பிரிவாற்றாமை

மன்னார் அமுதன்

பாலை நிலத்தினிலே
பனைமர நிழல் போலே
பணியிடைப் பொழுதினிலே
பாவையே உன் நினைப்பு

சோலைவனம் பூப்பூக்கும்
செழிப்பான தேன்பூக்கள்
செவ்விதழில் மலர்கிறதே
சேவையோ வேறிடத்தில்

அன்பே உனைக் காண
ஆசைகள் இருந்தாலும்
வெள்ளி பூத்தால் தான்
விரைவாக நான் வரலாம்

கோல மயிலே – என்
கொண்டைக் கிளியே நீ
அருகிருந்து தருவதானால்
ஆலகாலமும் உண்பேன்.


amujo1984@gmail.com