யதார்த்தம் புரிந்த போது............

ஸ்ரீ ரஞ்சனி

மூன்று நாள் லீவில் நின்ற பின் திருமதியாக மீண்டும் வேலைக்குப் போன போது என்னில் ஏதோ இனம் தெரியாத மாறலை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. எனக்கு வந்திருந்த கடிதங்கள் யாவும் என் மேசையில் எனக்காகக் காத்திருந்தன. அதில் இருந்த நீல நிற
airmail envelop ஒன்று பளிச்சென கண்ணில் பட்டது. அதை மற்றவற்றிலிருந்து விலத்தி எடுக்கும் போதே அது குமாருடையது தான் என எனக்கு திட்டமாகத் தெரிந்திருந்தது. கடிதத்தை பலவிதமான உண்ர்ச்சிக்கலவைகள் அலைமோதும் உள்ளத்துடன் உடைக்கிறேன்.

என் அன்பு நிறை ஆனந்தி,

உங்கள் கடிதம் கிடைத்தது.எனது கடிதம் தாமதமாக வருவதற்கு உங்களிடம் முதலில் மன்னிப்புக் கோருகிறேன். இலங்கைக்கு வந்திருந்ததால் தடைப்பட்டிருந்த பல வேலைகளை சீர் செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் வேறு வேறு
states ல் நடைபெற்ற மூன்று conferences க்கு போக வேண்டியிருந்தது படித்த உங்களுக்கு இதன் சிரமங்கள் பற்றியெல்லாம் நான் சொல்லி விளங்கப்படுத்தத் தேவையில்லை கடிதம் தான் எழுத முடியவில்லையே தவிர மனம் உங்களை மறக்கவில்லை. phone  மூலம் கதைக்கக் கூடிய வசதி இருந்தால் மிகவும் நல்லாயிருக்கும் உங்கள் office  க்கு அழைக்கலாமா? கீழே எனது office phone number ஐ எழுதியுள்ளேன்.

அத்துடன் நான் புதியதொரு ஆய்வினை மேற்கொள்ள உள்ளேன். அதைப் பற்றியும் உங்களுக்கு நிறையச் சொல்ல வேண்டும். நான் இங்கே செய்வது போல் அதை உங்களால் அங்கே செய்ய முடிந்தால் இரண்டு ஆய்வுகளையும் ஒப்பிட்டு உங்கள் பெயரையும் போட்டு
research paper  வெளியிடலாம்.

இன்னொரு முக்கியமான விடயம் போன கடிதத்தில் மாமி வீட்டில் எனது
card ஐப் பார்த்த போது உங்களுக்கும் அப்படி வந்திருக்கும் என நீங்கள் எழுதியது பற்றி கீதா என்னிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டா. எனவே இனிமேல் நீங்கள் எனக்கு எழுதும் கடிதங்களை கீழுள்ள எனது university address க்கு அனுப்பவும்.

இத்துடன் நீங்கள் கேட்டது போல் எனது
photo ஒன்று அனுப்பியுள்ளேன். அடுத்த ஆறு மாதத்துக்குள் எப்படியும் நான் இலங்கைக்கு வருவேன்.

நிறைந்த அன்புடன்
குமார்.


Professor குமாரும் அந்த ரம்மியமான பேராதனைப் பல்கலைக்கழகச் சூழலும் மனதினுள் மீண்டும் படமாக விரிகிறது.

இதமான காலநிலையும் அழகான மலைசார் சூழலுமாக விபரிக்க முடியாத,அனுபத்துப் பார்க்க வேண்டிய சுகம் தரும் சூழல் அது. கடைசி நாள் பரீட்சை முடிந்த போது அப்பாடா என்ற நிம்மதியை விட
university ஐ விட்டுப் போகப் போகிறோமே என்ற துடிப்பும், கவலையும் தான் பெரீதாகத தெரிந்தது. நிஜமான உலகத்தில் இறங்கி வேலை தேட வேண்டும் என்ற சுமை வேறு. கடைசித் தடவையாக faculty  ஐ வலம் வந்து எல்லோருக்கும் bye சொல்லுவோம் என்று போன போது தான் அந்த நேரத்தின் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. பீரீத்தி என்ற பெயருக்கு ஏற்ற அழகான அந்த சிங்களப் பெண் விரிவுரையாளர் ஒரு தமிழ் விரிவுரையாளர் அங்கு வந்திருப்பதாகவும் அவரின் ஆய்வுக்கு உதவியாளர் தேவைப்படலாம் என்றும் சொன்ன போது உயரமான, கறுப்பு என்றாலும் கவர்ச்சி நிறைந்த, வெறும் பார்வையால் மதிப்பை தனக்கு சம்பாதிக்கக் கூடிய ஆளுமை நிறைந்த ஒரு மனிதன் அங்கு தற்செயலாக வருகிறார்.

