ஹைக்கூ
கவிஞர் இரா.இரவி
முட்கள் இன்றி
காட்டியது நேரம்
நவீன கடிகாரம் !
ஆடம்பரச் செலவால்
வந்தது பற்றாக்குறை
அவசிய செலவிற்கு !
பகைவர்
இல்லாத வாழ்வு
பேரின்பம் !
விழுங்கியது
நேரத்தையும் நேர்த்தியையும்
திறன்பேசி !
சுறுப்பானவர்களையும்
சோம்பேறியாகியது
அலைபேசி !
வாய்ப்புகள் இருந்தும்
தவறு செய்யாதவன்
பண்பாளன் !
விரும்புவதில்லை
அறிவுரை
இளைய தலைமுறை !
வேண்டாம் ஆணவம்
உண்டு உலகில்
வல்லவனுக்கு வல்லவன் !
மனிதனில் கண்டுபிடிப்பில்
மிக மோசமானது
மதம் !
இரண்டுமே தவறு
அதிகார குணம்
அடிமை மனம் !
ஆணவம்
வழிவகுக்கும்
அழிவிற்கு !
மிகவும் மதிப்பானது
விலை இல்லாதது
அன்பு !
என்னை வழிபடுவதை விட
என் வழிநடப்பது நலம்
புத்தரின் ஆசை !
பெரிய சிலையில்
எளிமையில் இருக்கிறார்
புத்தர் !
ஆரவாரத்தில் அல்ல
அமைதியில் இருக்கிறார்
புத்தர் !
புரிந்து கொள்ளுங்கள்
எறும்பைக் கூட மிதிக்க கூடாது
என்பது புத்தம் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|