எனக்கென்றொரு அம்மா வேண்டும்

பாலவாணி


அன்று மாலை 5மணி. மாலதி பாடசாலையால் வீட்டுக்கு வரும் போது வீட்டின் முன்னால் கார்கள் நின்று கொண்டிருந்தன. என்ன என்று யோசித்த வாறே வீட்டினுள் நுழைகிறாள். வீட்டில் அப்பா, அப்பம்மா, மாமா, மாமி எனப் பலரும் நின்றிருந்தார்கள். வீட்டிற்கு யாரோ புதியவர்கள் பலர் வந்திருந்தனர். எல்லோரும் நன்றாக உடுத்திருந்தனர். செற்றிக்கு முன் இருந்த ரீப்போவில் பழங்கள் கொண்ட ஒரு தட்டம் இருந்தது. "நல்ல கருமங்களுக்குத்தானே இதனை எடுத்து வருவார்கள். படங்களில் பார்த்திருக்கிறேன்;. இங்கே யாருக்கு என்ன விசேஷம் தெரியவில்லையே'' என்று குழம்பியபடியே அக்காவை தேடுகிறாள் மாலா.

அக்கா மலர், அடுக்களையில் சின்ன மாமியுடன் வந்தவர்களுக்குத் தேநீர் தயார் செய்து கொண்டிருந்தாள். அவள்கூட நல்ல சட்டை போட்டிருந்தார். ஆனால் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. மாலா மட்டும் வெள்ளைச் சட்டை. கலவரத்துடன் அக்கா அருகில் சென்று ரசியமாக "என்ன இங்கு நடக்கிறத" என்று கேட்டாள்.

அக்காவும் ரகசியமாகவே "அப்பாவுக்கு கல்யாணமாம். பேச வந்திருக்கிறார்கள்" என்று சொன்னாள். மாலாவுக்குத் தலையே சுற்றியது. 'அப்பாவுக்கு கல்யாணம!; எங்கள் அப்பாவுக்கு கல்யாணம்!! அவள் நிதானிக்கமுன்,

"மாலா! மாலா!! வந்தவர்களுக்கு தேத்தண்ணியைக் கொண்டுவந்து கொடு பாப்பம" என்று அப்பம்மா இருந்த இடத்தில் இருந்தபடியே அதட்டலாக கூறினார். அவர் இயல்பே அப்படித்தான்.

மாலா வெள்ளைச் சட்டையுடனேயே தேத்தண்ணியை எடுத்துச் சென்று கொடுத்தாள். அப்பம்மா, மாலாவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

"இவள்தான் இரண்டாவது மகள். மாலதி. எட்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் நல்ல கெட்டிக்காரி. நடனம், சங்கீதம் எல்லாம் நன்றாக வரும். மிகவும் சுட்டி. இவர்களுக்காகத்தான் நான் இந்தப்பாடுபடுகிறேன். தாய் என்று ஒரு ஜீவன் வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் நன்றாக கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். நானும் எத்தனை நாளைக்கு இருக்கப் போகிறேன். அதுதான் என் ஜீவன் இருக்கும் போதே கல்யாணத்துக்கு அவதிப்படுகிறன்."

அப்பம்மாவின் அறிமுகம் முடிந்தது. வந்தவர்களும் சந்தோஷமாக தேநீரைக் குடித்துவிட்டு திருப்தியுடன் சென்றார்கள்.

மாலாவுக்கோ கலவரம் மிகுதியாகி விட்டது. வழமையிலேயே அப்பாவுடன் அதிகம் கதைக்க மாட்டோம். கேட்டால் மட்டும் பதில். எப்பொழுதாவது அருமையாக சிரித்து பேசுவார். எப்போ பேசுவார் என்று தெரியாது. அநேக நாட்களில் எல்லாம் மௌனம் தான். இன்றும் அவர் முகத்தில் சந்தோஷம் காணப்பட்டது. "சித்தி வரும் சந்தோஷம் போலும்." மாலா தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

திடீரென, "மாலா மாலா"என அப்பா அழைப்பது கேட்டது.

