ஹைக்கூ !
கவிஞர் இரா.இரவி
தெருவெல்லாம்
முழக்கம்
தமிங்கிலம் !
தொடங்கினர்
ஒப்பாரி
இறக்கும்முன்பே !
உதவவில்லை பெற்ற மகன்
உதவியது
ஒய்வு ஊதியம் !
மறந்தான் வளர்த்த மகன்
காக்கின்றன
வளர்த்த மரங்கள் !
குடிக்காதீர் அன்று
குடித்துவிட்டு வாகனம்
ஓட்டாதீர் இன்று !
சுகம் காணுகின்றனர்
சும்மா இருப்பதில்
சோம்பேறிகள் !
பிறரைக் காதிலிப்பது பின்பு
முதலில் காதலி
உன்னை !
நிறைந்து வழிகின்றன
குறைகள்
குறை தீர்க்கும் நாளில் !
அல்லாடுகின்றனர்
அடிப்படைத் தேவைகளுக்கு
மக்கள் !
வீணாய் கலக்காது கடலில்
போராடிப் பெற்ற
காவிரி !
இயற்கைக்கு இருக்கும் கருணை
இருப்பதில்லை
மனிதர்களுக்கு !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|