சாதி வெறி ஒழிய

ஆ.முத்துவேல்

நம்
தாயின் கருவறைலிருந்து பிறந்தபோது,
நாம்
அறிந்ததில்லை,  நம்
ஜாதியின் பெயர் ? ...

நம்
உச்சி முதல் பாதம்வரை,
நாம்
அணிந்திருக்கும் ஆடை, அணிகலன்களில்,
கண்டதில்லை , நம் ஜாதியின் பெயர் ....

நாம்
உண்ணும் உணவின் அரிசியில் ,
எழுதி இருந்ததை பார்த்ததில்லை,  நம் ஜாதியின் பெயர் ? ....

நம் மூச்சு காற்று,
நம் ஜாதி பெயரை சொல்லிகொண்டே,
நம் நாசிக்குள் நுழைவதில்லை ..

தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த காரணத்தால்,
பருகும் தண்ணீர்,  அனைவரின்
தாகத்தை
தணிக்காமல் விட்டதில்லை ....

ஜாதிகளின் ஏற்ற தாழ்வுகளை பார்த்து ,
மழைநீர்,
பூமிக்கு வருவதில்லை ..

தாழ்த்தப்பட்ட ஜாதினரின் கண்களுக்கு மட்டும்,
அகண்ட வானம்,
அகப்படாமல் மறைந்ததில்லை ...

நாம் இறந்தபின்,
சுடும் நெருப்பும்,
ஜாதிகளின்,  ஏற்ற தாழ்வுகளை,  பார்த்து,
சுடாமல் இருந்ததில்லை ...


 

muthuvel_a2000@yahoo.co.in