"என்னப்ப" என்றவாறு அவர் அறையை எட்டிப்பார்க்கிறாள். "வாம்மா உள்ள" என்று அன்பாக அழைக்கிறார். அருகே இருக்க வைக்கிறார். மாலாவும்; மெல்லென ஒரு ஓரமாக அவர் கட்டிலில் அமர்கிறாள்.

"மாலா உனக்கு ஒரு அம்மா வேண்டாமோ? அது தான் திருமணத்துக்கு நான் ஒப்புக்கொண்டுவிட்டேன். அப்பம்மாவின் பிடிவாதம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. உன்னைப்பார்க்கத்தான் மிகவும் சங்கடமாக இருக்கிறது."என்கிறார் அப்பா.

மாலா எதுவும் பேசவில்லை. அப்பா மிகுந்த கலவரத்துடன் ஆதரவாக அணைக்கிறார் மாலாவை.

மாலாவுக்கு அப்பாவை மிகவும் பிடிக்கும். அவர் சங்கடப்பட்டோ கலங்கியோ அவள்; பார்த்ததில்லை. அம்மா இறந்தபோது அழுதிருப்பாரோ? என நினைக்கிறாள். அப்போ அவளுக்கு சிறிய வயது, ஞாபகம் இல்லை. அம்மாவின் படத்தை பார்த்தபடி நீண்ட நேரம் அமைதியாக இருந்ததை மட்டும் பார்த்திருக்கிறாள்;.

ஆனால் இன்று கண்கலங்கி அல்லவா இருக்கிறார். மாலாவுக்கு பொறுக்க வில்லை.

"அப்பா அப்ப" என்றபடி அவர் மடியில் தலையைப் புதைத்துக் கொண்டு அழுகிறாள். அழுதபடியே "அப்பா உங்களுக்கு விருப்பமானால் கல்யாணம் செய்யுங்கோப்பா. எனக்கு ஒரு கோபமும் இல்லை."என்று சொல்லிச் சொல்லியே அழுகிறாள்.

அப்பா அவள் தலையை வருடியபடி "அப்பம்மா பிடிவாதமாய் நிற்கிறார். என்கிறார்."

அப்பா சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்த்தாள் மாலா. வந்தது அப்பம்மா. வந்தவர் என்ன நினைத்தாரோ வந்தவழியே திரும்பிச் செல்கிறார்.

அப்பா தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு அவளை அன்புடன் அணைத்துக் கொள்கிறார். ஷஷஎந்த சூழ்நிலையிலும் உங்களைக் கைவிடமாட்டேன். நீங்களும் நன்றாக படித்து முன்னுக்கு வாருங்கள். அக்காவும் கெடிட்டிக்காரி. நீயும் கெட்டிக்காரி. விளையாடாமல் கவனமாய் படிக்க வேண்டும் என்ன.|| என்று கூறவும் மாலாவும் தன்னை சுதாகரித்துக் கொண்டு ஷஷஓம் அப்பா|| என்றபடி எழுந்து வெளியே வந்தாள். அவள் இதயம் மட்டும் இறுக்கமாக இருந்தது.

மறுநாள் பெண்வீட்டார்கள் காலையிலேயே வந்திருந்தார்கள். கல்யாணம் அடுத்த மாதம் நடக்க உள்ளதாம் இதுவே அவர்கள் கொண்டுவந்த தகவல்.

அப்பம்மா அதைக் கேட்டதும்; மிக சந்தோஷமாகவே இருந்தார். அன்றிலிருந்து வீடு களைகட்டியது. தடல்புடலாய் கல்யாணமும் நடந்தது. சித்தியும் வந்துவிட்டார்.

