பாரதியாரின் பாடல்களில் தத்துவச் சிந்தனைகள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

ந்திய நாட்டின் ஈடிணையற்ற தமிழ்ப் புலவன் சுப்பிரமணியபாரதி. இலக்கிய நயம்மிக்க அவரின் பாடல்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துதல் ஊட்டின. பெண் விடுதலை, அறியாமை, வறுமை, சமுதாய அநீதி போன்றவற்றை அகற்றல் ஆகியவற்றுக்கு அவை உதவின. பல்வகைப் பண்பாடும் கலாச்சாரமுங் கொண்ட, பல்லின மக்கள் வாழும் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு வழிவகுப்பதாக அவை அமைந்தன. சமயத்துறையிலே, இந்தியாவின் பல்வேறு சமயங்கள் தத்துவங்களிடையில் சமரசங் காணப் பாரதியின் கவிதைகள் விழைந்தன. மேலோட்டமாக நோக்கில் அவரின் பாடல்களில் சித்தாந்தக் கருத்துக்களும் வேதாந்தக் கருத்துக்களும் விரவியிருப்பதாகத்தோன்றும். ஆயினும் அவரின் தத்துவச் சிந்தனையில் சைவசித்தாந்தக்கருத்துக்கள் மேலோங்கியிருப்பதைக் காணலாம். இதனை விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

தத்துவ நிலை

இந்தியாவின் தமிழகத்தில் சிவப்பிராமணக் குலத்தில் பிறந்தவர் பாரதியார். தனது தாயின் தந்தை, 'செந்தமிழ்ச் செய்யுளால் மூன்று போதும் சிவனடி ஏத்துவான்', என்று கூறுகிறார். சைவக் குடும்பத்தில் பிறந்த பாரதி தனது பாடல்களில் பல சமயங்கள் பற்றிப் பேசுவதைக் காணலாம். 'சர்வமத சமரசம்' என்ற பாடலில் ஒரு கோடி மதங்கள் உலகிலுள்ளதாகக் கூறி, பௌத்தம், கிறித்தவம், சமணம், இசுலாம் எனப் பலவற்றைக் குறிப்பிடுகிறார். கடவுள் மறுப்பாளரைப பார்த்து, 'கடவுள் நீயே, தத்வமஸி, நீயே அஃதாம், மனத்துள் புகுந்த மாயையினால் அப்படிப் பேசுகிறாய்' எனக் கூறுகிறார்.

'நான் இறைவன் அல்லது பிரமம்' எனக் கருதுவது வேதாந்த வழக்கு. 'தத்வமஸி' என்னும் வேத மகாவாக்கியத்திற்கு வேதாந்திகள் தரும் விளக்கமாக வந்தது இது. வேதாந்தக் கருத்தின்படி நாம் பிரமத்திலிருந்து பிரிந்து இவ்வுலகில் பிறவி அன்புநெறி எடுத்துள்ளோம். ஆன்மீக சாதனையால் மீண்டும் மூலமான பிரமத்துடன் சேருவோம். பிரமத்திலிருந்து வேறாக எம்மைக்காண்பது அறியாமையால் நிகழ்வது. முத்தியில் இந்த இருமை நிலை நீங்கிவிடும். இந்த வேதாந்தக் கருத்தைப் பாரதியின் 'பாரதி
அறுபத்தாறு' என்ற பாடலிலும் காணலாம். குறிப்பிட்ட தொடர் வருமாறு:

'முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கை யில்லை
அத்வைத நிலைகண்டால் மரண முண்டோ?'
'புதிய பாடல்கள்' என்ற கவிதையிலும், 'எல்லையி
லாப்பொருள் ஒன்று ..... நீயும் அதனுடைத் தோற்றம்',
என்று
கூறி விளக்குகிறார். அத்வைத வேதாந்த ஞானியான சங்கரரையும் போற்றுகிறார். இவை போன்ற கருத்துக்கள் வேதாந்தத்துக்கு மேலான இடத்தைப் பாரதி கொடுப்தைக் காட்டுகின்றன. ஆயினும் அவர் கொண்ட வேதாந்தக் கருத்துக்களில். அவருக்கு முழு நம்பிக்கை உண்டாகவில்லை என்பதையும் அவரின் 'பாரதி அறுபத்தாறு' வரியிலிருந்து காண முடிகிறது. 'அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கை யில்லை' என்பது இது குறித்த வரி. வேதாந்தத்துக்கு மேலான இடம் கொடுத்தபோதிலும், பாரதி பாடல்கள் பலவற்றில் வைசித்தாந்தம் முக்கிய இடம் பெறுவதைக் காணலாம். இது குறித்துக் கீழே விரிவாக விளக்கப்படுகிறது.

