நண்பன் !

கவிஞர் இரா.இரவி

மூன்றாவது கை
ஏழாம் அறிவு
நண்பன் !

நல்வழிப் படுத்துவான்
நல்லதை உரைப்பான்
நண்பன் !

அன்பின் சின்னம்
ஆற்றலின் வடிவம்
நண்பன் !

தோள் கொடுப்பான்
துணை நிற்பான்
நண்பன் !

பகையை எதிர்ப்பான்
பாசம் பொழிவான்
நண்பன் !

உதவிகள் செய்வான்
உணர்வில் கலந்தவன்
நண்பன் !

உதிரமும் தருவான்
உயிரையும் காப்பான்
நண்பன் !

நேரம் செலவழிப்பான்
நேர்வழி நடந்திடுவான்
நண்பன் !

கணக்குப் பார்க்காமல்
செலவுகள் செய்வான்
நண்பன் !

பெற்றோரிடம் பேசாததையும்
பேசி மகிழ்வான்
நண்பன் !

மனம் திறந்து பேசுவான்
மகிழ்ச்சி தருவான்
நண்பன் !

விட்டுக் கொடுப்பதில்
கெட்டிக்காரன்
நண்பன் !

விழாமல் என்றும்
முட்டுக் கொடுப்பவன்
நண்பன் !

தவிக்க விடாமல்
தந்து உதவுவான்
நண்பன் !

தேவை என்றால்
கேட்டும் பெறுவான்
நண்பன் !

இளமையில் மட்டுமல்ல
முதுமையிலும் தொடருவான்
நண்பன் !

அறிவில் சிறந்தவன்
ஆறுதல் தருபவன்
நண்பன் !

ஏணியாக இருப்பான்
தோணியாவும் இருப்பான்
நண்பன் !

எதிர்பார்ப்பின்றி உதவிடுவான்
எந்த நேரமும் காத்திடுவான்
நண்பன் !

உலகில் உயர்வானவன்
உள்ளம் கவர்ந்தவன்
நண்பன் !

தவறைத் தட்டிக் கேட்பான்
சரியைப் பாராட்டி மகிழ்வான்
நண்பன் !

அறியாததை அறிய வைப்பான்
தெரியாததைத் தெரிய வைப்பான்
நண்பன் !

துன்பத்தில் துணை நிற்பான்
இன்பத்தில் பங்கு பெறுவான்
நண்பன் !

வாழ்நாளில் அதிகம்
உடன் இருப்பான்
நண்பன் !

அறச்சீற்றம் கற்ப்பிப்பான்
அஞ்சாமை போதிப்பான்
நண்பன் !

இணை இல்லை
இவ்வுலகில்
நண்பன் !
 


 




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்