சாமியே ஐயப்போ - ஐயப்போ சாமியே

வித்யாசாகர், குவைத்

சாமியே ஐயப்போ
ஐயப்போ சாமியே
சாமி கந்தக தோம் தோம்
ஐயப்ப கந்தக தோம் தோம்
சாமி சரணம்
ஐயப்ப சரணம்
சரணமெழுப்பிக் கொண்டு
நடந்தது சாமி
சாமியின் கால்களில்
ஒட்டிய அழுக்கு - விடவேயில்லை!

சுத்தமான
நாற்பத்தோரு நாள் விரதத்தில்
சாமியானேனோ இல்லையோ
மனிதனானேன்!

எல்லோரும்
சாமி சாமி என்றழைக்கிறார்கள்
நானும் விட்டுவிட்டேன்;
உள்ளிருக்கும் சாமியை
கத்தியழைத்தாவது -
வெளியே கொண்டு வரட்டும்!

வீடு சுத்தம்
உணவு சுத்தம்
பழக்க வழக்கங்கள் சுத்தமென
இருந்த நாற்பத்தோராவது நாளில்
மனிதருக்குள்ளிருந்த -
சாமியை கண்டேனோ இல்லையோ
சாமிக்குள் இருக்கும் மனிதம் தெரிந்தது!
 


vidhyasagar1976@gmail.com