செத்துப் போகும் வாழ்க்கை

மன்னார் அமுதன்                   

கூடா நட்பால்
குறைந்து விடுகிறது
சின்னவனின் மதிப்பெண்கள்

நாகரிக மோகத்தில்
ஸ்தம்பித்துக் கிடக்கிறது
'பெரியவளின் பொழுதுகள்'

சின்னத் திரைக்குள்
சுழன்று திரிகிறது
'மனைவியின் கடிகாரம்'

வாழ்வியல் சீர்திருத்தம்
பெரும் புலம்பலாய்க் கழிகிறது
'குடிகாரத் தந்தைக்கு'

ஒருவரை ஒருவர்
சுட்டிக் கொள்கையில்
செத்துப் போகிறது வாழ்க்கை
amujo1984@gmail.com