யாருக்காச்சும் தெரியுமா??!?!

பிரியமுடன் பிரபு

அதிகாலை எழுந்து
குளித்து, கூட்டி பெருக்கி
கோலம் போட்டு..
கன்னி பெண்னையும்
அம்மான்னு கூப்பிடும்
கறவ மாட்டுக்கு தீனி போட்டு...
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும்
அனுசரனையா இருந்து..... ம்ம்ம்
இப்படி
அழகாத்தானே இருந்துச்சு என் வாழ்க்கை!?!?

இப்ப என்னாச்சு ?!?
யாருக்காச்சும் தெரியுமா??!?

பத்து குட(ம்)முன்னாலும்
பதறாம தூக்குவேன் - இப்ப
ஒத்த காலிகுடம்
கனக்குதய்யா எனக்கு!!

நா(ன்) புள்ளி வச்சு கோலம் போட்டா..
வழியில போறவுகயெல்லாம்
வாய் பிளந்து பா(ர்)ப்பாக - ஆனா இப்ப
கோலம் ஒருபக்கம் இருக்க
புள்ளி மட்டும் நிக்குதய்யா ஒத்தையில
என்னை போல

கலியாணம் கட்டி
அஞ்சு நாளுதானே ஆச்சு ?!?!
வேல பாக்குற ஊருக்கு போக
கட்டின என்னையும்
கைபிடிச்சு கூப்புட்டீக

'புது குடிதனத்துக்கு இது
ஆகாத மாசமடா - அதனால
அம்பது நாள் போனபின்னே
அழைச்சுகிட்டு போகலாம் ' - என உன்
ஆத்தா சொல்ல கேட்டு

பிடிச்ச கையை விட்டுபுட்டு
வண்டியேறி போனிகளே!!

வண்டி சக்கரத்துல மாட்டின
கோழி குஞ்சா -என் மனசு
நசுங்கி போன சேதி
யாருக்காச்சும் தெரியுமா??

இன்னும் அம்பது நாள் இருக்கே?!?!?

வாரம் ஒருக்கா
வண்டி புடிச்சு வருவீக - ஆனாலும்
ஆச ராசாவின் அழகு முகத்த
ஆச தீர பார்க்கும் முன்னே
அடுத்த நாள் வந்திடுதே !!?
இந்த கட்டைல போற
கடிகாரத்த நிறுத்திவைக்க
யாருக்காச்சும் தெரியுமா??!?!
priyamudan.prabu83@gmail.com