அப்பா எப்பொழுதும் போல் மௌனமாகவே இருந்தார். சித்தி வீட்டுக்குப் புதியவர். அப்பம்மாவின் அதட்டல் மட்டும் குறையவில்லை. சித்தியையும் தன் ஏவல்படியே நடமாட வைத்திருந்தார். அவரும் முகம் சுளிக்காமல் ஷஷமாமி மாமி|| என்று வளைய வந்தார். எங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்து கொடுத்தார். இடையிடையே ஓரிரு கதைகள். வாங்கோ சாப்பிடுங்கோ இப்படியான கதைகள் மட்டுமே. அப்பாவைப் போலவே அளவாக அதுவும் இருந்தது.

நாட்களும் மெல்லென மௌனமாகவே கரைகிறது.

மாலாவுக்கும் அக்காவுக்கும் அவர்கள் பாடு பார்க்கவே நேரம் சரியாகிவிடும். சித்தி என்ற உறவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கூடிய நாட்கள் அவர்கள்; அறையிலேயே முடங்கி இருப்பார்கள்;. பாடசாலை ரியூசன். நடனம் சங்கீதம் என்று போய் வருவதோடு சரி. மற்றும் நேரத்தில் அறைக்குள் முடக்கம். வீட்டு வேலைகள் பெரும்பாலும் சித்தியும் அப்பம்மாவுமே செய்வார்கள். அவர்களை எதுவும் கேட்கமாட்டார்கள். தேவையில்லாமல் தங்கள் மூக்கை எதிலும் நீட்டும் வழக்கமும் அவர்களுக்கும் கிடையாது. இதனாலோ என்னவோ ஒருவித பிரச்சனையும் இல்லாமல் வீடும் அமைதியாக இருந்தது.

அன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சித்தி, அப்பாவின் அறையை விட்டு வெகு சீக்கிரமாக வெளியே வந்திருந்தார். அவர் குளித்து அழகாக சேலை உடுத்தியிருந்தார். நெற்றியி குங்குமப் பொட்டு பளிச்சிட்டது.
மாலாவுக்கு அவள் அம்மாவை பார்த்தது ஞாபகம் இல்லை. போட்டோவில் பார்த்தது மட்டுமே ஞாபகம்.

வெளியே சென்றவர் கையில் பூக்களுடன் வந்தார். அதனை மாலாவின் தாயாரின் படத்துக்கு வைத்துவிட்டே சாமி அறைக்கு சென்றார். அதைப் பார்த்ததும் மாலாவுக்கு நெஞ்சை இழுத்து வலித்தது. "இதனை இத்தனை நாட்கள் நான் ஏன் கவனிக்கவில்லை நாங்கள் நித்திரையால் பிந்தி எழும்புவதால் இத்தனையையும் கவனிக்க தவறிவிட்டோமோ" என்று எண்ணியவாறு நித்திரையால் எழும்பி வந்த மாலா அங்கே திகைத்தபடி நின்றிருந்தாள்.

சாமி அறையை விட்டு வெளியே வந்த சித்தி மாலாவைப் பார்த்ததும் புன்முறுவலுடன் "மாலா முகம் கழுவிட்டு வாங்கோ தேநீர் தருகிறேன்." என்றார்.

சுய உணர்வுக்கு வந்த மாலா "ஓம் சித்த" என்றபடி முகம் கழுவி சாமி கும்பிட்டு வந்தாள்.

சித்தி தேநீர் தந்து ஷஷஅப்பாவுக்கு கொடுத்துவிட்டு வாம்மா" என்றார். மறுக்காது அவளும் வாங்கிக் கொண்டு அப்பாவின் அறைக்கு சென்றாள்.

