ஆயுதபூசை

தமிழ்நேசன், கரிக்கலாம்பாடி

இன்று எங்கள் ஊரில்
ஆயுதபூசை
மேல்நாட்டாரின்
அறிவியலால்
கண்டுபிடிக்கப்பட்ட
கருவிகள்
அனைத்தும்
கழுவப்பட்டன.!

எங்கள் அலுவலகக்
கணிப்பொறியும்
தப்பவில்லை!
மஞ்சளோடும்
குங்குமத்தோடும்
மாலைகளும்
சூட்டப்பட்டன.!
இனமானம்
இழந்த எம்

தமிழரின் மூளைஆயுதம் மட்டும்
தூசுதுடைக்கப்படாமல்
....
அட்டகாசமாய்
நிறைவேறியது
ஆயுதபூசை
!

 

arasezhilan_1964@yahoo.co.in