தென்றலே நீவந்து செப்பு

கவிஞர் இனியன், கரூர்


ன்றே அறவழியில் நண்ணி இருமனமும்
ஒன்றியே வாழ்வதுதான் ஒப்பற்ற இல்லறமாம்
அன்றில் பறவையாய் அன்புடன் வாழ்நெறியைத்
தென்றலே நீவந்து செப்பு.

ன்றொடு தீதும் பிறர்தர வாரா;ஆம்
அன்றே கணியன் அழகாய் உரைத்தனன்
இன்றும் அதையுணரா இத்தரை மாந்தர்க்குத்
தென்றலே நீவந்து செப்பு.

பொன்றாப் புகழைப் பெறுதல் இயலும்நாம்
ஒன்றி உணர்வுடன் ஓர்வினை ஆற்றிடின்
வென்றி அடைய வெறும்பேச்(சு) உதவாது
தென்றலே நீவந்து செப்பு.

ன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல(து)
அன்றே மறப்பது நன்றுகொல் – அன்பெலாம்
குன்றாது வாழ குறட்பா இதுவென
தென்றலே நீவந்து செப்பு.

ன்றே நடக்கும் நலம்நாடிச் செய்திடின்
நன்றே நடக்கும் நவில்பொய் அகற்றிடின்
நன்றே நடந்திட நாவை அடக்கென்று
தென்றலே நீவந்து செப்பு.



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்