அவரைப் பார்த்ததும்
“Hello Kumar, this is Ananthi , she has just finished her last exam and looking for opportunities, if you are you looking for a research assistant for your PhD thesis, she will be a perfect match ''என்கிறார் பீரீத்தி;. என்னை ஒருதடவை திரும்பி பார்த்தவர் Well, Come and see me at my office  என்கிறார். அவரை மிக ஆவலாகப் பின் தொடர்ந்து செல்கிறேன.; எனது அதிஸ்டத்தை என்னால் நம்பமுடியவில்லை 'நான் ஏற்கனவே சிறில் என்றொரு மாண வனைத் தெரிவு செய்துவிட்டேன் இருந்தாலும் நிறைய வேலை இருக்குது இரண்டு பேருமாகச் சேர்ந்து செய்யலாம்; மாதம் 4000 ருபா தருவேன்' என்கிறார் குமார்.

நைதரசன் பதிப்புக்கும் வேறுபட்ட கௌபி வகைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை அறியும் ஆய்வு அது. அந்த ஆய்வு சம்பந்தமான பல கட்டுரைகள், செய்ய வேண்டிய விடயங்கள் தொடர்பான படிமுறைகள்,; குறிப்புக்கள் என்று நான் வாசிக்க வேண்டிய பெரிய ஒரு கட்டுடன் பீரித்தியிடம் மீண்டும் போய் செய்தியைத் கூறி என் நன்றியையும் தெரிவிக்கிறேன்.

ஆய்வு சம்மந்தமான தரவுகளைப் பதிவு செய்வது, அது சம்மந்தமான பிற ஆய்வுகளை
research பண்ணுவது, பின் அதைப் பற்றி அவருடன் கலந்துரையாடுவது என பொழுதுகள் மிகச்சுவாரஸ்மாக போகத் தொடங்கின. சிறில் வேலை முடிந்தவுடன் போய்விடுவார். அதன் பின் நாம் தமிழிலேயே பேசிக்கொள்வோம் அவருடைய அறிவும், அவர் கதைக்கும் பாணியும் மிக அலாதியானவை. கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும். எங்களிடையே மெல்ல மெல்ல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு ஒரு நல்ல நட்பு மலர்கிறது.

'அவரை இனத் தாவரங்கள் மட்டும் தான் நைதரசன பதிக்ககூடியவை என நினைதைதேன். அவரை இனமல்லாத
Alder கூட நைதரசன பதிக்குமாம்' வாசித்ததை ஆர்வமுடன் அவருக்கு சொல்கிறேன். என்னை வைத்த விழி மூடாமல் பார்க்கிறார் அவர்.

'நீங்கள் இதில் காட்டும் ஆர்வத்தைப் பாக்கும் போது மிகவும் சந்தோசமாயிருக்கு பட்டப்படிப்பு பெற்ற ஒருவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்திருந்தால் எனது வாழ்க்கை இயல்பாக, அழகாக இருந்திருக்குமோ என பலதடவைகளில் நான் நினத்திருக்கிறன் - இப்போ ----- ' சொல்லும் போது அவர் குரல் உடைகிறது. எனக்கு அது கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது. 'நான்
research செய்து கொண்டிருக்கும் போது என்ரை மனைவி நான் என்ன செய்கிறன் என்று கூட பாக்கமாட்டா. TV பாக்கக் கூப்பிடுவா அல்லது படுக்க வரச்சொல்லுவா உங்களைப் போல, நான் செய்கிறதை விளங்கக்கூடிய ஒரு மனைவியாக அவ இருந்திருந்தால் ஒத்துழைப்புத் தந்திருக்கக் கூடும் —' தொடர்ந்து சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியே போனவர் நான் அன்று வேலையை விட்டு போகும் வரை வரவேயில்லை.

