இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்! (ஆய்வுக்கட்டுரை)

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ


பழமொழி :
''இடங் கொடுத்தால் மடம் பிடுங்குவான்''

தற்போதைய பொருள் :
தங்குவதற்கு இடம் கொடுத்தால், தான் தங்கிய சத்திரம், (அ) மடத்தைப் பிடுங்கிடுவான் என்பது தற்போது நாம் கொள்ளும் பொருள்.

தவறு :
ஒரு ஒருவேளைச் சோற்றுக்கும், ஒரு முழத் துணிக்கும், உறைவிடத்துக்கும் அல்லாடும் ஒருவன் எப்படி சத்திரத்துக்குச் சொந்தம் கொண்டாட முடியும். எனவே, இப்படிப் பொருள் கொள்வது தவறாகும். அக்காலத்தில் அன்ன சத்திரங்கள் பலவற்றை மன்னர்கள் கட்டிவைத்தனர். பசித்தோருக்கு உணவிடவும், இரவு நேரங்களில் கள்வர் பயத்தாலும், உண்டு உறங்கிச் செல்வோர் பலர். அப்படித் தங்கிச் செல்பவர்கள், நீண்ட நாட்கள் தங்கிவிட்டால், தங்கிய இடத்திற்கு அதாவது சத்திரம் (அ) மடத்திற்குச் சொந்தம் கொண்டாடி, அதைப் பிடுங்கவும் கூடும் என்ற அச்சத்தில் இப்பழமொழி எழுந்ததாகக் கொள்ளலாம்.

திருத்தம் :

மடம் என்றால் அறியாமை, அழகு, இளமை, மென்மை, கொளுத்தக் கொண்டு,கொண்டது விடாமை, மகடூஉக் குணம் நான்கில் ஒன்று, என சங்கத்தமிழ் அகராதி சாற்றுகிறது. களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவனும், தலைவியும் சந்திக்கும்போது, தலைவனுக்கு நெருங்க இடம் கொடுத்தால், பெண்களுக்குரிய நால்வகைக் குணங்களில் ஒன்றான மடத்தைப் பிடுங்கி, மயங்க வைத்துஇமையலில் ஆழ்த்தி, மடியில் கிடத்துவான், அவன் கொளுத்திய ஆசைத்தீயில் கொண்டது விடாமல் குலவி மகிழ்ந்து தாய்மைக்கு இடம் தந்து விடுவானோ என்ற எச்சரிக்கை உணர்வின் காரணமாக இப்பழமொழி தோன்றியிருக்கலாம் என்பது எனது துணிபு.

நிறுவுதல் :
இடம் கொடுத்தால் அது எதுவரைக்கும் என்ற ஒரு திரைப்பாடலும் என் நினைவுக்கு வருகிறதுஇபெண்மை எப்பொழுதும் கற்பின் வழி நிற்க வேண்டி, அச்ச உணர்வோடும், எச்சரிக்கை உணர்வோடும் ஒழுகியுள்ளமைக்கு இப்பழமொழி சான்று பகர்கிறது.
worldnath_131149@yahoo.co.in