தெருக் குழாய்

வித்யாசாகர

குடிசைவாசிகளின் தெருக்கடவுள்
உயிர் வாழ்தலுக்கான –
ஏழைகளின் முதல் உணவு!

வாழ்ந்ததற்காகான அடையாளத்தில்
மறக்க மறுக்கும் –
நினைவுச் சின்னம்!

வந்து போவோருக்கு
தாகம் தீர்க்கும் -
எந்திர தன – கொடையாளி!

வக்கற்ற அரசின்
கட்டளைக்கிணங்கி இயங்கும் -
பகுதி நேர ஊழியன்;

கஞ்சு சோறும் கால்ரூபாய் ஊறுகாயோடும்
வயிறு நிறையும் மருந்து போட்ட
குவளை நீர்!

காதலர்கள் காலையில்
விழித்ததும் சந்திக்கும் –
முதலிடம்!

குடும்பத்து குத்துவிளக்குகள்
வாய் வாள் வீசி -
வீட்டு அசிங்கத்தை தெருவில் இரைக்கும் போர்க்களம்!

இதலாம் தாண்டி,

யார் யாரோ வந்தாகிவிட்டது
ஆண்டாகிவிட்டது
மகன் பிறந்து பேரன் பிறந்து
கொள்ளுப் பேத்தி அதோ குழாயடியில் நிற்கிறாள் –

சொந்தமாக ஒரு வீடும் ஒரு குழாயும்
கனவாகவே நகர்கிறது – நிறையப் பேரின் காலம்;

தெருக்குழைக்கு ஆதலாம் தெரிவதேயில்லை
தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது!!


vidhyasagar1976@gmail.com