எழுதுகோல்

முனைவர் ச.சந்திரா

அஃறிணையாய் இருப்பினும் உயர்திணையின்
விதியை நிர்ணயிக்கும் ஒப்பற்ற பிறவி !
மானிட சிந்தனைகளை எழுத்துக்களாய்
செதுக்கும்போது நீ ஒரு சிற்பி !
ஒரு ரூபாய்க்கும் வாங்கலாம்; உன்னை
ஓராயிரம் ரூபாய்க்கும் வாங்கலாம்.
உயிரிருக்கும் இறுதி விநாடி வரை
உழைக்கும் உன்னத தொழிலாளி !
பரிசுக்கும் பாராட்டுக்கும் முன்
நாயகனாய் நிற்கும் நீ
நீதிமன்ற்ங்களில் மரணதண்டனைப்
பதிவிற்குத் துணைபோவது ஏனோ ?neraimathi@rocketmail.com