சொற்களை உதிர்க்கும் உதடுகள்

ச.கோபிநாத், சேலம்.கார்மேகங்களினூடே
விரையும் மழையையொத்தபடி
பிறிதொன்றைக் குறித்த
சிந்தனையேதுமில்லாமல் உதிர்க்கின்றன
உனதுதடுகள்
சொற்சுமைகளை.
பாதிப்பேதும் நிகழாவண்ணம்
ஓடி ஒளித்து வைக்க பழகிக்கொண்டேன்
உன் மீதான என் நேயத்தை
குஞ்சுகளை காக்கும்
தாய்ப்பறவையென


kalaithilagam.gopinath@gmail.com