கவிதையும் அவனும்

லறீனா அப்துல் ஹக்

அந்தக் கவிதையை அவனுக்கு
வாசிக்கத்
தெரியவில்லை.
அவனைப்
பொறுத்தவரை
"அது"

மெய்யெழுத்தும்
உயிரெழுத்தும்
உயிர்மெய்யெழுத்தும்
கொண்டு
குறுக்கமாய்
... நெடுப்பமாய் - சில
வரிகள்
மட்டும்தான்!

உணர்வுகளை இழைத்திழைத்து
உயிர்ப்பைப்
பெய்து வைத்த
ஜீவ
கவிதையதன்
சிலிர்ப்பை
குதூகலத்தை
செல்லச்
சிணுங்கலினை
தவிப்பை
கண்ணீரை
வலியை
பரவசத்தை
இப்படி
எதனையுமே
அவனறிய
நியாயமில்லை;
மீட்டத்தெரியாதவன்
விரலிடுக்கில்
வீணையாய்க்
கிடந்தது
கவிதை
.

அதில் உள்ளார்ந்து பொதிந்திருக்கும்
அழகியல்
அனுபவத்தை...
உட்பொருள்
தந்துநிற்கும்
எண்ணரும்
இன்சுவையை
ரசித்துத்
துய்ப்பதற்கும்
இன்பத்தில்
தோய்வதற்கும்
வாய்க்குமோ
, பாவம்!
அவனோ
வெறும் மனிதன்.
அவனுக்கு
அக்கவிதை
வெற்றுக்
காகிதத்தில்
ஒருசில
எழுத்துக்கள், இதில்
ரசமென்ன
! ரசனையென்ன!lareenahaq@gmail.com