வெளிநாட்டு மாப்பிள்ளை..!

இணுவை சக்திதாசன் - டென்மார்க்

பட்டதாரிக்கேற்ற..
படித்த மாப்பிள்ளை எத்தனையோ
வந்தும்
தட்டிக் கழித்தபடி
வெளிநாட்டு மாப்பிள்ளைதான்
வேணுமென்று ஒற்றைக்காலில்
நிக்கிறாள் பெட்டை

நாடு கெட்டுப் போய் கிடக்கிறது
ஊர்விட்டு ஊர்போய்
ஒன்று கிடக்க ஒன்று
நடந்திட்டுதென்றால்
பதட்டப்பட்டார் தந்தை.

பதட்டம் எதுவுமே இல்லாமல்
பௌவ்வியமாக....
நான் குழந்தையில்லை குமர் என்றாள்

மௌனங்கள் நீள ...
குறிப்புக்களோடு வரிசையில்
நின்றனர் புறோக்கர்கள்.
எஞ்சினியர் எக்கவுண்டன் டொக்டரென பட்டத்துக்கேற்ற விலைப் பட்டியலுடன்
ஒட்டித்தான் கிடந்தன ...
மாப்பிள்ளைகளின் போட்டோக்களும்.

தட்டிக் கொண்டே ...
வந்தாள் போட்டோக்களை
தட்டுப்பட்டது
புன்னகையுடன் ஒரு சுருள் தலையன்!
பட்டமும் அதிலில்லை

விலையுமதிகமில்லைத்தான்
விட்டத்தை பார்த்தபடி....

விக்கித்து போய் நின்றார் தந்தை
வில்லங்கமேதும் இருக்குமோ?

சட்டுப்புட்டென்று நடந்தது
கலியாண ஏற்பாடு
மாப்பிள்ளை டென்மார்க் சிற்றிசனாம்
விசாவும் வந்தது கெதியில ...
பறந்து வந்திறங்கினாள் பொம்பிளை
கொப்பனேக்கன் எயாப்போட்டில ...

பூக் கொத்துடன் மாப்பிள்ளை
முன்னிற்க
ஏக்க விழிகளுடன் தேடினாள் ...

அறிமுகங்கள் செய்து... தன்னையடையாளப்படுத்தினார்
மாப்பிள்ளை
முன்பிருந்ததாம் முடி
இப்ப போட்டோவில் மட்டும் தானாம் முன்பில்லையாம் குடி
இப்ப முடியில்லாக் கவலையில் தானாம்


sakthy-@hotmail.com