பஜிலா ஆசாத் கவிதைகள்

பயன்

வெட்ட மனமில்லை
பட்ட மரத்தை
கிளையெங்கும்
கூடுகள்!

விடுமுறை திட்டம்

இந்த வார விடுமுறையில்
பிள்ளைகளை அழைத்துக் கொண்டு
கண்காட்சி போக வேண்டும்...
மாலையில் வரும்போது
கடைகளுக்குச் சென்றுவிட்டு
அப்படியே ஒரு சினிமா
இரவில் சாப்பாடு...

திட்டங்கள் போடும்போது
இடையில் ஒரு ஐந்து நிமிடம்...
இல்லத்தில் சேர்த்திருக்கும்
அப்பாவைச் சென்று பார்க்க
அனிச்சையாய்
எழுந்த நினைவு
அவசரமாய் கடந்து விட்டது