சிவோகம் பாவனை

வேத மகாவாக்கியங்களில் ஒன்று தத்வமஸி என்பது. வேத இலக்கியங்கள் பரந்து விரிந்திருப்பதால் அவற்றை எல்லோராலும் படித்தறிய முடிவதில்லை. அவற்றிலுள்ள கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. பின்னால் வந்த ஞானிகள் அவற்றிலுள்ள நான்கு வாக்கியங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் புனிதமானவையாகக் கொண்டு, மகாவாக்கியங்கள் என்றனர். இந்த மகாவாக்கியங்களை அறிந்தாலே வேத உண்மைகளை உணரமுடியுமென நம்பப்படுகிறது.

'தத்வமஸி'' என்பதன் பொருள் 'நீ அது ஆகிறாய்'
என்பதாகும். 'தத்' என்றால் 'அது'. 'துவம்' (த்வம்) என்றால் 'நீ'.


அன்புநெறி

'அஸி' என்றால் 'ஆகிறாய்'. அது என்பதைப் பிரமம் எனக்கொண்டு, இம்மகாவாக்கியத்திற்கு 'நீ பிரம்மமாக இருக்கிறாய்' என்று வேதாந்திகள் பொருள் கண்டு விளக்குவர். 'தத்' ('அது') என்ற சொல்லும், இறையருளை வேண்டிச் செய்யப்படும் வேதக் கிரியைகளும் பிரமம் எம்மிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதாக உணர்த்தும். சைவசித்தாந்தம் 'தத்' என்பதற்கு சிவன் என்று பொருள் காணும். அவன் எமக்கு அருகில் இருக்கிறான் என்பதைச் சைவக் கிரியைகள் உணர்த்தும்.

சிவோகம்பாவனை என்பது சிவன் எம்முள் (எம் அகத்துள்) இருக்கிறான் என்று பாவனை செய்தல். இது சைவத்தில் காணப்படும் ஒரு முக்கிய ஆன்மீகப் பயிற்சி. சிவத்தை நோக்கி ஆன்மீக சாதனை செய்யும் ஒருவன் 'நான் சிவமே' என்று எண்ணினால் ஈற்றில் அவன் சிவமாம் தன்மை பெறுகிறான். 'பாரதி அறுபத்தாறு' என்ற பாடலில் எந்நேரமும் சிவோகம்பாவனை செய்யும்படி பாரதி வலியுறுத்துகிறார். 'ஸதாகாலம் சிவோகமென்று ஸாதிப்பாயே' என்பது அவரின் வார்த்தை. சைவ சித்தாந்தம் காட்டும் சிவோகம்பாவனை ரமநிலை கூட்டும் என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

அறிவே சிவம்

சைவத்தின் முழுமுதற்கடவுள் சிவபெருமான். தன் நிலையில் அவன் அறிவே வடிவானவன் என்பது சைவசித்தாந்தக் கருத்து. அன்பே அவனின் முக்கிய பண்பு. அறிவுக்கும் அன்புக்கும் மாறாக அறியாமையும் பொறாமை கர்வம் போன்ற தீய பண்புக்கூறுகளும் உள்ளன. இத்தீய பண்புகளின் மூலம் ஆணவம். சைவசித்தாந்தம் மட்டுமே ஆணவம் பற்றிப் பேசுகிறது. பாரதி தனது பாடல்களில்; சுத்த அறிவே சிவமென வேதங்களும் மேலோரும் கூறுவதாகவும், பிறமதக் கருத்துக்களைக் கேட்டுத் தடுமாற வேண்டாம் என்றும் கூறி விளக்குகிறார். அவரின் கூற்று வருமாறு:

'சுத்த அறிவே சிவமெனக் கூறும் சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களி லேதடு மாறிப் பெருமை யழிவீரோ?'
'சுத்த அறிவே சிவமெனக் கூறினர ; மேலோர.;'


ஆணவம் உயிருடன் அழுக்குப்போல் சேர்ந்திருந்து அதன் அறிவு அன்புநெறி இச்சை செயல் ஆகியவற்றை வெளிப்படாவாறு மறைக்கிறது.

இதனால் ஆணவத்தை மலம் என்று கூறும் வழக்கம் சைவசித்தாந்தத்தில் உண்டு. அறியாமைக்கும் துன்பத்திற்கும் மூலமான ஆணவ மலம், முத்தி நிலையில், அறிவு வடிவான றைவனின் அருளை உயிர் பெறும்போது நீங்குகிறது. இந்தச் சித்தாந்தக் கருத்தைத் 'பரசிவ வெள்ளம்' என்ற பாடலிலே பாரதி பின்வருமாறு விளக்குகிறார்:

'மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்தும் கண்டார்.'