சில நாள்கள் போய்விட்டன ஒரு நாள் 'ஆனந்தி இன்றைக்கு என்ரை
supervisor க்கு இதுவரை நான் செய்த வேலை பற்றி report பண்ண வேண்டும். இந்த correlation graph  ல் ஒரு புள்ளி மிக தூரத்தில் போய் நிற்கிறது. அதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்று விளங்கவில்லை. என்ரை calculation பிழையா அல்லது ஏதாவது தகவலை தவற விட்டுவிட்டேனா எனப் பாத்துச் சொல்ல முடியுமா? 'என்று கேட்கிறார்.

நான் தொடக்கத்திலிருந்து எல்லாம் தேடிப்பார்த்து
standard deviation  ல் இருந்த பிழையைத் திருத்த எல்லாம் புள்ளிகளும் மிக அழகாக நேர்கோட்டில் வந்தன. 'Wow, இன்று முழுவதும் தேடினான் கண்டுபிடிக்கேல்லை' எனறவர் மெல்லக் கதவைச் சாத்திவிட்டு என்னைக் இறுகக் கட்டி முத்தமிடுகிறார்.

அதை நான் எதிர்பார்க்கவில்லை என்றாலும் தடுக்கவுமில்லை அவர் மேல் எனக்கு இருந்த அபிமானமும் மதிப்பும் என் மேல் அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பை பெருமையாக நினைக்க வைத்தன. அவர் திருமணமாகி ஒரு பிள்ளைக்கு தந்தை என்று தெரிந்திருந்தும் அறிவை மீறி மனம் உவகை கொண்டது, ஆரவாரித்தது.

குமார் மீண்டும்
states திரும்பிப் போகும் நாளும் நெருங்கியது. அவரைப் பயணம் அனுப்ப யாழ்ப்பாணத்திலிருந்து அவரின் தங்கையும், கீதாவின் அம்மாவும் வந்திருந்தனர் அவர்களை எனது அறையிலே பராமரிக்க முடியுமா என அவர் கேட்டபடி அவர்கள் என்னுடன் தங்கினர்.

'கீதாவும், சரோவும் முந்தி நல்ல
friends. சரோ யாழ்ப்பாணத்திலை எங்கடை வீட்டுக்குப் பக்கத்திலை தங்கியிருந்து தான் படிச்சவ. அதாலை எங்கடை வீட்டை ஒரே வுருவா கீதாவும் சரோவைப் பாக்க அங்கை போவா. அப்படிப் போன இடத்திலை தான் குமார் கீதாவைக் கண்டவர். பிறகு அவர் pHD  செய்ய states போகேக்கே கலியாணம் செய்து கீதாவையும் கூட்டி கொண்டு தான் போனவர். அங்கே தொடந்து படிக்கச் சொல்லித்தான் கீதாவுக்குச் சொன்னவர். ஆனால் அவவுக்கு படிப்பிலை பெரிய இஷ்டம் இல்லை. இப்ப பிள்ளையும் வந்திட்டுது. இனியென்னத்தைப் அவ படிக்கிறது. அவர் நல்லா உழைக்கிறார் அது போதும் தானே'

கீதாவின் அம்மா பழைய கதைகள் எல்லாத்தையும் தன் மகள் ஒரு விரிவுரையாளரின் மனைவி என்ற பெருமை வழியச் சொல்லிக் கொண்டிருந்தா.

