தொல்லியல் அறிஞர் திரு. சதாசிவம் அவர்களின் உரை

கொகுப்பு:
கவிஞர் இரா.இரவி


மனிதன் வாழ்ந்ததற்கு தொல்லியல் சான்று மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. அகழ்வாய்பு, மேற்பரப்பு ஆய்வு பலவகை உண்டு மனிதகுல வரலாற்றை எழுத ஆய்வு உதவும். வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்கிலாந்தில் 18-ஆம் நூற்றாண்டிலேயே சட்டம் வந்தது. மற்ற நாடுகளுக்கு பின்பு தான் வந்தது. ஜேம்ஸ் என்ற தொல்லியல் அறிஞர் 3 காலங்களாகப் பிரித்தார். பின் 5 காலமாக பிரித்தனர். உலகம் முழுவதும் சுற்றி ஆய்வு செய்தனர்.மெக்கன்சி என்பவர் மேற்பரப்பு ஆய்வு செய்தார்.அவர் தமிழகத்திற்கு வந்ததால் தான் நமக்கு பல்வேறு சான்றுகள் கிடைத்தது. இராபர்ட் புருஷ் என்பவர் ஒரு தொல்லியல் ஆய்வாளர். இவருடைய பங்களிப்பும் மகத்தனது.வில்லியம் ஜோன்ஸ் உன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி என்பவர், திரு. எ.சி.பர்னல் என்பவர், இப்படி பலர் ஆய்வில் பணியாற்றியுள்ளனர்.தொல்காப்பியத்திற்கு முந்தைய இலக்கணம் அகத்தியம் என்பதை ஆய்வில் சொன்னார்கள். கட்டிட கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் பெர்குஷ். ஆசோகர் காலத்து கல்வெட்டு, பிரேமி எழுத்து என்பதைச் சொன்ன அறிஞர் திரு. ஜேம்ஸ் பிரிசன் என்பவர். ஆங்கிலேயர்கள் பலர் நமது வராலற்றை நாம் அறிந்து கொள்ள ஆய்வு செய்து சான்றுகள் பல வழங்கி இருக்கிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை. முண்டா என்ற மொழிக் குடும்பம் உள்ளது. திரு. உரூஷ் என்பவர்தான் கல்வெட்டு தொகுதிகள் கிடைக்க காரணமாக இருந்தவர். காலத்தைக் கணிக்க உதவினார்கள். படித்து, உணர்ந்து, அறிந்து, ஆராய்ந்து நூல்களை எழுதினார்கள். திரு. கானே என்ற நீதிபதி மனுநீதி, சுக்கர நீதி இவற்றை ஆராய்ந்து இதில் உள்ள நீதி சார்ந்த தகவர்களைத் தொகுத்து நீதீ வழங்கிடப் பயன்படுத்தினார். இன்றைய பெற்றோர்கள் எல்லோரும் தம் குழந்தைகள் மருத்துவராக வேண்டும் அல்லது பொறியாளர் ஆக வேண்டும் என வெறி பிடித்து அலைக்கிறார்கள். தங்களது வெறியை நிறைவேற்ற குழந்தைகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த முறை தவறு. இதனால் தான் குழந்தைகள், நமது பண்பாட்டை, பாரம்பரியத்தை அறிய முடியாமல் போய் விடுகின்றது.

கி.மு. 54-ஆம் ஆண்டில் காட்டு மிராண்டிகளாக, மூடர்களாக, முரடர்களாக வாழ்ந்து வந்தவர்கள்.இன்றைக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து உள்ளனார். ஆனால் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடியான தமிழ் மக்களாகிய நாம் முன்னேறவில்லை ஆங்கிலேயர்கள் அளவிற்கு,  என்பது உண்மை. இதற்குக் காரணம் நாம்,  நமது பாரம்பரியத்தை, பெருமை,  கலையை,  திறமையை அறியாதது தான் என்றால் மிகையன்று.

ஜரோப்பியர்கள் வரலாற்றுச் சான்றுகளின் காலத்தைக் கணிக்க பல வழிகளைக் கையண்டனர். மரப்பட்டையை வைத்து கணிப்பது சி 14 என்ற துல்லியமான காலக் கணிப்பை கண்டுபிடித்தவர் ஒரு அமெரிக்கர்.

நெல்லை அருகே திருச்செந்தூர் போகும் வழியில் கிருஷ்ணாபுரம் கோயில் ஒன்று உள்ளது. அதனை அவசியம் அனைவரும் சென்று பார்க்க வேண்டும். குறிப்பாக தொல்லியல் மாணவர்கள் அவசியம் பார்தே ஆக வேண்டும். குறிப்பாக சிற்பக்கலையை தரணிக்கு பறைசாற்றும் அற்புதமான சிற்பங்கள் அங்கு உள்ளது. கல்லிலே கலைவண்ணம் கண்டான் என்பது அல்ல, உண்மை என்பதை உணர வைக்கும் இடம். டேடுப் பகுதியில் அகழ்வாய்வு சான்றுகள்பல கிடைத்து. அங்கு உள்ள ஒரு அற்புதமான முத்திரை, அழகிய இளம்பெண் அருகே ஒரு மான், ஒரு செடி, அந்த செடியின் மீது அமர்ந்து இருக்கும் நாரை, தமிழின் கற்பனைத் திறனுக்கும், சிற்பக் கலைக்கும் சான்றாக உள்ளது. இதனைப் பார்த்த ஒருவர் இந்தச் செடி நெற்கதிராக இருக்குமோ? என்று உன்னிடம் கேட்டார். ஆனால் நான் சொன்னேன்,  நெற்கதிர் மீது நாரை அமர முடியாது. எனவே இது கருப்புச் செடியாக இருக்க வேண்டும். அப்போது தான் நாரையைத் தாங்கும் என்று. இப்படி ஒரு சிறிய சிற்பத்தில் இவ்வளவு செய்திகள் இருக்கும் போது ஒவ்வொரு சிற்பத்திலும் எவ்வளவு செய்திகள் கிடைக்கும். இன்றைக்கு அமெரிக்கா, உலக அரங்கில் கொடி கட்டி பறக்கும் நாடாக இருக்கலாம். ஆனால் தமிழர் பண்பாட்டு சான்றுக்கு இணையாக அவர்களிடம் வரலாற்றுச் சின்னங்கள இல்லை என்பதே உண்மை.