சைவசித்தாந்தத்தின்படி சிவன் மலத்தொடர்பற்றவன். இதனால் அவன் நிர்மலன் என்று அழைக்கப்படுகிறான். பிறை சூடிய பெருமான் வாழ்வில் நிறைவைத் தருபவன். முக்காலமும் கடந்தவன் என்பதால் அவன் காலாதீதன் எனப்படுகிறான். இச்சித்தாந்த உண்மைகளை பாரதி பின்வருமாறு உணர்த்துகிறார்:

'பிறைமதி சூடிய பெருமான் வாழி
நிறைவினைச் சேர்க்கும் நிமலன் வாழி
கால மூன்றையும் கடந்தான் வாழி.'


சிவபெருமான் குறித்த சைவசித்தாந்தக் கருத்துக்களை விளக்கும் பாரதியார் அனைத்திலும் சிவத்தையே காண்கிறார். வைணவத்தில் வரும் கண்ணனைக்கூட சைவத்திலுள்ள சிவனாகவே அவர் காண்கிறார். அவரின் 'விநாயகர் நான்மணி மாலை' என்ற பாடலில் 'சிவனாம் கண்ணா! ' என்று போற்றுகிறார்.

'கண்ணன் என்சீடன்' என்ற பாடலில் கண்ணனுக்கும் தனக்கும் உலகப் பொருட்களுக்கும் உள்ள உறவை முதலில் விளக்குகிறார். கண்ணன் தானாகவும் பிற பொருட்களாகவும் இருப்பதாகவும், ஆயினும் தனக்கும் அவற்றிற்கும் வேறாகவும் இருப்பதாகவும் கூறுகிறார். அவரின் கூற்று வருமாறு:

'யானே யாகி என்னலாற் பிறவாய்
யானும் அவையுமாய் அவையினும் வேறாய்
ஏதோ பொருளாம் மாயக் கண்ணன்'

இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள இத்தகைய உறவு சைவசித்தாந்தத்தில் மட்டுமே காணக்கூடியது. உயிர் பிரமமென்றோ அல்லது அதன் பகுதியென்றோ கொள்ளும் வேதாந்தத்தில் இல்லாதது இது.

அன்புநெறி

அவரின் பாடலில் போதை தரும் மதுவைப் பற்றிப் பேசும் பொழுதும், சிவன், சிவானந்தம், சிவயோகம் முதலியவை பற்றிப் பேசுவதைக் காணலாம். குழந்தைகளுக்காக எழுதிய 'ஆத்திசூடி' சைவத்தின் முதற்கடவுளான சிவனை வணங்கியே தொடங்குகியது.

சிவஞானம்

இறைவனைச் சச்சிதானந்தம் எனக் குறிப்பிடுவதை உபநிடதங்களில் காணலாம். இப்பெயர் சத், சித், ஆனந்தம் என்னும் மூன்று சொற்களால் ஆனது. சைவசித்தாந்தத்தில் சத் என்பது நிலையான மாறுதலற்ற உள்பொருள். சித் என்பது அறிவு அல்லது ஞானம். ஆனந்தம் என்பது இன்பம். 'பிரமாஸ்துதி' என்ற பாடலிலே, இவற்றை 'ஆமெனும் பொருள்', என்றும் 'அறிவுடன் ஆனந்த இயல்புடையது' என்றும் கூறி விளக்குகிறார். சச்சிதானந்தம் என்னும் நின்மலப்பொருளான இறைவனைத் தான் நினைப்பதாகவும் கூறுகிறார். இவை குறித்த தொடர் வருமாறு:

'ஆமெனும் பொருள் அனைத்தாய் - வெறும்
அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்
நின்றிடுப் பிரமம் என்பார் - அந்த
நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்'


மனமும் உடலும் இணைந்த ஆன்மீகப் பயிற்சிகள் இறையருளும் மெஞ்ஞானமும் பெறுவதற்கு ஏற்ற சாதனங்கள். இப்பயிற்சிகள் சரியை, கிரியை ஆகிய தவங்கள் எனச் சைவசித்தாந்தத்தில் கூறப்படும். இவற்றின் முடிநிலையாக உள்ளது யோகம். யோகம் என்றால் (சிவத்துடன்) ஒன்றுதல் என்பது பொருள். பாரதி இப்பயிற்சிகளைத் தவயோகம் எனக் குறிப்பிடுகிறார். இவ்வான்மீகப் பயிற்சிகள் சிவபக்தியை வளர்ப்பதற்கும் சிவஞானம் பெறுவதற்கும் உதவுவன. இவற்றைச் செய்யுமாறு வலியுறுத்தி, 'நன்றுசெய் தவயோகம், சிவ ஞானமும் பக்தியும் நண்ணிடவே' எனப் பாடுகிறார்.


பேரா.முனைவர் பூ.மு.அன்புசிவா
149 ஹரிஸ்ரீகாடர்ன்ஸ்
சுண்டப்பாளையம்(அ)
கோயம்புத்தூர்
- 641 007
பேச
:098438 74545.