வெகு சிறிய காலமே வாழ்க்கை!

வித்யாசாகர், குவைத்

ஒரு கால சுவடின் கண்களிலிருந்து
பிறக்கிறது நம் வாழ்வின் மீதான கோபம்;
கொட்டி அழுதிடாமல் மனதில் கத்தியழும்
வாழ்விற்கே - உனக்கும் எனக்கும் போட்டி;

ஊருலகம் பேசுமோ உறவு பேசுமோ
வேலை இருக்குமோ போகுமோ
பணம் கிடைக்குமா கிடைக்காதா
நாளை இருப்பேனா மாட்டேனா.........???

கேள்விகளோடு மட்டுமே கனத்து போய்
நகர்த்தும் வாழ்வில் - ஞானம் பிறக்கும் முன்
பிறப்பின் காரணம் புரியும் முன்
திருத்திக் கொண்டு வாழ நினைப்பதற்குள்
உயிர் பிரிகிறதே தோழா?????????

வாழ்வொன்றும் அத்தனை பெரிதில்லை
வாழும் போதே திருத்திக் கொள்ளல் தகுமோ!!vidhyasagar1976@gmail.com