நிர்வாணம்‏

பிரபுநிர்வாணமே நிஜம்
நிஜமென்பது நிர்வாணம்
நாம் தொலைத்துவிட்ட நிர்வாணம்
ஆதமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்து
மாயக்கனியை உண்ணும் வரை
அனுபவித்த அம்மணம்

இப்போது எங்கே அது?!?!?
நிர்வாணமாய்த்தானே பிறந்தோம்
இப்போது எங்கே அது?!?!?

காலத்திற்கு ஏற்ப ....
கலாசாரத்திற்கு ஏற்ப ....
வயதிற்கு ஏற்ப ....
வசதிக்கு ஏற்ப ....
படிப்பிற்கு ஏற்ப ....
பதவிக்கு ஏற்ப ....
இப்படி பல ஆடைகள் போட்டு
மறைத்து வைத்தயென்
நிர்வாண முகத்தைத் தேடினேன்

ஆடைகளே தோலாய் மாறியிருந்தது !!!!!!
குருதிகசிய குருதிகசிய
கிழித்தெறிந்தேன் ..

ஆகா...!
அழகான என் நிர்வாணம்
என் கண்களுக்கு தெரிகிறது
என் முகமே எனக்கு அந்நியமாய் !!!


priyamudan.prabu83@gmail.com