கல்லிலும் சாதனை படைத்தவன் தமிழன். கிருஷ்ணாபுரம் கோயில் சிலைகள் உள்ள சிற்பத்தில் பெரிய மீசையுடன் ஒரு வீரன் சிலை, அவன் அணிந்து இருக்கும் அணிகலன், ஆடை என உலகிற்கு சவால் விடும் திறமையுடன் வழங்கப்பட்ட சிற்பம் ஆகும்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு மதுரை மாவட்டத்தில் உள்ளது. கல்வெட்டு நமது சின்னங்கள், எழுத்து எப்படி? வந்தது, உயிர் எழுத்து, மெய் எழுத்து எப்படி? வளர்ந்தது. முன்பு மெய் எழுத்திற்கு புள்ளி இல்லாமல் இருந்தது. தமிழ் மொழிக்கு உரிய 'ழ' என்ற எழுத்து வேறு எந்த மொழியிலும் இல்லை. இப்படி பல தகவல்களை நாம் அறிய உதவுவது தொல்லியல் ஆய்வு. தஞ்சை பெரிய கோயில் உச்சியில் உள்ள கலசம் 207 அடி உயரமான இடத்தில் எப்படி கொண்டு சொன்று வைத்து இருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே வியப்பாக உள்ளது. இன்றைக்கும் கூட அமெரிக்கவில், மிகப்பெரிய பொறியாளர்களால், மிகப்பெரிய தொழில் நுட்பத்தால் கட்டிய கட்டிடங்கள், இடிந்து விடுவதை செய்திகளில் பார்கிறோம். ஆனால் தமிழன், காலத்தால் அழியாத வரலாற்றுச் சின்னங்களைப் படைத்த உழைப்பாளி, சாதனையாளன்.உலகத் தமிழர் அனைவரும் தமிழராகப் பிறந்ததற்கே பெருமை கொள் வேண்டும். நன்கு சலித்தமணல், கடுக்காய் ஊற வைத்த தண்ணீர், முட்டையின் வெள்ளைப் பகுதி,கருப்பட்டி காய்ச்சிய பால் இவற்றை சேர்த்து தான் கட்டிடம் கட்டினான் தமிழன். வரலாற்றுச் சிறப்பு மிக்க மதுரை திரமலை நாயக்கர் அரண்மனை இந்த முறையில் கட்டக்கட்டது தான். இன்றும் கம்பீரமாக காட்சி தருக்கின்றது. இவற்றைப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. குட்டிய மன்னன் கூட தன் பெயர் பொறிக்கவில்லை. பார்கக வருபவர்கள் பெயர் பொறித்து சேதப்படுத்துவது மடமை.

தமிழர்களின் இலக்கியம் அதுவும் கலை தான். மூன்றாம் தமிழ்ச்சங்கம்பற்றி கலித்தொகை, சிலப்பதிகாரத்தில் சான்று உள்ளது. அகத்தியம் என்ற இலக்கியம்,  தொல்காப்பியத்திற்கு முந்தியது. கபாடபுரம் 2-ஆம் தமிழ்ச் சங்க காலத்தில் தலைநகராக இருந்து உள்ளது. முடத் திருமாறன் என்ற மன்னன் 3-ஆம் தமிழ்சசங்கத்தை மதுரையில் நிறுவினான். திரு. ஏடு அகம் இலக்கியங்களை ஏடு போட்டு பார்த்த இடம் இன்றைக்கு திருவேடகம் என்ற பெயரில் உள்ளது .மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி, மக்கள் வளர்ச்சி, பண்பாடு, மனிதநேயம் அறியப் பயன்படுவது தொல்லியல் சான்றுகள்.

உலகப் பொதுமறை என்றால் அது தான் திருக்குறள் திருக்குறளுக்கு இணையான கருத்து உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் காண முடியாது. திருவள்ளுவரைப் போன்று வேறு யாரும் நுட்பமாக எழுதவில்லை. படை குடி என்று போட்டார் திருவள்ளுவர். ஏனவே உலகிற்கே முன்னோடியாகத் திகழக்கூடிய மொழியையும், இலக்கியத்தையும், இலக்கணத்தையும், பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் கொண்ட தமிழினம் தன்னுடைய பாரம்பரியச் சின்னங்களை பாதுகாக்க முன்வர வேண்டும். காசுக்காக குவாரி களை வெட்டுவது உடன் தடுக்கப்பட வேண்டும்.