எழுக பெண்மை!

லறீனா அப்துல் ஹக்

எழுவேன் பேரலையாய்!
வெடித்துக் கிளம்பும்
பூகம்ப அதிர்வெழுப்புவேன்!
சுற்றிச் சுழன்று
ஆங்காரமாய் ஒரு புயலாவேன்!

சமூகச் சாக்கடையை
அடித்துக் கொண்டோடும்
ஊழிப் பிரளயமாவேன்,
அழிப்பதற்கன்று – எம் மாந்தர்
விழிப்பதற்காய்!

வாழ்வேன் துணிவாய் - நெருங்கிவரும்
மரணத்தின்
கடைசி நிழல் எனைத்
தொட்டுவிடும் வரை
வாழ்வேன்,  வாழ்வினைத்
துய்ப்பேன்,  நான்!
காற்றாய்ப் பறப்பேன்!
சிகரங்கள் தொடுவேன்!
எனக்காய் வாழ்வேன்
இறுதிவரை!.
lareenahaq@gmail.com