நகரத்து வாழ்க்கை

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.

நெளிந்து வளையும்
தெருக்கள் தோறும்..
அடர்த்ந்த மனிதப் புழுக்கள்
வாகனப் புகை விழுங்கி
வாழ்க்கை கோரமுகம் எடுத்து
ஓடி ஒளிந்து
தூசுகளுக்குள் காணாமல்
போய் விடும்..
எந்த நிமிசமும்
கனவு காண முடியாத
விஷமமும்
நச்சித்தன்மையும்..
வெளியெங்கும் நிரம்பி வழிகிறது
நகரத்து வாழ்க்கையில்..


armfarveen@gmail.com