தமிழ்ப் பண்பாட்டில் தமிழரின் விழாக்கள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

மிழ் பண்பாட்டில் நிறைய விழாக்கள் உள்ளன. அதில் தைப்பொங்கல்,மாட்டுப்பொங்கல், நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளி, தமிழ் புத்தாண்டு என்பவை தமிழர்கள் கொண்டாடும் விழாக்கள் ஆகும். எல்லா விழாவிற்கும் தமிழர்கள் அவர்களுடைய குடும்பத்தோடு சேர்ந்து அந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த விழாக்கள் வரும் போது தான் பெரியோர்கள் அவர்கள் வேலை செய்யும் இடத்தைவிட்டு சந்தோசமாக அவர்களுடைய நண்பர்களோடு சேர்ந்து பகுடி விட்டுச் சிரிப்பார்கள். ஆனால் சிவராத்திரி, நவராத்திரி வரும் பொழுது பக்தியாக சுவாமி கும்பிட்டு, சைவமாக இருந்து அவர்களுடைய ஆசையை கடவுளிடம் கேட்டு கும்பிடுவார்கள்.

தைப்பொங்கல்

த்திருநாள் இயற்கையைப் போற்றி வாழ்ந்த தமிழருடைய சிந்தனை வளர்ச்சியால் உருவான நாளாகும். தைப்பொங்கலே வாழ்வில் இன்பங்கள் சேர்கின்றன நாளாகக் கண்டு, ஆண்டுப் பிறப்பாகக் கொண்டு கொண்டாடுவார்கள் தமிழர்கள். சுற்றம் சூழப் பொங்கி, உண்டு பாடிக் கொண்டாடுவார்கள். தைப்பொங்கலன்று வைகறையில் நீராடிப் புத்தாடை புனைவர். முன் வாசலில் கோலமிட்டு நிறைகுடம் வைப்பார். மலர்கள் தூவி தேங்காயும் வைப்பார். பொங்கற்பானைக்கு இஞ்சி, மஞ்ச்ள் இலைகள் கட்டுவார். பானையை மண்ணடுப்பில் ஏற்றி, பசும்பால் ஊத்தி பொங்கலை பொங்குவார்கள். இதுவே தைப்பொங்கல் ஆகும்.

தீபாவளி

திபாவளியை சொந்தகாரர்கள் அவர்களுடைய குடும்பத்தினரோடு சேர்ந்து கொண்டாடுவர். இத்திருநாள் எதற்கு கொண்டாடப்படுவது என்றால், அந்த நாளில் கிருஷனர் நரகாசுரனை வதைத்த நாள் ஆகும். தீபாவளியில் மக்கள் புத்தம்  புது ஆடையை அணிந்து கோவிலுக்கு சென்று தங்களது வரங்களைக் கேட்டு கும்பிடுவார்கள். குடும்பத்தோடு சேர்ந்து விதம்விதமாக இனிப்பு பலகாரம் உண்பார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களது வீட்டிற்கு முன்பாக கோலம் போட்டு ரசிப்பார்கள். இரவு நேரம் வரும் பொழுது தங்களது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு கொழுத்தி சந்தோசமான பாட்டுப்பாடி மகிழ்வார்கள். தீபாவளி என்றாலே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் தான்.

தமிழ் புத்தாண்டு

சித்திரை மாதம் பதினான்காம் நாள் வருவதே தமிழ் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டன்று மக்கள் புது ஆடை அணிந்து கோவிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடுவார்கள். தீபாவளியைப் போல் தமிழ் புத்தாண்டிற்கும் முன் வாசலில் கோலமிடுவார்கள். இனிப்பு பலகாரங்களைச் செய்து சாப்பிட்டு மகிழ்வார்கள். தொலைபேசியில் தங்கள் நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி, வீட்டு புதினத்தையும் சொல்லி சிரிசிரி என்று சிரித்து தனது தமிழ் புத்தாண்டை கொண்டாடுவார்கள்.  

தமிழ் பண்பாட்டில் பல விழாக்கள் இருப்பதால் தமிழர்கள் அனைத்து விழாக்களையும் சிறப்பாக கொண்டாடி சந்தோசமாக இருப்பார்கள். எனவே நீங்களும் இந்த தமிழ் விழாக்களை சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும். தமிழ் கலாசாரத்தை பின்பற்றி இன்வரும் சின்னஞ்சிறுசுகளுக்கு தமிழ் விழாவைப் பற்றிச் சொல்லிக் கொடுத்து கொண்டாடி மகிழ வேண்டும். இந்த விழாக்கள் உறவினர்களோடு உறவாடுவதற்கு உதவுகின்றன.