'தம்பிக்கு இராசவள்ளிக்கிழங்கு நல்ல விருப்பமாம் என்று கீதா எழுதினவ. நான் அது கொஞ்சம் செய்துதாறன் கொண்டு போய்க் கொடுங்கோ' என்று அவ சொல்லிக் கொண்டிருக்கும் போது தனது
friends ஐச் சந்திக்கப் போன சரோ உள்ளே வந்ததும் வராததுமாய் 'மாமி வெளிக்கிடுங்கோ ஆனந்தியுடன் போய் கொஞ்சம் shopping செய்வம் அண்ணா காசு தந்திருக்கிறார'; என்கிறா 'நான் கொஞ்சம் இராசவள்ளிக்கிழங்கு செய்வம் என்று நினத்தன்' என்ற மாமியை முடிக்கவிடாமல் 'அதை வந்து செய்யலாம் தானே' என்று சரோ அவசரப்படுத்துகிறா 'சரி அப்ப வாறன' என்று மாமியும் வெளிக்கிடுகிறா

பின்பு அறைக்கு வந்த போது ஒரு அழகான ஊதா நிறச்சேலையையும், நல்லாயிருக்கு வாங்குங்கோ என நான் சிபாரிசு செய்து வாங்கிய நீலநிறச் சட்டையையும் தூக்கி 'இது உங்களுக்கு எங்கடை
gift' என சரோ தந்து 'எங்கே போடுங்கோ பாப்பம் எப்ப்டியிருக்குது என்று' என வற்புறுத்த நான் அதைப் போட்டுக்கொண்டு மாமியின் இராசவள்ளிக் கிழங்குடன் வேலைக்குப் போனபோது எனக்குள் ஏனோ உள்ளுரச் சந்தோசமாக இருந்தது.

எமது
faculty க்கு பின்பக்கமாக உள்ள குறுக்கு வழியைக் கடக்கும் போது திடீரென மழை கொட்டி என்னை நனைத்து விடுகிறது. கண்டி மழையும் கம்பசுக்காதலும் என்று ஒரு saying உள்ளது - இரண்டும் நிரந்தரமற்றவை என்பதன் பொருள் பட. கிட்டப் போகும் போது முன் புற வாசலில் குமார் நிற்பது தெரிகிறது. நான் வருவதை அவர் பார்த்துக் கொண்டிருந்த விதம் தமிழ் சினிமாவில் வரும் மழைக்காட்சிகளை நினைவுபடுத்தியது. அப்படி ஏதாவது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலைதான் அன்று எனக்கிருந்தது. கிட்டப் போனபோது 'இதுவா சரோ வாங்கித்தந்த சட்டை உங்களுக்கு என்று தைத்த மாதிரி நல்லா இருக்கிறது' எனப் பாராட்டியவர் 'அவர்களுக்கு உங்களை நல்லாய் பிடித்திருக்கு' என்கிறார். இராசவள்ளிக்கிழங்கை அவரிடம் கொடுத்துவிட்டு எனது வேலை இடத்துக்கு போகிறேன்.

அடுத்த நாள் காலை சரோவையும் மாமியையும் சரசவுயன புகையிரத நிலையத்தில் பயணம் அனுப்பி விட்டு திரும்பும் போது என் கையை எடுத்து தன் கையுடன் பிணைத்துக் கொள்கிறார். பின் அதைத் தன் உதட்டருகே கொண்டுபோய் முத்தமிட்டவர் 'உங்களின் உதவிகளுக்கொல்லாம் மிக்க நன்றி 'என்கிறார். அவருடன் சேர்ந்து
faculty  வரை நடக்கிறேன். மனம் கனக்கிறது, கண்கள் கலங்குகின்றன. எம்மிடையே கனத்த மௌனம்.

தனது அறைக்குள் போக முன் ''இன்று ஆறு மணி வரை இருப்பன்'' என்கிறார். நேரத்தை அடிக்கடி பார்க்கிறேன்இ மனம் பதட்டப்படுகிறது. நேரம் இன்றைக்கு என்றுமில்லாத வேகத்தில் போகிறது. இன்னும் ஒரு நாள் ஆவது கூட தங்கமாட்டாரா என்று மனம் ஆதங்கப்படுகிறது. நேரம்
5:00 ஆனதும் சிறில் bye சொல்லிப்போட்டு, 'no more work no more money' என்கிறார். 'Yep' சொல்லும் போது என் குரல் உடைகிறது. கண்கள் கலங்குகின்றன. சற்று நேரத்தில் குமார் தனது அறை கதவைத் திறந்து என்னைக் கூப்பிடுகிறார். ஆய்வு முடிவுகள் reference letter  என்று சம்பிராதயமான கதைகளின் பின் 'எனது இந்த மூன்று மாதம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பகுதியாகிவிட்டது' என்ற படி கதவை மூடுகிறார் பின் என்னை இறுக அணைத்து ஒரு முத்தம் தந்த பின் கதவைத் திறக்கிறார் என்னுள் ஒரு பகுதி வெற்றிடமாவதை உணர்கிறேன்.

