ஒரு 'செல்'லம் போச்சி

வலங்கை இனியன்

கருவறையில் கச்சேரி ஆரம்பம்
அடிக்கடி கேட்கும் செல்பேசி சிணுங்கல்களில்
சிங்கார தாள லயம்
எட்டி உதைத்து ஏழே மாதத்தில்
எட்டி பார்த்தது கரு....!

தாய் கேட்டாள் ஏன் அவசரம்
ஆர்வமாய் உலகைக் காணவாவென்று?!

குட்டி சொன்னது தாய் தலையில் 'குட்டி' சொன்னது
உன் மூளையில்லா செயலால்
என் மூளை வளர்ச்சியில்லை
விழியும் விரியவில்லை
கேள்திறனும் சரியில்லை.....

உன் அளவில்லா செல்பேச்சின் விளைவால்
இத்தனையும் விளைந்ததடி - இனியேனும்
விஞ்ஞானத்தின் அளவையும் அறிவையும்
பாதுகாப்பாய் பயன்படுத்து
என் தம்பி தங்கைகளுக்காவது....
நான் போகிறேன்.......
siva.karthikeyan3@gmail.com