திருமணத்திற்கு பின் இன்று தான் அப்பாவின் அறைக்கு வருகிறாள். அவளுக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. முற்றிலும் அறை மாற்றப்பட்டிருந்தது. அங்கும் அம்மாவின் படம் தொங்கவிடப்பட்டிருந்தது. கட்டிலும் அறையும் பளிச்சென்றிருந்தது. சித்தி என்ற சொல் அந்த அறையை மட்டுமல்ல அவள் மனதையும் வியாபித்ததை புரிந்து கொண்டாள்.

அந்த நினைவுடனேயே ஷஷஅப்பா|| என்றழைத்தாள். அவரும் திடுக்கிட்டபடி "என்னம்மா மாலா வா! வா!!|| என்றபடி எழுந்தார்.

மாலா தேநீர் கோப்பையை அவரிடம் கொடுத்தாள். அவர் மெல்ல வாங்கி மேசையில் வைத்துவிட்டு தண்ணீர் செம்பை எடுத்து வாயில் நீரை மொண்டு கொப்பழித்து யன்னல் வெளியே துப்பி விட்டு துவாயால் வாயைத் துடைத்தபடி வந்தார்.

அதே நேரத்தில் சித்தியும் மாலாவுக்கும்; தனக்குமாக இரு தேநீர் கோப்பைகளை ஏந்தியபடி உள்ளே வந்தார். மாலாவிடம் ஒன்றை நீட்டினார். மாலாவும் வாங்கிக்கொண்டே வெளியே செல்ல எத்தனித்தாள்.

சித்தி அவளை விடாமல் இழுத்து அமர்த்தி இருக்க வைத்தார். கண்ணால் தேநீரை குடிக்கும்படி சொன்னார் மந்திரவாதிக்கு கட்டுப்பட்டது போல் ஒரே மூச்சில் தேநீரை குடித்து முடித்தாள் மாலா.

சித்தியைப் பார்த்து "பாடசாலை போகவேண்டும். நான் போகிறேன" என்றாள்.

சிரித்தபடியே "என்ன அவசரம். நீங்கள் ஏன் என்னிடம் இருந்து விலகிப் போகிறீர்கள். இது உங்கள் அப்பா. நான் தட்டிக்கொண்டு போக வரவில்லை. எப்பவும் போல் நீங்கள் அப்பாவுடன் அன்பாக பழகலாம். நானும் உங்களில் ஒருத்திதான். உங்கள் அம்மாவாக இல்லாவிட்டாலும் உன் சிநேகிதியாகவாவது என்னை நினைக்க மாட்டாயா|| என்றார்.

அவர் அப்படிக் கேட்டதும் இவ்வளவு நேரம் கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகளை மேலும் கட்டுப்படுத்த முடியாமல் ஷஷஅம்... சித்தீ..|| என்றபடி அவரை வாரி அணைத்தாள் மாலா. சித்தியும் அம்மா என்றால் என்ன? சித்தி என்றால் என்ன? பிள்ளைகளின் அன்பு போதும் என்று எண்ணியவாறே அவரும் அவளை இறுக அணைத்துக் கொண்டார். அவருக்கும் அந்த அன்பும் அணைப்பும் தேவைப்பட்டது போலும்!

அந்த அணைப்பின் சுகம் மாலாவை மெய்மறக்க வைத்தது. இத்தனை நாள் இந்த சுகத்தை அறியாது போனேனே. தனக்கு அம்மா இல்லையே என்று அவள் ஏங்குவாள். அம்மா இருந்தால் எவ்வளவு நல்லது என்று அவள் அடிக்கடி நினைப்பாள்.

இன்று அம்மா இல்லை என்ற இடைவெளி நிரப்ப அவளுக்கு அந்த சித்தி என்ற சுகம் தேவைப்பட்டது.

"இனி எனக்கு எல்லாம் சித்திதான். எனக்காக கடவுளால் அளிக்கப்பட்ட இனிய உறவு இத" என்று எண்ணியவாறு அப்பாவை நன்றியுடன் பார்க்கிறாள்.
---------------------------- முற்றும் ----------------

 

balavaany@gmail.com