எப்பொழுதேனும் கிடைத்துவிடும்; அது

வித்யாசாகர், குவைத்

பேருந்தின் ஜன்னலோர இருக்கை
ஒரு
கனவாகவே என் காலம்;

முதன் முறை அமரும் போது
அப்பா
பாதுகாப்புக் கருதி நடுவே அமரவைத்தார்;

ற்று வளர்ந்துவிட்ட போது
தம்பி
கேட்பான் விட்டுவிடுவேன்

ன்னும் சற்று வளர்ந்ததும்
நண்பன்
'எனக்குடா' என்பான் விட்டுவிடுவேன்

பிறகு காதலி வந்தாள்
காதலியும்
ஜன்னலோர இருக்கையும் கனவானது

னைவி வந்தாள்
என்னால்
மறுக்கவே முடிந்ததில்லை

ன்றும் அப்படி தான்
மனைவி
மகள் நான் - மூவரும் பேருந்தில் ஏறினோம்
மகள்
ஓடி சென்று ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து
வானம்
பார்த்தாள்,
மனைவி
நடுவில் அமர்ந்துக் கொண்டாள்,
நான்
 கடைசியில் அமர்ந்து - மகளை பார்கிறேன்
எனக்கு
முன்பின் இருக்கையின் ஜன்னலோரம்
வெறுமனே
இருந்தது!


vidhyasagar1976@gmail.com