பாமரனின் வாழ்க்கை...!

தினைக்குளம் கா.ரமேஷ், பரமக்குடி.

எலும்பும் தோலுமாய்
ஏக்கர் கணக்கில் உழவுதரும்
எங்களில் ஒருவரான ஏர்மாட்டிற்க்கு
வைக்கோல் கொடுக்க முடியாமல்
வந்த விலைக்கு விற்ற
வாழா வெட்டிகள் நாங்கள்....

கடைசி விதை வரை
களம் கொழிக்கும் கனவோடு
மார் இறுக உழைத்து
பயிர் பெறுக மழை வேண்டி
வானம் பார்க்கும் பூமியை கொண்ட
வாடிக்கை மனிதர்கள் நாங்கள்...

சொகுசு ஊர்திகளையும்
குளிர்சாதன பேருந்துகளையும்
காட்சிபொருளாய் பார்த்து விட்டு
சாதாரன ஊர்திக்காய் மணிக்கணக்கில்
சத்தமில்லாது காத்திருக்கும்
சாமானிய சிறுகுடிகள் நாங்கள்...

சிறு மளிகை அங்காடியும்
தள்ளுவண்டி காய்கறி கடையும்
தாயாக சோறு தந்தநாள் மறந்து
அயல்நாட்டு மொத்த கடைகளுக்கு
அனைத்தயும் அடகுவத்து அடங்கிபோன
அப்பாவி ஜென்மங்கள் நாங்கள்....

உழைப்பதை எல்லாம் பெருமுதலாளிக்கு
உண்மையாய் கொடுத்து விட்டு
வயிற்று பசி போவதற்க்கு
ஒற்றை ரூபாய் அரிசிக்காய்
மடியேந்தி நிற்க்கும்
மதிகெட்ட மகராசிகள் நாங்கள்...

வாழ்வாதாரம் ஒன்றுக்காய்
வலையெடுத்து கடலுக்குள் போக
வழிநெடுக துயரங்கள் சேர
மீன்பிடிப்பதை விடுத்து
உயிர் பிடித்து வீடு வரும்
உப்பு சப்பில்லாதவர்கள் நாங்கள்....

தினம் நான்கு தேனீரும்
தெருக்கடை பண்டங்களும்
தைரியமாய் வாங்கி உண்டுவர
திக்கு தெரியாத விலைவாசியில்
உணவுக்கே ஊர்சுற்றி வரும்
ஒன்றுமறியா காற்றாடிகள் நாங்கள்...

கோடிகளில் புரல்வோரும்
மாடிகளில் வாழ்வோரும்
ஜாதிகளில் திகல்வோரும்
ஆட்சியில் இருப்போரும்
பாதகமாய் வாழ்ந்து வரும் - இந்த
பாமரரை நினைப்பீரோ...?


kramesu@gmail.com