மதுரை பாபாராஜ்யின் கவிதைகள்

வெண்பாவும் வெங்காயமும்

வெண்பா எழுதுகின்ற நேரத்தில் வெங்காயம்
கொஞ்சம் கடையிலே வாங்கிவா என்றேதான்
சொன்னாள் மனைவிதான்! வெண்பாவைத் தள்ளிவைத்து
வெங்காயம் வாங்கிவந்தேன் இன்று.

உறிக்க உறிக்க விழிகளில் கண்ணீர்
தெறித்தே எரிச்சலுடன் ஓடும் -- கறியுடன்
சாம்பாரில் சேர்த்தால் சுவைமணக்கும்! நாமணக்க
வேண்டுமென்றே நாடும் மனம்.


உலகளந்த பெருமாள் அன்று! உலகை அளக்கும் நவீன பெருமாள் இன்று!

வரிச்சுமை ஓரடி! விண்பரப்பை முட்டும்
விலைவாசி ஈரடி! மக்களை வாட்டும்
நிலைகளோ மூன்றாம் அடியென்றே வைத்தே
அளக்கும் உலகை அரசு.

 

spbabaraj@gmail.com