித்தர்களின் பாடலுக்கு வலுவூட்டுவதாக அமைகிறது.

மருந்தும் காதலும்

பழங்காலந் தொட்டு 'காதல்' எனபது அழியாமல் இன்றுவரை நீடித்தும் நிலைத்தும் நிற்கிறது. காதலில் காதலர்களுக்குத் தோல்வி ஏற்படலாமே தவிர, காதல் தோற்காது. அதனாலேயே நமது இலக்கிங்;கள் காதல் வாழ்க்கையைப் போற்றி வளர்த்தன. பாரதியும்

'ஆதலினால் காதல் செய்வீர்ளூ உலகத்தவரே'

என்று கூக்குரல் விடுத்தார்.
இவ்வாறான காதலில் ஒருவர் தோற்றுப் போனால் அவரது மனவலிக்கு மருந்து என்பதே கிடையாது என்பது ஒருபுறம், அதற்கு மருந்து மீண்டும் காதலிப்பது தான் என்று மறுபுறம் கூறி காதல்; அழியாமல் வாழ்வதற்கான வழிமுறைகை; கவிஞர் குறப்பிட்டுகையில்

'தோற்பது நானும் நீயும்
தானே தவிர காதல் இல்லை' என்றும்
காதல் தோல்விக்கு மருந்து கிடையாது
மீண்டும் காதலிப்பதைத் தவிர'
என்றும் குறிப்பிடுகின்றார், இக்கவிதை
'பூழ்கால் அன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்படு முதுகாய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே' என்ற
குறுந்தொகைப் பாடலை சார்ந்ததாகவே அமைகின்றது.
மேலும் நமது முன்னோர்கள் கூறிய
'முள்ளை முள்ளால் எடு'
என்ற கூற்றினை உறுதிப்படுத்தும் வகையில்
'காதல் தோல்விக்கு மருந்து காதலே'


என்ற கூற்று அமைவதை நாம் காண முடிகின்றது. காதல் தோல்வியி;ல் வீழ்ந்த ஒருவனை அழிவிலிருந்து மீட்டுருவாக்கம் பெற்று உயிர்த்தெழச் செய்தமை, இன்றைய இளைய சமுதாயத்திற்கு வெற்றிப் பாதையை உருவாக்குவதாக அமைகின்றது எனலாம்.

தொகுப்புரை:

  • புதுக்கவிதை என்னும் ஆழ்கடலுள் மூழ்கி காதல் என்னும் நவரசக் கவிதை முத்தை கண்டெடுத்துள்ளார்.

  • காதல் என்னு; மலர்களை ஒன்றிணைத்து கவிதை மாலையாக யாத்துள்ளார்.

  • காதலை மிக மென்மையுடன்; அணுகியுள்ள பார்வை, கல் மனதிலும் காதலை வளர்க்கும் காவியத்திற்கு சொந்தக்காரராகக் கவிஞர் விளங்குகிறார்.

  • எச்சூழ்நிலையிலும் காதல் உறுதித் தன்மையுடன் அழியாச் சின்னமாக விளங்கவேண்டும் என்பதை கவிஞர் வலியுறுத்துறார்.

  • காதல் தோல்விக்கு மருந்து காதலே என்ற புதுமையான கருத்தை பதியச் செய்துள்ளார்.

உயிர்களிடத்து அன்பு காட்ட வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்ப்பதாக இவரது கவிதைகள் உள்ளன.


முனைவர் பொ.திராவிட பிரேமா,
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கொன்சாகா கலை அறிவியல் மகளிர் கல்லூரி
கிருட்டிணகிரி.