இரண்டாம் நாள் வீட்டுக்குப் போகிறேன். வீட்டில் கன்னொருவ
Research Centre ல் வேலைக்கு interview  க்கு வரச்சொல்லி கடிதம் வந்திருக்கிறது. அந்த திருப்பம் ஒரு ஆறுதலைத் தருகிறது. குமாருடன் வேலை பார்த்த அனுபவம் இந்த வேலை கிடைக்க உதவும் என மனதுள் ஒரு நம்பிக்கை வருகிறது. நான் சொன்னபடி கீதாவின் அம்மாவிடம் ஒரு visit பண்ணினால் குமாரின் நினைவுக்கு ஒரு ஒத்தடமாய் அமையும் என அங்கு போன போது அவவுக்கு கதைக்க ஒரு ஆள் கிடைத்ததில் மிகச் சந்தோசமாயிருக்கு. சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்கிறா. அப்படி நின்ற்போது தான் குமார் Bankhok airport ல் transit க்கு ஒரு நாள் நின்ற போது அங்கிருந்து போட்ட postcard வந்தது. அதைப் பார்த்ததும் எனக்கும் அப்படி ஒன்று வந்திருக்கும் என எனக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வந்திருந்த post card  ஐப் பார்த்த்தும் மனம் மீண்டும் உவகை கொண்டது. உடனே அதை, அந்த உணர்வைக் கடிததில் எழுதி அவருக்கு அனுப்பியிருந்தேன்.


பின் நம்பமுடியாத வேகத்தில் என் வாழ்வில் நடந்த மாற்றங்களை எண்ணிப் பார்க்கிறோன். வேலை கிடைத்த ஒரு மாதத்துக்குள் திருமணம் பேசி வந்து அது எல்லாம் சரியாகி, திருமணப்பதிவு முடிந்து இன்று திருமதியாக நி;ற்கிறேன். குமாரின் நட்பும், உறவும் என் தொழில் ரீதியாக நான் முன்னேற மிக உதவும் என்றாலும் என் கணவன் இப்படி ஒரு தொடர்பு வைத்திருப்பதை என் மனம் ஏற்றுக் கொள்ளுமா எனச் சிந்திக்கிறேன்.

மனம் சற்றுத் தெளிவடைய எண்ணத்தைச் செயலாக்குகிறேன்.


மதிப்புக்குரிய போராசிரியர் அவர்களுக்கு,

உங்கள் கடிதம் கிடைத்தது. என் வாழ்வில் நடந்த சில மாற்றங்கள் என்னை உங்கள் மனைவியின் இடத்திலிருந்து சிந்திக்க வைத்துள்ளன. நான் இப்போ தனி ஆள் அல்ல. எனது வாழ்வின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள இன்னொரு ஜீவன் என்னுடன் இணைந்துள்ளார. நீங்களும் நானும் எங்கள் உறவை யாருக்கும் தெரியாமல் பேணுவது பெரிய விடயமல்ல. ஆனால் அவரும் நானும் ஒருவருக்கொருவர் உண்மையாக நடக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்.

உங்கள் அறிவுக்கும் ஆளுமைக்கும் எப்போதுமே நான் விசிறி தான். ஆனால் எமது உறவுக்கு முற்றுப்புள்ளியிடுவது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்மை பயக்கும் என்று நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வாழ்க்கை அமையாவிட்டால் அதை வாழாமல் சகிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை விட்டு விலகி எமது பாதையில் போவதில் எந்தப் பிழையும் இல்லை. ஆனால் அது மனச் சாட்சிக்கு சரியாக இருக்க வேண்டும். இல்லையா?

அன்புடன்,
ஆனந்தி.

 

sri.vije@gmail.com