ஹைக்கூகள்

கவிஞர் பாண்டிய ராஜ்


சாலையின் குறுக்கே
ஆரவாரம் அற்று கடக்கிறது
ஒரு இறகு

தென்னை தோட்டம்
எங்கும் நிறைந்தபடி
சொட்டு நீர் பாசனம்

சாளரத்தை திறக்க
அனுமதி இன்றி நுழைகிறது
துர்நாற்றம்

ரத்தின் அடியில்
வலுவிழந்து கிடக்கிறது
முறிந்த கிளை

தொடர் வண்டி பயணம்
விட்டு விட்டு கிடைக்கிறது
தூய காற்று

டவுள் சன்னதி
காவலுக்கு
கனமான பூட்டு

சையை துறந்த புத்தர்
அழகாகவே இருக்கறது
அவர் சிலை

ரம் நடும் விழா
சிறப்பு விருந்தினர்
மரவியாபாரி

பால் காரன் வீட்டில்
பசியோடு உறங்குகிறது
கன்று

மாலை நேரம்
உரசிவிட்டு போகிறது
குளிர்ந்த காற்று

ச்சை இலை
ஊஞ்சாலாடுகிறது
வெட்டி வீழ்த்திய மரத்தில்

லேசான தூரல்
சிறுக சிறுக பெருகுகிறது
காற்றில் மண் மனம்

பாசாவின் கடைக்கு
வந்து போகிறது
முருகன் பட விபூதி பொட்டலம்

ள்ளலார் வீதியில்
வளர்ந்து இருக்கிறது
தொட்டியில் செடி

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்